முகத்துல இருக்குற கொழுப்பை குறைக்க இத மட்டும் பண்ணுங்க.. ரிசல்ட் கன்பார்ம்!

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க சூயிங்கம் மற்றும் ஃபேஸ் யோகா உதவுமா மற்றும் இயற்கையாக முகம் ஒல்லியாக மாற செய்ய வேண்டிய உண்மையான வழிமுறைகள்.
முகக் கொழுப்பு
முகக் கொழுப்புAI image
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

செல்ஃபி எடுக்கும் போது நமது முகம் அழகாக, குறிப்பாக Double Chin இல்லாமல் மிகவும் கச்சிதமாக தெரிய வேண்டும் என்பது பலருடைய நீண்ட நாள் ஆசையாக இருக்கும். இதற்காக இணையத்தில் தேடி, நாள் முழுவதும் சூயிங்கம் மெல்லுவது, விதவிதமாக முகத்தை அசைத்து முகத்துக்கான யோகா செய்வது மற்றும் விலை உயர்ந்த ஃபேட் பர்னிங் கிரீம்களை பயன்படுத்துவது என பல விஷயங்களை நாம் முழு மூச்சாக செய்து வருகிறோம். ஆனால் இந்த வித்தைகள் எல்லாம் உண்மையிலேயே பலன் தருமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஸ்பாட் ரிடக்‌ஷன் ஒரு மாபெரும் கட்டுக்கதை!

நமது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் தனியாக உடற்பயிற்சி செய்து குறைக்க முடியும் என்பதை ஆங்கிலத்தில் Spot Reduction என்று கூறுவார்கள். அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக இது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு மாயை ஆகும். நாம் டயட் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் சீராகவே கொழுப்பு குறையத் தொடங்கும். 

உங்கள் கன்னங்கள் அல்லது தாடை பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் தனியாக குறிவைத்து குறைக்க எந்த ஒரு மேஜிக் பயிற்சியும் உலகில் கிடையாது. முகத்தில் கொழுப்பு சேர்வதும் குறைவதும் பெரும்பாலும் நமது மரபணு மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையை பொறுத்தே அமைகிறது.

உணவு முறை Vs முக வீக்கம்!

பலருக்கும் முகத்தில் இருப்பது உண்மையான கொழுப்பே கிடையாது, அது வெறும் நீர் தேக்கம் மட்டுமே. நாம் சாப்பிடும் உணவில் அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை இருந்தால், அது உடலில் உள்ள தண்ணீரை அப்படியே தேக்கி வைத்து முகத்தை ஒரு பலூன் போல வீக்கமாக காட்டும்.

இதையும் படியுங்கள்:
இனிக்கும் மாம்பழம்... புளிக்கும் மாங்காய்... யாருக்கு எது சிறந்தது? ஒரு சிறப்புப் பார்வை!
முகக் கொழுப்பு

இதனை தவிர்க்க ஆரோக்கியமான முழு தானியங்கள், லீன் புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளியேற்றி உங்கள் சருமத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற பெரிதும் உதவும்.

உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை!

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க கார்டியோ  மற்றும் வலிமைப் பயிற்சி போன்ற தீவிர உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது மிகவும் அவசியமாகும். இதனால் உங்களின் ஒட்டுமொத்த உடல் எடை குறையும் போது, தானாகவே முகத்தில் உள்ள கொழுப்பும் கரைந்து உங்கள் தாடை அமைப்பு அழகாக மாறும்.

முகக் கொழுப்பு
முகக் கொழுப்பு

இது தவிர நமது தூக்கமும் மிக முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. சரியான தூக்கம் இல்லை என்றால் உடலில் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோன் அதிரடியாக அதிகரித்து முகத்தை மீண்டும் உப்பசமாக மாற்றிவிடும்.

கவனிக்க வேண்டிய இதர விஷயங்கள்!

தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலை வறட்சியில் இருந்து பாதுகாத்து, சருமத்தை எப்போதுமே மிகவும் இறுக்கமாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ளும். மேலும் அதிகப்படியான மதுப்பழக்கம் உடலில் நீர்ச்சத்தை முழுமையாக குறைத்து, மறுநாள் காலையில் முகத்தை மிகவும் வீங்கச் செய்யும் என்பதால் அந்த பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீங்க 30 வயச தாண்டுனவரா... உடம்பு வெயிட் போடாம இருக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
முகக் கொழுப்பு

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க எந்த ஒரு குறுக்குவழியும் ஷார்ட்கட்டும் கிடையாது. முகத்தை மெலிய வைக்க விலை உயர்ந்த கிரீம்கள் மற்றும் தேவையற்ற பயிற்சிகளில் செலவழிக்கும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி, சரியான அறிவியல் முறைகளைப் பின்பற்றி நிரந்தரமாக ஒரு கச்சிதமான முக அமைப்பைப் பெறலாம். 

logo
Kalki Online
kalkionline.com