
ஷீட் மாஸ்க் (Sheet Masks) ஆனது கொரிய சரும பராமரிப்பில் இருக்கும் முக்கியமான அழகு முறை ஆகும். இது பல்வேறு வகை சரும பிரச்னைகளை எளிதாக நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்குகளானவை சக்தி வாய்ந்த சீரம்களில் நனைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் அனைத்து ஷீட் மாஸ்க்குகளும் ஒரே மாதிரி சமமாக உருவாக்கப்படுவதில்லை. ஷீட் மாஸ்க் பயன்படுத்த நீங்கள் முடிவு செய்திருந்தால் உங்கள் சரும வகைக்கேற்ப, ஷீட் மாஸ்க்குகளில் என்னென்ன சரும பராமரிப்பு பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். இந்த விவரத்தை நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கேற்ற சரியான ஷீட் மாஸ்க்-ஐ தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு உரிய ஷீட் மாஸ்கை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஆறு யோசனைகள் இதோ.
1- வறண்ட சருமம்:
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், அதை ஈரப்பதமாக வைக்க ஹைலூரோனிக் ஆசிட் (hyaluronic acid) மற்றும் கிளிசரின் கொண்ட ஷீட் மாஸ்க்குகளை முயற்சிக்கவும். இவற்றில் இருக்கும் சரும பராமரிப்பு பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, சருமத்தை மென்மையாக மாற்றும்.
2- எண்ணெய் பசை சருமம்:
உங்கள் சருமம் எண்ணெய் பசை நிறைந்ததாக இருந்தாலோ அல்லது முகத்தில் சில பகுதிகள் வறண்டதாகவும், மற்ற பகுதிகள் அதிக எண்ணெய் பசையுடனும் இருந்தாலோ, உங்கள் சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த விரும்பினால், நீங்கள் சார்கோல் அல்லது கிளே மாஸ்க்குகளை முயற்சிக்க வேண்டும். இவை சருமத்தை சேதப்படுத்தாமல் துளைகளை சுத்தம் செய்கின்றன.
3- சென்சிட்டிவான சருமம்:
உங்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், கடுமையான பொருட்களைப் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் கற்றாழை, கெமோமில், காலெண்டுலா அல்லது கிரீன் டீ கொண்ட ஷீட் மாஸ்க்குகளை தேர்வு செய்ய வேண்டும். அதே போல எரிச்சலூட்டும் கடுமையான ரசாயனங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கொண்ட தயாரிப்புகளை சருமத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
4- சீரற்ற சருமம்:
உங்களுக்கு சீரற்ற சருமமாக (skin tone) இருந்தால், வைட்டமின் சி மற்றும் நியாசினமைட் கொண்ட ஷீட் மாஸ்க்குகளை முயற்சிக்கலாம். இந்த வகை ஷீட் மாஸ்க் மந்தமான சருமத்தை பிரகாசமாக்க மற்றும் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளைக் குறைக்க சரியான தேர்வாக இருக்கும்.
5- முதிர் சருமம்:
உங்கள் சருமம் மிகவும் முதிர்ச்சியாக காட்சியளிக்கிறதா? நீங்கள் இளமையாகத் தோன்ற விரும்பினால், வயதாகும் அறிகுறிகளை தடுக்கும் அல்லது குறைக்கும் ஷீட் மாஸ்க்குகளை முயற்சிக்கலாம். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த, சுருக்கங்களை குறைக்க கொலாஜன், ரெட்டினோல் மற்றும் பெப்டைட்ஸ் போன்ற பொருட்கள் அடங்கிய ஷீட் மாஸ்குகளை பயன்படுத்தலாம்.
6- முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம்:
முகப்பருக்களால் பாதிப்புக்குள்ளானது உங்கள் சருமம் என்றால், சாலிசிலிக் ஆசிட், witch hazel மற்றும் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றைக் கொண்ட ஷீட் மாஸ்குகள் சிறந்ததாக இருக்கும். இந்த பொருட்கள் வீக்கத்தைத் தணித்து, சரும வெடிப்புகளை எதிர்த்து போராடுகின்றன. சரும துளைகள் அடைபடுவதை தடுக்க ஹெவியான எண்ணெய்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் கொண்ட ஷீட் மாஸ்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.