யானைக்கற்றாழை போதும்: சுருக்கங்கள் நீங்கி முகம் பட்டுப்போல ஜொலிக்க!

ரசாயன கிரீம்களுக்கு குட்பை சொல்லுங்கள்; இயற்கையான முறையில் இளமையைப் பாதுகாக்கும் யானைக்கற்றாழை ராஜ வைத்தியம்.
யானைக்கற்றாழை
யானைக்கற்றாழைGemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

சோற்றுக் கற்றாழையின் அழகு குறிப்புகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அது உலக புகழ் பெற்றது. ஆனால் யானைக் கற்றாழையின் அழகு குறிப்புகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது. யானைக் கற்றாழை ( Elephant Aloe or Agave) உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதோடு, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு பாரம்பரிய மூலிகையாகும். அதோடு இதர பொருட்களையும் சேர்த்து எப்படி அழகை மேம்படுத்தலாம் என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்!

யானைக்கற்றாழையின் மடலைச் சீவி, உள்ளிருக்கும் சோற்றை 7 முதல் 8 முறை தண்ணீரால் நன்றாகக் கழுவிய பிறகே (அதன் கசப்புத்தன்மை மற்றும் பிசின் பிசுபிசுப்பு நீங்குவதற்காக) அழகுப் பராமரிப்பிற்குப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது நல்ல ஒரு மாற்றத்தை முகப்பளபளப்பிலும் சருமத்திலும் காணலாம்.

1. முகச் பொலிவு மற்றும் கரும்புள்ளி நீங்க:

நன்கு கழுவிய யானைக்கற்றாழைச் சோற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். இக்கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, ஆறிய நீரில் கழுவ வேண்டும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெயிலினால் ஏற்பட்ட மங்கு (Sun tan) மறைந்து முகம் உடனடிப் பொலிவு பெறும்.

2. பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய:

யானைக்கற்றாழைச் சோற்றுடன் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு அல்லது துளசி சாறு கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும். பருக்கள் உள்ள இடங்களில் மட்டும் இதைத் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதில் உள்ள இயற்கை கிருமி நாசினி (Antibacterial properties) பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் மறையச் செய்யும்.

3. பொடுகுத்தொல்லை நீங்க:

யானைக்கற்றாலைச் சோற்றை அரைத்து, அதனுடன் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இக்கலவையைத் தலையின் மண்டையோட்டில் (Scalp) படுமாறு நன்றாகத் தேய்த்து, 20 நிமிடங்கள் ஊறவைத்து சீயக்காய் அல்லது மிதமான ஷாம்பு போட்டு அலசவும். இதனால் மண்டையோட்டில் உள்ள வறட்சி நீங்கி, பொடுகுத் தொல்லை முற்றிலும் கட்டுப்படும்.

யானைக்கற்றாழை
யானைக்கற்றாழைGemini image

4. முடி வளர்ச்சி மற்றும் அடர்த்திக்கு:

யானைக்கற்றாழைச் சோற்றை அரைத்து வடிகட்டிய சாற்றுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து மிதமான தீயில் காய்ச்சி எண்ணெயாகத் தயாரித்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயைத் வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவேண்டும். இப்படி செய்து வரும் பொழுது கூந்தல் வேர்க்கால்கள் பலமடைந்து, முடி உதிர்வது நின்று கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரும்.

5. கண்கள் சோர்வு மற்றும் கருவளையம் நீங்க:

நன்கு சுத்தப்படுத்திய யானைக்கற்றாழைச் சோற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் அல்லது வெள்ளரிக்காய் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இக்கலவையை தூங்குவதற்கு முன் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் சோர்வான பகுதிகளில் மென்மையாகத் தடவி லேசாக மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அப்படி கழுவி வரும் பொழுது கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்கள் மறைந்து, கருவளையம் நீங்கி அந்தப் பகுதி புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

6. உதடு கருமை நீங்கி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற:

ஒரு ஸ்பூன் யானைக்கற்றாழைச் சோற்றுடன் சிறிதளவு பிரவுன் சர்க்கரை (Brown sugar) அல்லது நாட்டுச்சக்கரை மற்றும் சில துளிகள் தேன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக்கலவைக் கொண்டு உதடுகளின் மீது மென்மையாக 2 நிமிடங்கள் ஸ்கிரப் (Scrub) செய்துவிட்டு, பின் வெதுவெதுப்பான நீரால் துடைக்கவும். இதனால் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் (Dead cells) நீங்கி, உதட்டின் கருமை மறைந்து இயற்கை சிவந்த நிறமும் மென்மையும் கிடைக்கும்.

