

முகத்தின் பொலிவை அதிகரிக்கவும். இறந்த செல்களை நீக்கவும் காபி தூள் சிறந்த இயற்கைப் பொருளாகப் பயன்படுகிறது.
வீட்டில் உள்ள சில பொருட்களைப் பயன்படுத்தியே முகச் சரும பராமரிப்பை மேற்கொள்ளலாம். சருமப் பொலிவைக்காக்க உதவும் சில காபி பேஸ் பேக்குகள் என்ன என்று பார்க்கலாம்.
காபி தூளின் நன்மைகள்:
காபி தூள் இயற்கையான எக்ஸ் ஃபோலியேட்டர். கரடு முரடான காபி தூளால் இறந்த செல்களை மென்மையாக நீக்கி சருமத்தை புதியதாக மாற்ற உதவுகிறது.
காபி ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் - முகத்தை காபி தூளால் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டத்தைத்தூண்டி முகத்தை ஒளிரச் செய்யும்.
எண்ணெய் கட்டுப்பாடு -அதிக எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்தி துளைகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது இதுவே காபி தூள் கரும்புள்ளிகளை தடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
இயற்கையான எளிய காபி ஃபேஸ் ஸ்கரப்புகள்:
1. காபி + தேன்:
காபி தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
இவை இரண்டையும் கலந்ததும் முகத்தில் மெதுவாக இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மசாஜ் செய்து 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின் வெது வெதுப்பான நீரால் நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
பலன்கள்:
இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், நுண்ணுயிர்களை தடுக்கவும், துளைகளை மெதுவாக திறக்கவும் உதவும். இது இயற்கையான இரண்டும் சேர்ந்த சேர்மமாகும். தேன் போராடும் தன்மை கொண்டது. இயற்கையான ஈரப்பதத்தையும் வழங்குகிறது. சருமச் சுருக்கங்கள், கரும்புள்ளிகள மறையும்.
2. காபி + தயிர்:
தயிரிலுள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கைளை மெதுவாக அகற்ற உதவுகிறது. மேலும் தோலை மென்மையாக்கவும் உதவுகிறது.
ஒரு டீஸ்பூன் காபித்தூள், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து முகம் முழுவதும் தடவி சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பின் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. காபி தூள் +தேங்காய் எண்ணெய்:
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் காபித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விழுதாக்கி அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகப்பொலிவும், பளிச்சென இருக்கும்.
பலன்கள்:
தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
4. காபித்தூள் +மஞ்சள்:
ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் காபித்தூள் எடுத்து அதனுடன் அரை டேபிள் ஸ்பூன் பால், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட்டாக்கி முகம், கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.
பலன்கள்:
பால், மஞ்சள் சேர்ப்பதால் முகம், கழுத்தில் உள்ள அழுக்கு நீங்கி பளிச்சிடும்.
5. காபித்தூள் + கடலை மாவு:
ஒரு கிண்ணத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் காபித்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைமாவு எடுத்து அதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் பொலிவாக பளிச்சிடும்.
பலன்கள்:
கடலைமாவு, கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்தில் கருமை நிறம் நீங்கும்.
6. காபி தூள் + சர்க்கரை:
ஒரு ஸ்பூன் காபித்தூள் + ஒரு ஸ்பூன் சர்க்கரை + ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் ஸ்கிரப் செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
பலன்கள்:
சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து ஸ்கிரப் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் புதிய செல்கள் உருவாகி இரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமம் மென்மையாகும்.
7. காபி தூள் + ஆரஞ்சு தோல் பொடி +தயிர்:
காபித்தூள் + ஆரஞ்சு தோல் பொடி +தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள அழற்சி மற்றும் மற்ற பிரச்னைகளை சரி செய்து சரும நிறத்தையும் அதிகரிக்கும். பருக்கள் உள்ளிட்டவை வராமல் தடுக்கும்.
பலன்கள்:
ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி, தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை அதிகரித்து பருக்கள் வராமல் தடுக்கும்.
குறிப்பு.
காபித்தூளால் ஏதேனும் அழற்சி ஏற்படும் என்று நினைத்தால், அதற்கு முன்பு கையில் பேட்ஜ்டெஸ்ட் செய்து கொள்ளவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமமுடையவர்கள் காப்பியங்கள் சார்ந்த பராமரிப்பில் சேர்ப்பது தவிர்ப்பது நல்லது.
காஃபைன் சேர்ந்த மொழிகளை பயன்படுத்திய பின் கட்டாயம் சருமத்திற்கு ஏதாவது மாய்சரைச்சர் அப்ளை செய்ய வேண்டும்.
இதில் ஏதாவது ஒன்றை சருமத்திற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து செய்யலாம்.
காபி ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சோர்வு, கருமை மற்றும் இறந்த செல்கள் நீங்கி புத்துணர்ச்சியான தெளிவான சருமத்தைப் பெறுவீர்கள்.