

பெண்களின் கைகளுக்கு அழகும் கம்பீரமும் தரும் வெல்வெட், மல்டி கலர் கட் ஒர்க், ரேஷ்மி, ஸ்டோன் ஒர்க், சிங்கிள் கலர் செட், கோல்டன் ஸ்டோன் போன்ற பல வகை கண்ணாடி வளையல்கள் பற்றி விரிவாக விளக்கப் படுகிறது. புடவை, சுடிதார், அனார்கலி, ஷராரா போன்ற ஆடைகளுக்கு எப்படி மேட்ச் செய்வது, பண்டிகை, அலுவலகம் போன்ற சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற தேர்வுகள் என்ன என்பதும் கூறப்படுகிறது.
1. வெல்வெட் வளையல்கள்
இப்போது டிரென்டிங்கான காண்போரைக் கவரும் மென்மையான வெல்வெட் கண்ணாடி வளையல்கள். காட்டன் புடவை மற்றும் சுடிதார்களுக்கு இவை கைகளுக்கு ஒரு கம்பீரமான ரிச்சான தோற்றத்தைத்தரும்.
2. மல்டி கலர் கட் ஒர்க் வளையல்கள்
சாதாரண ஒற்றை நிற வளையல்கள் போல் இன்றி இது கடாவை விட மெலிதாகவும், தடிமனாகவும் இருக்கும். பல வண்ணங்கள் கலந்திருப்பதால் எந்த நிற உடைக்கும் எளிதாக பொருந்தும்.
3. கட் ஒர்க் டிசைன் வளையல்கள்
முன்பு சிவப்பு பச்சையில் மட்டுமே கிடைத்த கட் ஒர்க் வளையல்கள் இப்போது நவீன பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதை உங்களின் லேட்டஸ்ட் டிசைனர் புடவைகளுக்கு அட்டகாசமாக பொருந்தும்.
4. ரேஷ்மி வளையல்கள்
பண்டிகைகள், குடும்ப விழாக்களுக்கு பெண்கள் அதிகம் விரும்புவது ரேஷ்மி கண்ணாடி வளையல்கள்தான். மென்மையான பளபளப்புடன் பட்டு புடவைக்கு மேட்ச் ஆகவும், இது பரிசளிக்கவும் சிறந்த தேர்வு.
5. ஸ்டோன் ஒர்க் வளையல்கள்
சாதாரண கண்ணாடி வளையல்களில் கல் முத்துக்கள் பதித்த நளினமான பிரம்மாண்டமான டிசைன் இது. பண்டிகைகள், திருமணங்களில் அனார்கலி, ஷராரா போன்ற கனமான ஆடைகளுடன் அணியும்போது இது மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
6. சிங்கிள் கலர் செட் வளையல்கள்
ஆடம்பரம் இல்லாத என்றும் ட்ரெண்டான ஒற்றை நிற பிளையின் வளையல்கள் தினசரி மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு மிகவும் அழகாக இருக்கும். சிவப்பு/ பச்சை, மெரூன் நிற செட்கள் அட்டகாசமான தோற்றத்தைத்தரும்.
7. கோல்டன் ஸ்டோன் வளையல்கள்
தங்க பார்டர், கந்தன் பதித்த இந்த கண்ணாடி வளையல் டிசைன் மிகவும் பிரசித்தி பெற்றது. ராஜஸ்தானி பாரம்பரிய தோற்றத்தை தரும் இதை கைகளில் நடுவிலோ அல்லது ஓரங்களிலோ காப்பு வளையலாக அணிந்தால் அழகாக இருக்கும்.
கண்ணாடி வளையல்கள் பராமரிப்பு முறைகள்
1. தண்ணீர் மற்றும் சோப்பு போட்டு பாத்திரம் துலக்கும்போது அல்லது துணி துவைக்கும் போதும் கண்ணாடி வளையல்களில் படுவதை தவிர்க்கவும். அதிகப்படியான ஈரப்பதம் வளையல்களின் பளபளப்பை குறைத்துவிடும்.
2. வளையல்களை பயன்படுத்தாத போது, அவற்றை தனித்தனியாக துணியில் சுற்றியும் வளையல் குச்சிகளில் அல்லது மென்மையான துணியில் சுற்றி பாதுகாக்க வேண்டும். இதனால் ஒன்றுடன் ஒன்று மோதி உடைவது தவிர்க்கப்படும்.
3. கைகளில் வளையல்களை மாற்றும் போது லேசாக சோப்பு நீர் அல்லது மாய்சரைசர் தடவிக்கொண்டால் கைகளில் உராய்வு இல்லாமல் எளிதாக அணியலாம். வளையல்களும் உடையாது.
4. அதிகப்படியான வெப்பம் அல்லது நெருப்பு அருகில் கண்ணாடி வளையல்களை வைப்பதை தவிர்க்கவும்.
5. உடைந்த, விரிசல் விழுந்த கண்ணாடி வளையல்களைக் கைளில் தொடர்ந்து அணிவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ஸ்டைலிங் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், குறைவான செலவிலேயே உங்கள் ஆடைகளுக்கு ஏற்ற மிகச்சரியான வளையல் காம்பினேஷனை உருவாக்கி, எந்த ஒரு விசேஷத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சிறந்த தோற்றத்தைப் பெற முடியும்.