

புடவைக்கேற்ற பிளவுஸ் சிம்பிளாக இருந்த காலம் போய் தற்போது புடவை விலையைவிட ஜாக்கெட் விலைதான் அதிகமாக, வேலைப்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. மணப்பெண்ணுக்கு ஜாக்கெட் ஆரி ஒர்க் வைத்து தைத்துக் கொள்ள விரும்புவதைபோல ஒரு திருமணம் மற்றும் எந்த நிகழ்வாக இருந்தாலும் ஏனையோரும் ஸ்பெஷலான புடவையை ஹைலைட் பண்ணி காட்டத்தான் பிரியப் படுகின்றனர். இந்த ஆரி ஒர்க் டிசைன்கள்தான் ரிச்சாக, கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
ஆரி ஒர்க் சிம்பிளான டிசைனிலிருந்து ஹெவி ஒர்க் கொண்ட, விலை உயர்ந்த கற்கள், த்ரெட் வேலைப்பாடுகள் என கண்ணை கவர்கிறது. சிம்பிள் ஆரி வேலைப் பாடுகளை பெரியவர்கள் விரும்புவதை போல ஹெவி ஒர்க், டெலிகேட் டிசைன் கொண்ட வகைகளை மணப்பெண்கள், இளம் பெண்கள் என அனைவரும் விரும்புகின்றனர்.
இவ்வாறு பல்வேறு வகையான கற்கள், குந்தன் டிசைன்கள், த்ரெட் ஒர்க், மிரர் ஒர்க், கோல்ட் சம்கி, கோல்ட், சில்வர் காய்ன்களால் ஆனது என எண்ணற்ற வகைகளில் நம் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு தைத்துக்கொள்ளலாம்.
இவற்றை விழாவில் அணிந்துகொண்டு பிறகு பாதுகாப்பதுதான் பெரிய டாஸ்க். பராமரிப்பு இல்லாத ஆரி பிளவுஸ்களை மறு உபயோகத்திற்கு பயன்படுத்தும் போது பழைய லுக்கில் இல்லாமல் நம்மை வருத்தமடைய வைக்கும். ஆதலால் இந்த வகை பிளவுஸ்களை அணியும் போது பேடட் கப் வைத்து அணிந்துகொள்ள வேண்டும்.
அக்குள் பகுதிகளில் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் பேட் வைத்துக் கொண்டு பின் அணிய வியர்வை வாடையால் ஜாக்கெட் பாழாகாமல் பாதுகாக்கலாம். வியர்வையை பேட் உறிஞ்சிக் கொள்ளுமாதலால் ஜாக்கெட்டில் கறை ஏற்படாது.
பிளவுசை போட்டு விட்டு கழட்டும்போது கவனமாக தலைமுடியில் மாட்டாதவாறு கழட்ட வேண்டும். ஆரி ஒர்க் ல் முடி சிக்கி முடியை எடுக்கும் போது வேகமாக இழுத்தால் த்ரெட்டோ, சம்கி, மிரர் ஒர்க்கோ சேதமடைய வாய்ப்புள்ளது.
அழகான ஒர்க் பிளவுஸில் ஒரு இடத்தில் இந்த மாதிரி நூலோ, மற்ற டிசைனோ கெட்டுவிட்டால் அடுத்து போடும்போது அசிங்கமாக தனித்து தெரியும். எனவே கவனமாக கழட்டி நிழலில் காய விடவேண்டும்.
கறையோ, அழுத்தமான அழுக்கோ இருந்தால் மட்டுமே அலச வேண்டும். அதுவும் சோப் பவுடரோ, சோப்போ போட்டு அலசக்கூடாது. மைல்டான வாஷிங் லிக்விட் உபயோகித்து அலசி உடனே தண்ணீரை வடிய விட வேண்டும். கசக்கி பிழிவதோ, அடித்து துவைப்பதோ கூடாது.
தண்ணீர் வடிந்தவுடன் இலேசாக உதறி நிழலில் காய விட வேண்டும். வெயிலில் எக்காரணம் கொண்டும் போடக் கூடாது. தரமான லைனிங் துணியாக இருந்தால் சாயம் இறங்காது.
நன்றாக உலர்ந்ததும் எடுக்க வேண்டும். காய டைம் எடுக்கும். அப்படியில்லாமல் எடுத்துவிட்டால் அதில் வெள்ளை பூஞ்சாணம் போல படியக்கூடும். நல்ல காற்றோட்டமான இடத்தில் காயவிட்டு உள்பக்கமாக காய்ந்ததை திருப்பி போட்டு நன்கு உலர்த்தி எடுக்கவும்.
ஒர்க் உள்ள பகுதியை வெயிலில் போடாமல் உள்பக்கமாக போட்டு எடுத்துவிட்டு அயர்ன் பண்ணி வைக்கவும். சுருக்கம் இல்லாமல் மிதமான சூட்டில் உள்பக்கமாக அயர்ன் செய்து சூடு ஆறியதும் மடித்து வைக்கவும்.
ஆரி ஒர்க் செய்த பக்கத்தில் நிறைய மடிப்புகள் கொண்டு மடிக்காமல் ஜென்டிலாக ஃபோல்ட் செய்து வைப்பது நல்லது. முடிந்தால் ஸ்டீல் அலமாரியில் வைக்காமல் மர பீரோவில் சாரி கவரில் போட்டு பாதுகாப்பாக வைக்க அணியும் போது எடுக்க சௌகரியமாக இருக்கும். தைக்கும்போதே ரொம்பவும் டெலிகேட் டிசைன்களாக செலக்ட் பண்ணாமல் ரிச்சாக அதேசமயம் நீட்டாக உள்ளதாக தைத்துக்கொள்ள நீண்ட நாட்கள் அதன் லைஃப் நன்றாக இருக்கும்.
ஆரி பிளவுஸ்களை ஆல்டர் செய்யும்போது கவனமாக செய்யவும். தையல் பிரிக்கும்போது டிசைனோ, நூலோ விட்டுப் போனால் கஷ்டம். லூஸ் ஹேர் விடும்போதும் ஒர்க் ல் மாட்டாமல் கவனமாக வைத்துக்கொள்ளவும்.
மொத்தத்தில் ஜாக்கெட் அணிவதைவிட ஆரி பிளவுஸ், ஒர்க் பண்ணிய டிரெஸ்களை பாதுகாப்பாக கையாள்வதே அதன் லைஃப் ஐ நீண்ட நாட்களுக்கு வர செய்யும்.
விலை உயர்ந்த ஆரி ஒர்க் பிளவுஸ்கள் வியர்வையாலும் தவறான பராமரிப்பாலும் பாழாகாமல், பல ஆண்டுகள் புதியது போன்ற மிளிர்வுடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் நடைமுறை குறிப்புகளை வாசகர்கள் அறிந்துகொள்வார்கள்.