உங்க முகம் நிலவா, இதயமா? இது தெரியாம புருவம் ஷேப் பண்ணாதீங்க!

உங்கள் முக அமைப்பிற்கு எந்த புருவ வடிவம் கச்சிதமாக பொருந்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
புருவம்
புருவம்Gemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on: 

முக அழகில் புருவத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த கட்டுரை, முக வடிவத்துக்கு ஏற்ற புருவ வடிவங்களைத் தேர்வு செய்வது எப்படி என்பதையும் கூறுகிறது. நீள்வட்டம், நீளமான, வட்டம், இதயம் போன்ற முகங்களுக்கு தனித்தனி புருவ ஷேப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இளமையான தோற்றத்திற்காக புருவத்தை மிக கீழ் வளைத்தல் தவிர்க்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

முகம்தான் அழகின் அடையாளம் என்றால் அந்த முகத்துக்கு அழகை காட்டுவது கண்கள்தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டால் பாதி அழகு வந்துவிடும். கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மைகொண்டது.

அழகிய புருவம் கொண்ட பெண்கள் எந்த கூட்டத்திலும் எவரையும் கவர்வார்கள்.

முகத்துக்கேற்ற புருவம்

சராசரி அளவில் இருக்கும் முகத்திற்கு சாதாரண அளவில் புருவத்தை செய்யலாம். சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்கக்கூடாது.

எப்போதும் புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக்கூடாது. அது இளமையான தோற்றம் தராது. முக வடிவத்தைப் பொறுத்து புருவத்தின் வடிவத்தையும் மாற்றி முகத்தை அழகாக்கலாம்.

நீள்வட்டமாக முகம் இருப்பது பெண்களுக்கு எப்போதும் அழகு. உலக அழகிப் போட்டியில் அதிகம் ஜெயிப்பவர்கள் இப்படிப்பட்ட முக வடிவம் உள்ளவர்கள்தான். லேசாக வளைந்து முனையில் கூர்மையான புருவம் இவர்களுக்கு அழகுத்தோற்றம் தரும்.

புருவம்
புருவம்Gemini image

நீளமான முகத்துக்கு நேர்கோடு போன்ற புருவங்கள் அழகு. லேசாக கீழ் நோக்கி வளைந்தது போன்ற புருவமும் உங்களுக்கு அழகு கூட்டும்.

புருவங்களை கண்களுக்கு வெளியே இருக்கும்படி பார்த்து ஷேப் செய்ய வேண்டும். முகத்தின் நீளத்தை மறைத்து இயல்பாக காட்டும் மாயத்தை இப்படிப்பட்ட புருவங்கள் செய்கின்றன.

நிலவு போன்ற வட்டமான முகத்துக்கு மெல்லிய வளைந்த புருவங்களே அழகு.

இதையும் படியுங்கள்:
கழுத்து கருமை: இது வெறும் அழுக்கு இல்லை... உடலுக்குள் இருக்கும் நோயின் ரகசிய அறிகுறி!
புருவம்

நெற்றி அகலமாகவும், தாடை குறுகலாகவும் இதயம் போன்ற ஷேப்பில் இருக்கும் முகத்துக்கு, இருபுறமும் வளைந்தது போன்ற வில் தோற்றத்தில் தூக்கலாக இருக்கும் புருவம் பொருத்தம். இது நெற்றியின் அகலத்தைக் குறைத்துக் காட்டுவதுடன் குறுகிய தாடையையும் பேலன்ஸ் செய்கிறது.

புருவங்களில் முடி வளர

பருவங்களில் முடி வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. விளக்கெண்ணெயுடன் சமஅளவு வைட்டமின் ஈ ஆயில் கலந்து இரவு தூங்கப்போவதற்கு முன்பாக புருவத்தில் தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் புருவத்தில் உடலி வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

வெந்தயத்தை ஊறவைத்து பசை போல அரைத்து இரவில் படுக்கப் போகும்போது தடவி மறுநாள் நன்றாக கழுவிடலாம். இதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்தும் தடவலாம். இதனால் புருவம் அடர்த்தியாக இருப்பதுபோல் தோன்றும்.

இதையும் படியுங்கள்:
நகம் உடைந்து மஞ்சள் நிறமாகிறதா? உள் உடலில் இருக்கும் ஆபத்தான அறிகுறி இதுதான்!
புருவம்

வெங்காயச்சாறை காட்டன் துணியில் நனைத்து புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும். இதில் உள்ள கந்தகசத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக இதனை செய்யலாம்.

ஆமணக்கு எண்ணெய் மருத்துவ குணம் நிறைந்தது. முடி வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இந்த எண்ணெயை இரவில் புருவத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் புருவம் நன்கு அடர்த்தியாக வளரும்.

இந்த எளிய முறையில் இதனை செய்து வந்தால் புருவங்கள் வளரும்.

உங்கள் முக அமைப்பைச் சரியாகக் கண்டறிந்து, அதற்குப் பொருத்தமான புருவ வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை மேலும் அழகாகவும் இளமையாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com