7. கை, கால் மற்றும் முழங்கால் கருமை நீங்க:

யானைக்கற்றாழைச் சோற்றுடன் கசகசா அல்லது பட்டைத் தூள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்துத் திக்கான பேஸ்ட் போலத் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முழங்கால்கள், முழங்கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் படியும் கருமையான தடிமனான தோலில் இதைத் தடவி, காய்ந்ததும் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி குளிக்கும்பொழுது கைகளில் உள்ள சொரசொரப்புத் தன்மை நீங்கி, சருமம் பட்டுப்போல மிருதுவாகவும் பிரகாசமாகவும் மாறும்.

மிகவும் சிறப்பான அழகு குறிப்பு ஒன்று:

யானைக் கற்றாழையின் (Agave) மிகவும் சிறப்பான, பாரம்பரிய ராஜ வைத்திய அழகு குறிப்பு: "வயதான தோற்றத்தைத் தடுக்கும் இயற்கையான ஃபேஸ் லிஃப்டிங் & சுருக்கம் நீக்கும் நைட் சீரம் (Anti-Aging Collagen Boost Serum)".

சாதாரண கற்றாழையைவிட யானைக் கற்றாழையில் அடர்த்தியான சத்துக்களும், சரும நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) அதிகரிக்கும் தன்மையும் அதிகம்.

இதையும் படியுங்கள்:
முகம் பளபளக்க குங்குமப்பூ: வீட்டிலேயே செய்யக்கூடிய 11 எளிய அழகு குறிப்புகள்!
யானைக்கற்றாழை

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த யானைக் கற்றாழைச் சோறு - 2 டேபிள் ஸ்பூன் (7-8 முறை நன்கு கழுவியது) சுத்தமான பசும்பால் ஆடை அல்லது தேங்காய் பால் - 1 டேபிள் ஸ்பூன், குங்குமாதி தைலம் அல்லது வைட்டமின் E ஆயில் - 3 சொட்டுகள்.

செய்முறை & பயன்படுத்தும் முறை:

நன்றாகக் கழுவிய யானைக் கற்றாழைச் சோற்றையும், பால் ஆடையையும் சேர்த்து மிக்சியில் மையாக அரைத்து மென்மையான கிரீம் பதத்திற்கு எடுக்கவும். அதில் 3 சொட்டுகள் குங்குமாதி தைலம் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இவற்றை இரவில் தூங்குவதற்கு முன், முகத்தை வெதுவெதுப்பான நீரால் சுத்தமாகக் கழுவிவிட்டு, இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மேல்நோக்கி (Upward stroke) மென்மையாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் குளிர்ந்த நீரால் கழுவவும்.

இதையும் படியுங்கள்:
முகத்தை ஜொலிக்க வைக்கும் 6 சிறுதானிய அழகு குறிப்புகள்!
யானைக்கற்றாழை

ஏன் இது மிகவும் ஸ்பெஷல்?

கொலாஜன் சுரப்பு: யானைக் கற்றாழைச் சோற்றில் உள்ள இயற்கைச் சத்துக்கள் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, கன்னங்களில் ஏற்படும் தொய்வை நீக்கி சருமத்திற்கு உடனடி இறுக்கத்தைத் (Skin tightening effect) தரும்.

சுருக்கங்கள் மறைதல்: கண்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்களை வேகமாகக் கட்டுப்படுத்தி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.

முக்கியக்குறிப்பு:

யானைக்கற்றாழையைப் பயன்படுத்தும் முன், அதை கையின் சிறு பகுதியில் தடவிப் பார்த்து (Patch test) அலர்ஜி அல்லது அரிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்து பயன்படுத்துவது நல்லது.

இந்த அழகு குறிப்பை படிப்பதால் யானைக்கற்றாழையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய தெளிவு பெறுவர். அதை சரியாக பயன்படுத்தி அழகுக்கு அழகு சேர்ப்பர்.

யானைக்கற்றாழையைத் சரியான முறையில் கையாண்டு, சருமம் மற்றும் கூந்தல் அழகை இயற்கையாக மேம்படுத்தும் முழுமையான வழிகாட்டுதல்.