சம்மர்ல முகம் தக்காளி மாதிரி சிவக்காம இருக்க இந்த ரெண்டு சன்ஸ்கிரீன்ல ஒன்ன ட்ரை பண்ணுங்க!

best-sunscreen-for-glowing-skin
best-sunscreen-for-glowing-skin
Updated on

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்லும்போது முகம் கறுத்துப் போகாமல் இருக்க சன்ஸ்கிரீன் மிகவும் அவசியம். ஆனால் மார்க்கெட்டில் இப்போது எக்கச்சக்கமான பிராண்டுகள் இருப்பதால் எதை வாங்குவது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 

குறிப்பாக பளபளப்பான சருமத்தை விரும்பும் பலரும் தற்போது Dot & Key மற்றும் Aqualogica ஆகிய இரண்டு சன்ஸ்கிரீன்களைத் தான் அதிகம் தேடுகிறார்கள். இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாத்து ஒரு சூப்பரான குளோயிங் லுக்கை கொடுக்க இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதை இப்போது பார்ப்போம்.

வைட்டமின் சி Dot & Key!

டாட் அண்ட் கீ சன்ஸ்கிரீன்கள் தற்போது பலருடைய ஃபேவரைட் ஆக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் தான். இதை முகத்தில் தடவிய உடனே எந்த ஒரு வெள்ளை நிறத் திட்டும் அதாவது ஒயிட் காஸ்ட் இல்லாமல் சருமத்தோடு அழகாக ஒன்றிவிடும். 

மிகவும் மெல்லிய தண்ணீர் போன்ற தன்மையைக் கொண்டிருப்பதால் இது முகத்தில் பிசுபிசுப்பை ஏற்படுத்தாது. வெயிலால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கு ஒரு அட்டகாசமான சாய்ஸ்.

ஈரப்பதத்தை லாக் செய்யும் Aqualogica!

அக்வாலாஜிகா சன்ஸ்கிரீனின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அதன் ஈரப்பதம் தான். இதில் ஹைலூரானிக் ஆசிட் மற்றும் பழங்களின் சாறு கலந்திருப்பதால் இது முகத்திற்கு ஒரு டியூயி குளோ அதாவது கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொடுக்கிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். 

கிரீம் போல இல்லாமல் தண்ணீர் போல மிக எளிதாக சருமத்திற்குள் ஊடுருவி நாள் முழுவதும் முகத்தை மிகவும் பிரெஷ்ஷாக வைத்துக்கொள்ள இது பெரிதும் உதவுகிறது. மேக்கப் போடுவதற்கு முன்பாக இதை ஒரு பேஸ் ஆகவும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
வீடு vs நிலம் - இரண்டில் எந்த முதலீடு அதிக லாபம் தரும்?
best-sunscreen-for-glowing-skin

இரண்டில் எதை வாங்குவது?

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்து முகத்தில் ஒரு பிரகாசமான பிரைட்னஸ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக டாட் அண்ட் கீ பக்கம் செல்லலாம். அதே சமயம் உங்கள் சருமம் கொஞ்சம் வறண்டு போய் இருக்கும் அதோடு உங்களுக்கு ஒரு கொரியன் கிளாஸ் ஸ்கின் மாதிரியான பளபளப்பு வேண்டும் என்றால் அக்வாலாஜிகா உங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். இரண்டுமே எஸ்பிஎப் 50 பாதுகாப்பைக் கொடுப்பதால் வெயிலைப் பற்றிய கவலை உங்களுக்கு இனிமேல் வேண்டாம்.

இந்த இரண்டு பிராண்டுகளுமே சம்மருக்கு ஏற்ற மிகச் சிறந்த சன்ஸ்கிரீன்கள் தான். உங்களின் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப இதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வெளியே செல்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பாக இதை முகத்தில் தடவுவது முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்திற்கு இளநீர் நல்ல பானமா? நீரழிவு நோயாளிகளுக்கு பயன் இருக்குமா?
best-sunscreen-for-glowing-skin

ஒரு நல்ல சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுத்து இந்த கோடைக்காலத்தை எந்த ஒரு சருமப் பிரச்சனையும் இல்லாமல் கழியுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com