பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஃபேஷன் வழிகாட்டி: தவிர்க்க வேண்டிய நிறங்கள் முதல் தங்க ஆபரணங்கள் வரை!

மஞ்சள், மரகதப் பச்சை, மெரூன், தங்க ஆபரணங்கள் மூலம் மாநிறத் தோலின் அழகை உயர்த்தும் கலர் டிப்ஸ் மற்றும் தினசரி ஆடைத் தேர்வுக்கான நடைமுறை ஆலோசனைகள்
fashion-guide
fashion-guide
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

மாநிறம் கொண்டவர்கள் ஆடைகளை செலக்ட் செய்யும்போது நமக்கு இந்த நிறம் எடுப்பாக இருக்குமா என்ற தயங்குவார்கள். உண்மையில் மாநிறம் கொண்டவர்கள் தைரியமாகப் பல வண்ணங்களை அணியலாம் என்பதுதான் தற்போதைய நவீன ஃபேஷன் உலகத்தின் கருத்தாக இருக்கிறது.

சிறந்த வண்ணத் தேர்வுகள்:

மாநிறமாக இருப்பவர்கள் மஞ்சள் மற்றும் வெந்தய நிறம் போன்ற வண்ணங்களை தாராளமாக முயற்சி செய்யலாம். பிரகாசமான மஞ்சள் நிறத்தைவிட சற்றே மங்கலான மஞ்சள் நிறம் கொண்ட வெந்தயக் கலர்  மாநிறத்தவர்களுக்கு ஒரு ராயல் தோற்றத்தைத்தரும். இது சருமத்திற்கு ஒருவிதமான மெருகையும் பொலிவையும் சேர்க்கும் தன்மை கொண்டது. அதேபோல் மரகதப் பச்சை மற்றும் டீல் (Teal) ப்ளூ போன்ற அடர் நிறங்கள் சருமத்தின் நிறத்தை மேன்மையாகக் காட்டும். குறிப்பாக மாலை நேர விசேஷங்களுக்கு இவை மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

மென்மையான நிறங்களின் அழகு:

மென்மையான வண்ணங்களான இளஞ்சிவப்பு, வான் நீலம் (ஸ்கை ப்ளூ) மற்றும் லாவெண்டர் போன்ற நிறங்கள் மாநிறத்தவர்களுக்கு மிகவும் அழகாக இருக்கும். இவற்றைத் தேர்வு செய்வதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இவை உங்கள் தோற்றத்தை மென்மையாகவும் கண்ணியமாகவும் காட்டும். பளிச் வெள்ளை, சந்தன நிற ஆடைகள் மாநிறத்திற்கு ஒரு அற்புதமான மாறுபாட்டைக் கொடுக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு இவை மிகச் சிறந்த தேர்வாகவும் கம்பீரமான லுக் தரும். 

கம்பீரம்/குளிர்ச்சி:

மாநிறம் கொண்டவர்கள் செங்கல் சிவப்பு  அல்லது சுட்ட மண் போன்ற நிற ஆடைகளை அணிந்தால் அது சருமத்திற்கு ஒரு புதுவிதமான மெருகைக் கொடுக்கும். அடர் ஊதா அல்லது திராட்சை நிற ஆடைகளை விசேஷங்களுக்குச் செல்லும்போது அணிவது ஒரு ராஜ தோற்றத்தைத் தரும்.

க்ரே நிறத்தில் சற்றே வெளிர் நிறத்தைத் தேர்வு செய்வதும் மாநிறத்தவர்களுக்கு ஒரு கண்ணியமான தோற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக பருத்தி உடைகளில் இந்த நிறத்தைத் தேர்வு செய்வது கோடை காலத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கிரீம் மற்றும் ஆஃப்-ஒயிட் நிறங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் அது குளிர்ச்சியான மற்றும் அமைதியான தோற்றத்தைத்தரும். 

தவிர்க்க வேண்டிய நிறங்கள்:

அதேசமயம் சில நிறங்கள் உங்கள் சருமத்தை மங்கலாகக் காட்டக்கூடும். டார்க் பிரவுன் நிறத்தைத் தவிர்ப்பது உங்கள் தோற்றத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது சரும நிறத்தோடு ஒன்றிப்போய் ஆடையின் அழகைச் சற்றே குறைத்துவிடும். மேலும் மிகவும் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் நியான் நிறங்களைத் தவிர்ப்பது உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்ட உதவும். 

இதையும் படியுங்கள்:
விரல் மற்றும் முழங்கால்களில் ஏற்படும் நிறமாற்றத்திற்கான தீர்வுகள்!
fashion-guide

ஆபரணங்கள்:

மாநிறத்தவர்களுக்குத் தங்க ஆபரணங்கள் எப்போதும் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றன. இது சருமத்தின் வார்ம் அண்டர்டோனுடன் இணைந்து இன்னும் அழகாகக்காட்டும். மேக்கப்பைப் பொறுப்பு வரை பீச் அல்லது மெரூன் நிற லிப்ஸ்டிக்குகள் மற்றும் மண் நிற ஐ-ஷேடோக்கள் பொருத்தமாக இருக்கும்.

பாரம்பரிய ஆடைகள்:

பாரம்பரிய ஆடைகளான புடவைகள் மற்றும் குர்தாக்களில் மெரூன், வைன் மற்றும் எமரால்டு கிரீன் போன்ற வண்ணங்கள் மாநிறப் பெண்களுக்குத் தனி அழகைத்தரும். எந்த நிற ஆடையை அணிந்தாலும் அதைத் தன்னம்பிக்கையோடு அணிவதே உங்களை அழகாகக் காட்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைவிட நீங்கள் எந்த உடையில் சௌகரியமாக உணர்கிறீர்கள் என்பதே மிக முக்கியமானது.

மாநிற ஆண்களுக்கு:

ஆண்களும் தங்களின் ஆடைத் தேர்வில் சில நுணுக்கமான மாற்றங்களைச் செய்யலாம். நேவி ப்ளூ, ஆலிவ் கிரீன் மற்றும் மெரூன் நிறச் சட்டைகள் மாநிற ஆண்களுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். வெளிர் நீல நிறச் சட்டையும் கருப்பு அல்லது கிரே நிறப் பேண்ட்டும் ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும்.

சருமத்தின் நிறம் என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே ஆகும். சரியான வண்ணங்களையும் நேர்த்தியான ஆடை வடிவமைப்பையும் தேர்வு செய்வதன் மூலம் எந்நிறமும் பேரழகே என்று உணரலாம்.

logo
Kalki Online
kalkionline.com