

நம் அனைவருக்கும் தேவையானது நல்ல காலணி, அணிகலன்கள். நம்மை அழகாக காட்டும் உடையோ, மேக்கப்போ எப்படி ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுமோ அதுபோல பொருத்தமான காலணி அணிவது ஆடை, அலங்காரத்துக்கு தனி லுக்கை கொடுத்து நம் ஸ்டைலையும் மேம்படுத்தி காட்டுகிறது. காலணி என்பது முன்பு போல் இல்லாமல் தற்போதெல்லாம் விதவிதமான வெரைட்டிகளில் பயனுக்கேற்றவாறு நம் தேவையை பூர்த்தி செய்கிறது.
காலணி என்பது பெயருக்கேற்ப அணிகலனுக்கு சமமாக ஒருவரது அழகை மேம்படுத்தி காட்ட உதவுகிறது. அதோடு நம் கால்கள், பாதங்கள், விரல்கள், முதுகு, இடுப்பு என இவற்றிற்கு இடையூறு தராத வண்ணம் வடிவமைக்கப்பட்டு நம்மை சௌகரியமாக நடக்க உதவுகிறது.
சிலர் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்து, வாக்கிங், ரன்னிங் ஷூவை எல்லா இடங்களுக்கும் போடுவது என பொருத்தமில்லாத காலணிகளை அணிவர். அலுவலகத்துக்கு நார்மல் ஷூ மட்டுமே அணியவேண்டும். ஸ்போர்ட்ஸ் ஷூ, கட் ஷூ என போடுவது முற்றிலும் தவறு.
இடத்திற்கு தகுந்தவாறு காலணி தேர்வு செய்து அணிவதே நல்லது. ஃபார்மல் உடைக்கு அணியும் ஷூக்கள் நன்கு பாலிஷ் செய்து போடப்பட வேண்டும். நேர்த்தியாக இருக்க பிராண்டட் ஷூ அணிய நீண்ட நாள் உழைப்பதோடு நடை, கால்களுக்கும் பாதுகாப்பு தரும்.
பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணியும்போது அதில் உள்ள பல்வேறு வகையான ஸ்டிலெட்டோஸ், எலகேண்ட், பம்ப்ஸ் அல்லது பூட்ஸ் என வகைகளை தெரிந்து அணிவது நல்லது. நமக்கு 2, 3 வகை ஹீல்ஸ் செருப்புகளை பற்றிதான் தெரியும்.
ஆனால் இதில் பிளாக், நியூமன், கோமா, கோன், டெகரேடிவ், பிளேர், பிரெஞ்ச், ஹை, கிட்டேன், மீடியம், ஸ்லிம், ஸ்பூன், ஸ்க்வேர், திக் க்யூபன்ஸ் என பல்வேறு வகைகள், டிசைன்களில் உள்ளன.
பொதுவாக ஹீலின் அளவு குறைவாக இருந்தால் அது கால், பாதங்களுக்கு மிகவும் வசதியாகவும், எந்த வலியும் ஏற்படாமலும் நமக்கு சௌகரியமாக நடக்க உதவும். மேலும் அதிக ஹீல் இல்லாத செருப்புகளை அணியும்போது கால் பாதங்கள் முழுவதும் சமமான அழுத்தம் ஏற்பட்டு, தசைகள், மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுத்தாமல் சமநிலையில் இருக்கும்.
ஒருவர் அணியும் காலணியின் சரியான உயரம் ஒன்று முதல் இரண்டு இன்ச் வரைதான் இருக்க வேண்டும் என்பது போடியார்டிஸ்டின் (கால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளை சீர் செய்யும் நிபுணர்) கூற்று.
ஒவ்வொரு முறை காலணிகள் வாங்கும் போதும் நம் பாதங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என பார்த்து வாங்க வேண்டும். காலணிகளை எவ்வளவு நேரம் அணிகிறோம், எவ்வளவு தூரம் நடப்போம், அதிக நேரம் நின்று கொண்டு, நடந்து கொண்டு வேலை செய்கிறோமா என அனைத்தையும் யோசித்து விட்டு வாங்க வேண்டும்.
அதிக ஹீல்ஸ் கொண்டவை இரவு நேர பார்ட்டிக்கு அணிய ஏற்றது. சாதரண அலுவலக நேரம், நீண்ட நேரம் ஷாப்பிங் மற்றும் அலைச்சல் உள்ள வேலைகளுக்கு குதிகால் உயரமில்லாத பிளாட் செருப்புகள் பொருத்தமானவை.
ஸ்டிலெட்டோஸ் போட்டு பழக்கம் இருந்தால் அணியலாம். பழக்கமில்லாமல் அணியும்போது அவை இரவு நேர விருந்துக்கு ஏற்றது என்றாலும் நம்மை சௌகரியமாக நடக்க உதவாது. வலியும் கொடுத்துவிடும்.
ஹீல்ஸ் அணியும்போது நடை மாறலாம். நிற்கும் தோரணையை மாற்றுவதோடு கால் பாதங்கள், கணுக்கால், முதுகு, இடுப்பு வலி என சிரமத்தை கொடுத்துவிடும். பாயிண்டட் ஹீல்ஸ் போடுவதை விட பேடண்ட் ஹுல்ஸ் போடலாம். இதனால் கால் பாதங்களில் எந்தவித மாற்றம் ஏற்படாமல் சமமாக இருக்கும்.
ஸ்டைல், லுக் என்பதைவிட கால் பாதங்கள் வசதியாக இருக்க வேண்டும் எனில் சௌகரியமான காலணிகளை அணிவது அவசியம். வலி, வீக்கம் தராத காலணிகளை நம் நடை, தோற்றத்தை மாற்றாததோடு, பயணத்தை சுகமான தாக்கும்.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ற பொருத்தமான சரியான காலணிகள் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைப்பதுடன், பாதங்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் மேம்படுத்த முடியும்.