குண்டாகத் தெரிவதைத் தவிர்க்க ஆடை அணியும் போது செய்யவேண்டிய 'அந்த' ஒரு மாற்றம்!

plus size fashion tips
plus size fashion tips
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on: 

நாம் அணியும் ஆடைகள், நமது ஒட்டுமொத்த தோற்றத்தை இன்னும் அழகாகக்காட்ட பெரிதும் உதவவேண்டும். சற்றுப் பருமனான உடலமைப்பு கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களுக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, சரியான வண்ணங்களில் அமைந்த ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களை மிகவும் ஸ்லிம்மாகவும் ஸ்மார்ட் ஆகவும் தோற்றமளிக்கச் செய்ய முடியும்.

டார்க் கலர் சீக்ரெட்:

நிறங்களுக்கும் வெளிச்சத்திற்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெள்ளை போன்ற வெளிர் நிற ஆடைகள், தன் மீது விழும் வெளிச்சத்தைத் திருப்பி அனுப்பும் தன்மை கொண்டவை. அதனால்தான், லைட் கலர் ஆடைகளை அணியும்போது நம்முடைய உடலமைப்பு சற்றுப் பருமனாகத் தெரிகிறது.

ஆனால் அடர் பழுப்பு, அடர் பச்சை, நேவி புளூ மற்றும் கருப்பு போன்ற ஆழமான அடர் நிறங்கள், தன் மீது விழும் வெளிச்சத்தை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் உடலின் பருமன் தனியாகத் தெரியாமல், நாம் அணியும் ஆடையுடன் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. இந்த எளிய அறிவியல் காரணத்தால்தான், அடர் நிற ஆடைகளை அணியும்போது உடலின் பருமன் குறைந்து, நாம் சற்று ஒல்லியாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிக்க முடிகிறது.

பருமனான உடலமைப்பு கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களை நேர்த்தியாகக் காட்டிக்கொள்ள இந்த எளிய முறையைப் பயன்படுத்தலாம். ஆண்கள் தங்களின் அலுவலகப் பயன்பாட்டிற்கு அடர் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பெண்கள் திருமணம், விசேஷங்கள், திருவிழாக்கள் மற்றும் விருந்து நிகழ்வுகளின் போது அடர் நிறங்களைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இது இருபாலருக்குமே ஒரு கம்பீரமான தோற்றத்தை மிக எளிதாகக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
"முடி கொட்டுதா? டல்லா இருக்கா? உங்க பாட்டி சொன்ன வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!"
plus size fashion tips

லைட் அண்ட் டார்க் ஷேட்- மேஜிக் ஃபார்முலா:

ஒரே வண்ணத்தைச் சேர்ந்த டார்க் மற்றும் லைட் ஷேடுகளைக் கலந்து ஆடையணிவது,  மிகவும் அழகாகவும் ட்ரெண்டியாகவும் இருக்கும்.

ஆண்களுக்கு: வெளிர் நீல நிறச் சட்டைக்கு, அடர் நீல நிறப் பேண்ட்  அணிந்து அசத்தலாம்.

பெண்களுக்கு: லைட் புளூ கலர் புடவைக்கு, டார்க் புளூ கலரில் இருக்கும் பிளவுஸைத்  தேர்வு செய்து அணியலாம். அதேபோல, நேவி புளூ கலர் குர்தாவிற்கு, லைட் புளூ கலர் பேண்ட்டை மேட்ச் செய்யலாம்.

இந்த முறையில் ஆடை அணியும்போது உடலமைப்பு பார்ப்பதற்குச் சீராகத் தெரிவதுடன், உயரமும் சற்று அதிகமாகத் தெரியும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. உடலின் எந்தப் பகுதி சற்றுப் பருமனாக இருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு எப்போதும் அடர் நிற ஆடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, உடலின் மேல் பகுதி, அதாவது வயிறு அல்லது தொப்பை உள்ளவர்கள் டார்க் கலர் சட்டையையோ அல்லது டாப்ஸையோ தேர்வு செய்ய வேண்டும். பாட்டம் பகுதியில் இடுப்பு அல்லது கால் பகுதி பருமனாக இருப்பவர்கள் அடர் நிறப் பேண்ட், பெண்களாக இருந்தால் அடர் நிற ஸ்கர்ட்  அணிந்து நேர்த்தியான தோற்றம் பெறலாம்.

இயற்கை நிறங்கள்:

அதிகம் கண்ணைப் பறிக்காத, இயற்கையோடு இயைந்த நிறங்கள் உடலமைப்பிற்கு எப்போதும் ஒரு சாஃப்ட்டான, மென்மையான தோற்றத்தைத் தரும். சாம்பல் கலந்த பழுப்பு, ஆலிவ் பச்சை, மங்கிய சாம்பல் நிறம் மற்றும் மண் சார்ந்த நிறங்கள்  இந்த வகைக்குள் அடங்கும்.

இந்த நிறங்கள் மிகவும் கண்ணியமான தோற்றத்தைத் தரக்கூடியவை. இவை உடலின் பருமனான பகுதிகளைத் தனியாக எடுப்பாகக்காட்டாமல், நம்முடைய ஒட்டுமொத்த தோற்றத்தையும் மிக மென்மையாகவும் அழகாகவும் மாற்றியமைக்கின்றன. தினசரி அலுவலகப் பயன்பாட்டிற்கும்,  கேஷுவல் உடைகளுக்கும் இந்த எளிய இயற்கை நிறங்களைத் தாராளமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரே நிற ஆடைகள், சரியான ஃபிட்டிங், ஹை-வெய்ஸ்ட் ஸ்டைல்களால் உயரமாகத் தோன்றுவது எப்படி?
plus size fashion tips

ஆடைத் தேர்வு என்பது நமது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். இந்த எளிய ஃபேஷன் ரகசியங்களைத் தெரிந்து கொண்டால், பருமனான உடலமைப்பு கொண்ட ஆண்களும் பெண்களும் எப்போதுமே அழகாகவும் ஸ்மார்ட் ஆகவும் தோற்றமளிக்கலாம்!

logo
Kalki Online
kalkionline.com