விளக்கெண்ணெய் கலவைகள்: முடி வளர்ச்சி, அடர்த்தி மற்றும் பளபளப்பை அதிகரிக்கும் வழிகள்!

விளக்கெண்ணெய், தேங்காய், ரோஸ்மேரி, ஜோஜோபா, ஆல்மண்ட், ஆர்கான் எண்ணெய் கலவைகள் மூலம் முடி வளர்ச்சி, அடர்த்தி, பளபளப்பை அதிகரிக்கும் இயற்கை வழிகள்.
hair-growth oil
hair-growth oil
Updated on

விளக்கெண்ணையை தலையில் அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதோடு வேறு எண்ணெய்களை  கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன் தெரியும்‌. விளக்கெண்ணையில்  ரைசினோயிக் அமிலம் உள்ளது‌ இது அழற்சி எதிர்ப்பு பண்பு பெற்றது‌ இதில் ஒமேகா3 கொழுப்பு அமிலம்  மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன.  இதனுடன் எந்தெந்த எண்ணையை பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

தேங்காய் எண்ணையில் லாரிக் அமிலம் உள்ளது. இது தலை முழுவதும் ஊடுருவக்கூடிய எண்ணை‌ இது புரதத்தை வழங்குவதோடு முடி உடைவுகளையும் தடுக்கிறது.‌ ஒரு பங்கு விளக்கெண்ணையுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணையை கலக்கவும். இதை லேசாக சூடு செய்து முடியில் மசாஜ் செய்யவும்.‌ இரவில் கூட தடவி மறுநாள் வாஷ் செய்யலாம்.  வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படிச் செய்ய வறண்டமுடி நல்லபளபளப்பு பெறும். சில வாரங்களிலேயே பலன் தெரியும்.

உங்கள் முடி அடர்த்தி குறைந்து மெலிதாக உள்ளதா?.

தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடிய  மினாக்சிடில்  இதில் உள்ளதால் முடி கொட்டுவதை இது தடுக்கும்.‌ இது தலை அரிப்பையும் தடுக்கும்.‌ இந்த எண்ணை முடிக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளிக்கும். இது அழற்சியை எதிர்க்கும் விளக்கெண்ணை யுடன் சேரும்போது முடி வளர்ச்சி பெரிதும் ஊக்குவிக்கப்படும்.‌ எட்டு சொட்டுக்கள் ரோஸ்மேரி எண்ணையை  இரண்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணையுடன் சேர்க்கவும்.‌ ரோஸ்மேரி ஆயிலை மட்டுமே முடிக்கு  தடவக்கூடாது.‌ இதை விளக்கெண்ணையோடு கலந்து நன்கு மசாஜ் செய்யவும் வாரத்தில் 3நாட்கள் மசாஜ் செய்து ஒருமணிநேரம் வைக்கவும்.  மூன்று மாதங்களில் முடி வளர்ச்சியை நீங்கள் உணரமுடியும்.

விளக்கெண்ணை ஜோஜோபா ஆயில்

ஜோஜோபா என்பது திரவ மெழுகாகும்‌ இதன் அமைப்பு நம் முடியில் உள்ள சீபத்தை ஒத்து உள்ளது.  அதனால் உங்கள் தலையில் தடவும் போது நன்கு இழுத்துக் கொள்ளும்‌ இதில் பிசுபிசுப்பு இருக்காது.‌ இது சீபம் உற்பத்தியை சமச்சீராக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
மெட் காலா 2026: வாயடைத்துப் போகச் செய்யும் டாப் 10 விசித்திர ஆடைகள்!
hair-growth oil

இதில் ஈசத்து மற்றும் போலிக் அமிலமும் உள்ளது.‌ முடிவளர்ச்சியை வேர்க்காலிலிருந்து தூண்டுகிறது‌. ஜோஜோபா எண்கெண்ணையையும் விளக்கெண்ணையும் சம அளவில் கலந்து தலைமுடியில் மசாஜ் செய்து  45நிமிடம் வைக்கவும். பிறகு ஷாம்பு வாஷ் செய்யவும். இது எண்ணைப் பசையுள்ள முடி உடையவர்களுக்கு ஏற்றது.

ஆல்மண்ட் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து மக்னீசியம் மற்றும் ஊட்டச்சத்துள்ள கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.  மேலும் இதில் ஓலிக் மற்றும் லினோலெய்க் அமிலம் உள்ளது‌ இவை முடியின் வேர்கள் கால்களை வலுவாக்கும். வைட்டமின் ஈ ஆக்டசிடேடிவ் அழுத்தத்தைக் குறைக்கும்.

இது ஆன்டிஆக்சிடண்ட்ஸ், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஈசத்து நிறைந்துள்ளன. ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் போக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.‌ ஒரு பங்கு விளக்கெண்ணையுடன் இரண்டு பங்கு ஆலிவ் ஆயில் உடன் கலந்து தலையில் மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து வாஷ் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
Dongan beauty; முதுமையிலும் இளமைத்தோற்றம் தரும் கொரியப் பெண்களின் அழகு ரகசியம்!
hair-growth oil

உங்கள் முடி அடர்த்தியாக இருந்தால் ஆர்கான் ஆயில் அதற்கு ஏற்றது. அசத்தும் ஒமேகா கொழுப்பு அமிலமும் நிறைந்தது.‌ இது முடிக்கு பளபளப்பை தரக்கூடியது. சுற்றச் சூழலால் மணிக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். ஒரு பங்கு விளக்கெண்ணையுடன் இரண்டு பங்கு ஆர்கான் டஆயில் கலந்து தடவி 45நிமிடங்களுக்குப் பிறகு வாஷ் செய்யவும். கலரிங் செய்பவர்களுக்கு இது ஏற்றது. இது முடியின் ஈரத்தன்மை மை தக்கவைத்து பளபளப்பையும் தருகிறது.

logo
Kalki Online
kalkionline.com