

நீங்கள் பேஷனை அதிகம் விரும்புவீர்களா? இல்லையா? அதில் எந்தளவு டெக்னாலஜி ஊடுருவியுள்ளது தெரியுமா? ‘ஸ்மார்ட் பேஷன்’ என்ற இரு வார்த்தைகள் இன்று அனைவரிடமும் பிரபலமாகி வருகிறது. சொல்லப் போனால் நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்தான் இதற்கெல்லாம் ஓர் ஆரம்ப புள்ளியே. ஆக, நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் இந்த ‘ஸ்மார்ட்’ என்ற வார்த்தை எதிரொலித்தால் எப்படி இருக்கும்? தெரிந்துகொள்வோம்.
நம் தலை முதல் கால் வரை
இந்தியாவின் பேஷன் உலகில் நுகர்வோரின் ஸ்மார்ட் ஸ்டைலுக்காக பல ‘டெக்னாலஜி’ புகுத்தப்பட்டுள்ளது. இது உடல் முழுவதும் அணியும் பல அணிகலன்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.
முகத்தின் அழகிற்கு மெட்டாவின் ரே-பான் டிஸ்ப்ளே (Ray-Ban Display) போன்ற AR தொழில்நுட்பம் கொண்ட மூக்கு கண்ணாடிகள், நாம் பேசுவதையும், நமக்கு புரிகின்ற மொழிபெயர்ப்பையும் (Translation) நேரடியாக நாம் பார்க்கும் லென்ஸில் (Lens) காட்டுகின்றன.
காதுகளில் அணியும் ‘பயோமெட்ரிக் காதணிகள்’ (biometric earrings) காது மடலில் இருந்தே நம் உடலை பற்றிய துல்லியமான சுகாதார செய்திகளை நமக்கு தருகின்றன.
விரலில் அணியும் ‘ஆடம்பர ஸ்மார்ட் மோதிரங்களும்’ (Smart rings), நம் உடலுக்கு தேவையான நிகழ்நேர உடற்பயிற்சி, தூக்க நேரங்களை துல்லியமாக தருகின்றன.
இதோடு நம் உடல் தோரணையை சரிசெய்யும் சில விஷேச டெனிம் ஆடைகள் (Denim), நம் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் ‘குர்தாக்கள்’ (Kurtas) போன்றவை இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இவை ஈரப்பதமான காலநிலைகளில் முதுகுத்தண்டு ஆரோக்கியத்தையும், அசௌகரியத்தை கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
இரவில் பயன்படுத்தக்கூடிய சில ‘பயோசெராமிக் பைஜாமாக்கள்’ (bioceramic pajamas) உடலுக்கு நன்மை அளிக்கும் அகச்சிவப்பு ஆற்றலைத் (infrared energy) சருமத்துக்குள் செலுத்துகின்றன. இது தூக்கத்தை வரவழைக்க உடலில் ரத்த ஓட்டத்தையும், தசை தளர்வுகளையும் மேம்படுத்துகின்றன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பாதங்களில் உண்டாகும் அழுத்த உணர்வுகளைக் சேகரிக்கும் ஸ்மார்ட் சாக்ஸ்கள் (Smart socks) நீரிழிவு நோய்களால் பாதங்களில் உண்டாகும் காயங்களை தடுக்க உதவுகின்றன.
அதனுடன் ‘ஸ்மார்ட் ஷூ’ களும் இத்தகைய நன்மைகளை தருகின்றன.
இதனால் உண்டாகும் நமக்கான அன்றாட பயன்பாடு vs வீண்விரயம்:
இந்தத் பொருட்கள் பயனுள்ளவையா அல்லது வீணானவையா என்று தீர்மானிப்பதில் பலருக்கு குழப்பம் உண்டாகலாம்.
வடிவமைப்பாளர் ‘விவியன் வெஸ்ட்வுட்’ (Vivienne Westwood ) ஒருமுறை கூறினார், “குறைவாக வாங்குங்கள். நன்றாகத் தேர்ந்தெடுங்கள். அதை நீடித்து உழைக்கச் செய்யுங்கள்.”
இந்தக் கொள்கை ஸ்மார்ட் ஃபேஷனுக்கும் நேரடியாகப் பொருந்தும். புதுமையைத் மட்டுமே தேடுவதற்கு பதிலாக, நம் உடல் தோரணை, உறக்கம், பாதுகாப்பு அல்லது தேவைப்படும் டெக்னாலஜி போன்ற அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களைத் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணமாக, சென்னையில் பயணம் செய்யும் ஒருவர் நெரிசலான மெட்ரோ ரயில் பயணங்களில் கைகளை சுலபமாக பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் ‘டெனிம் ஆடைகள்’ மிகவும் உகந்ததாக இருக்கும். பயணிகள் தங்கள் பாக்கெட்டிலிருந்து போனை வெளியே எடுக்காமலேயே தொலைபேசிகள் அல்லது இசையைக் (ஆடைகளுக்குள் வைத்தே) கையாள இது அனுமதிக்கிறது.
எனவே, தேவையற்ற ஆடம்பர சாதனங்களை ஒருவர் நிராகரிப்பது நாகரிகத்திற்கு எதிரானதல்ல; அது ஒரு விவேகமான தேர்வு.
ஸ்டைல் லுக்கில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட, தங்களின் அழகியலை விட நீடித்து உழைக்கும் தன்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் டெனிம் சட்டைகள், ஸ்மார்ட் சாக்ஸ் மற்றும் ஷூக்களை உபயோக பயன்படுத்தலாம்.
அறிவியல் ரீதியான சரிபார்ப்பு:
இந்த பொருட்கள் எல்லாம் சாதாரணமாக வடிவமைக்கப் படவில்லை. பல சென்சார்கள், எலக்ட்ரிக் சிப்கள் என பல பொருட்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ஆராய்ச்சிகள், இதன் அன்றாடப் பயன்பாட்டில் எவ்வாறு மனிதர்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை காட்டுகிறது.
இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், ஆடம்பர ஸ்மார்ட் உபகரணங்களுக்கும் உங்கள் அன்றாட ஆரோக்கியத்திற்கு உதவும் உண்மையான தொழில்நுட்ப ஆடைத் தேர்வுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொண்டு, வீண் செலவின்றி உங்கள் வாழ்க்கைமுறைக்கேற்ற சரியான ஸ்மார்ட் உடைகளைத் தேர்வு செய்யும் அறிவைப் பெறுவீர்கள்.