வறண்டு கருமையடையும் உதடுகளுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை லிப் பாம் முறைகள்!

ரசாயன லிப் பாம்களுக்கு பதிலாக தேன் கலவையால் உதட்டு கருமை, வறட்சி, வெடிப்பு நீங்கி இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் பெறும் முறைகள்
lip-balms
lip-balms
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

றண்ட வெயில் காலத்தில் சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக்கு களைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும் உதடுகள் எளிதில் வறண்டு, கருமையடைந்து விடுகின்றன. இதற்காக மார்க்கெட்டில் விற்கும் செயற்கையான லிப் பாம்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே இருக்கும் தேனைப் பயன்படுத்தி, அழகிய பட்டுப்போன்ற உதடுகளைப்பெற உதவும் 5 சிறந்த இயற்கை லிப் பாம் செய்முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தேன் + தேங்காய் எண்ணெய்:

வெயிலில் அலைந்துவிட்டு வரும்போதும், ஏசி அறையில் அதிக நேரம் இருக்கும்போதும் உதடுகள் வறண்டு சுருங்கிப்போவது இயல்பு. இதைக் குணப்படுத்த அரை ஸ்பூன் சுத்தமான தேனுடன், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை இரவில் படுப்பதற்கு முன்பு உதடுகளில் தடவி வரவேண்டும். தேங்காய் எண்ணெய் உதட்டின் வறண்ட தோலை மென்மையாக்கும்; தேன் உதட்டின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். உதட்டு வெடிப்புகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

தேன் + சர்க்கரை:

உদடுகளில் படியும் இறந்த செல்களை முறையாக நீக்கினாலே, உதடுகள் தங்களின் இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற்றுவிடும்.

ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரை மற்றும் மூன்று துளிகள் எலுமிச்சைசாறு சேர்க்கவும். இந்தக் கலவையை உதடுகளில் தடவி, விரல் நுனியால் மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இது உதட்டின் மேலிருக்கும் கருமையை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச்செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வாட்டும் குளிரிலும் மின்னும் மேனி: இதோ உங்களுக்கான அழகு ரகசியங்கள்!
lip-balms

தேன் + பசு நெய்;

சமஅளவு தேன் மற்றும் தூய்மையான பசு நெய்யைக் கலந்து, ஒரு சிறிய டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் அல்லது உதடுகள் உலர்ந்திருக்கும்போது, இந்தக் கலவையைச் சாதாரண லிப் பாம் போல உதட்டில் தடவிக்கொள்ளலாம். நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உதட்டின் கருமையைப் போக்கி, இயற்கையான சிவப்பழகைக் கொடுக்கும்.

தேன் + கற்றாழை ஜெல்:

வெயிலின் தாக்கத்தால் உதடுகள் கருத்துப் போவதைத் தடுக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கற்றாழையின் குளிர்ச்சியும், தேனின் மருத்துவக் குணமும் இணையும்போது அது உதடுகளுக்குக் கவசம் போலச் செயல்படுகிறது.

ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெயிலில் செல்வதற்கு முன்னரோ அல்லது மாலையில் வீட்டிற்கு வந்த பின்னரோ இதைத் தடவிக்கொள்ளலாம். இது சூரியக் கதிர்களால் ஏற்படும் உதட்டு எரிச்சலைக் குறைத்து, இதழ்களை எப்போதும் மென்மையாக வைத்திருக்க உதவும்.

தேன் + பாதாம் எண்ணெய்;

பாதாம் எண்ணெயில் வைட்டமின் 'ஈ'  நிறைந்துள்ளது. இது தேனுடன் சேரும்போது உதடுகளுக்குத் தேவையான முழுமையான ஆரோக்கியத்தைத் தருகிறது. அரை ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், அரை ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் (பன்னீர்) சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!
lip-balms

இந்த லிப் பாமை தினமும் பயன்படுத்தி வந்தால், உதடுகள் சுருக்கம் இல்லாமல் பளபளப்பாக மாறும். குறிப்பாக, உதடுகள் அடிக்கடி வெளிறிப்போய், ஜீவனற்றுக் காணப்படுபவர்களுக்கு இது சிறந்த பொலிவைத் தரும்.

உதடுகளின் ஆரோக்கியத்திற்கு இந்த இயற்கை லிப் பாம்களில் உங்களுக்குப் பொருத்தமான ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், உடலின் உட்புற ஈரப்பதத்தைத் தக்கவைக்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.

logo
Kalki Online
kalkionline.com