மீண்டும் டிரெண்டிங் ஆகும் பேகி ஃபேஷன்: 90s ஸ்டைலில் கலக்கும் இன்றைய இளைஞர்கள்!

வசதியும் ஸ்டைலும் இணைந்த தளர்வான உடைகள் மூலம் உங்கள் ஆளுமையை அழகாக வெளிப்படுத்துங்கள்.
பேகி ஃபேஷன்
பேகி ஃபேஷன்AI image
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

ற்போது ஃபேஷன் என்பது நாகரிகமான உடைகளை அணிவது மட்டுமல்ல; அது ஒருவரது ஆளுமையின் வெளிப்பாடு, சுதந்திரம் மற்றும் சௌகரியத்தைக் குறிப்பதாகும். தற்போதைய டிரெண்டாக உலகின் கவனத்தை ஈர்த்து வரும் Baggy clothes எனப்படும் தளர்வான உடைகள்தான் ஃபேஷனாக இருக்கிறது. உடலை ஒட்டிய ஸ்லிம்-ஃபிட் ஆடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, இளம் தலைமுறையினர் தளர்வான, காற்று தாராளமாகப் புகும் பெரிய அளவிலான ஆடைகளைத்தேடி அணியத் தொடங்கிவிட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உடல் வடிவத்தை அப்படியே காட்டும் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் மட்டுமே பேஷனாகக் கருதப்பட்டன. ஆனால், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மனநிலைக்கு ஏற்ப சௌகரியத்திற்கு முதலிடம் கொடுக்கிறார்கள் தற்போதைய இளம் தலைமுறையினர்.

உடலை இறுக்காத இந்த உடைகள் அணிவதற்கும், வெளியில் சென்று பல மணி நேரம் பயணம் செய்யவும், சுற்றுவதற்கும் ஏதுவாக உள்ளது. 90-களில் பிரபலமாக இருந்த இந்த ஹிப்-ஹாப் ஃபேஷன் தற்போது நவீன வடிவத்தில் ஸ்டைலாகத் திரும்பி உள்ளது.

பேகி உடைகள் என்றாலே வெறும் பெரிய டி-ஷர்ட்டுகள் மட்டும் குறிப்பதல்ல; வைடான பெரிய சைஸ் ஜீன்ஸ், தளர்வான கார்கோ பேன்ட், ஓவர்சைஸ்டு சட்டைகள் மற்றும் ஹூடிகள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கல்லூரி மாணவ-மாணவிகள் முதல் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் வரை அனைவரின் அலமாரியிலும் இந்தத் தளர்வான உடைகள் இப்போது இடம் பிடித்துள்ளன. இவற்றை அணிபவருக்கு ஒரு தனித்துவமான மற்றும் கூலான தோற்றத்தைத் தருகிறது.

இந்த ஃபேஷன் தற்போது நம் நாட்டின் சின்ன ஊர்கள் முதல் பெருநகரங்கள் வரை மிக வேகமாகப் பரவி வருகிறது. பாரம்பரிய உடைகளை விரும்புபவர்கள் கூட, இந்த நவீன தளர்வான ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளனர் என்பது இதன் தனிச்சிறப்பாகும். இது இன்றைய இளைய சமுதாயத்தின் துடிப்பான மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

பல வண்ணக் கலவைகளில் பேகி உடைகள்:

முன்பெல்லாம் கரும்பச்சை, கருப்பு அல்லது நீலம் போன்ற அடர் நிறங்களில் மட்டுமே இதுபோன்ற உடைகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வெளிர் வண்ணங்கள், கண்களைக் கவரும் கலைநயமிக்க பிரிண்டுகள் மற்றும் பல வண்ணக் கலவைகளில் பேகி உடைகள் கிடைக்கின்றன. இது இளைய தலைமுறையினர் தங்களுக்குப் பிடித்தமான பிரத்யேக பாணியைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் பேஷன்: உங்கள் ஆடைகளே இனி உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும்!
பேகி ஃபேஷன்

பராமரிப்பு மற்றும் ஆயுள்:

இந்த ஆடைகள் அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றை முறையாகப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். பருத்தி மற்றும் டெனிம் போன்ற தரமான துணிகளில் தயாரிக்கப்படும் தளர்வான உடைகள் அணிவதற்கு மிகவும் இதமாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். சரியான முறையில் துவைத்துப் பராமரித்தால் இவற்றின் நிறமும் வடிவமும் மாறாமல் நீண்ட நாட்களுக்குப் புதியது போல இருக்கும்.

எப்படி அணிவது?

பேகி உடைகளை அணியும்போது சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் தோற்றம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பேகி ஃபேஷன்
பேகி ஃபேஷன்AI image

டாப்ஸ் மற்றும் பாட்டம் இரண்டையுமே மிகத் தளர்வான உடையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். வைடான பேகி ஜீன்ஸ் அணிந்தால், அதற்கு மேட்ச் ஆக உடலோடு ஒட்டிய அல்லது டக்-இன் செய்யப்பட்ட மேலாடைகளை அணியலாம். அதேபோல லூசான டாப்ஸ், டிஷர்ட் அல்லது சட்டை அணிந்தால், கீழே டைட்டான பேண்ட் அணிய வேண்டும். இந்த ஸ்டைல் ஆடைகளுக்கு சாதாரண ஷூக்கள், ஒயிட் ஸ்னீக்கர்ஸ் அல்லது கேன்வாஸ் காலணிகள் மிகப்பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வரண்டுபோன உதடுகளுக்கு விடை கொடுங்கள்: ஜொலிக்கும் உதடுகளைப் பெற எளிய டிப்ஸ்!
பேகி ஃபேஷன்

இந்த பேகி ஃபேஷன் என்பது மற்றவர்களைக் கவர்வதற்காக அல்லாமல் நமக்கு நாமே சௌகரியமாக உணர்வதையும் சுதந்திர மனப்பான்மையையும் குறிக்கிறது. உடல் தோற்றத்தைப் பற்றி கவலைப்படாமல், எந்தவிதத் தடையுமின்றி தங்களை அலங்கரித்துக் கொள்ள இந்த பேகி ஃபேஷன் வழிவகுக்கிறது. இதனால் இது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது.

இந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் தினசரி தோற்றத்தை வசதியாகவும் அதே சமயம் மிகவும் ஸ்டைலாகவும் மாற்றிக்கொள்ளும் தெளிவான யோசனைகளைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com