முகம் இருண்டு போய் காணப்படுகிறதா... கறைகளை வேரோடு அழிக்கும் ஆப்பிள் தோல் பேஸ் பேக் செய்முறை இதோ!

apple-peels-for-glowing-skin
apple-peels-for-glowing-skin
Published on

நமது உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினமும் பல்வேறு பழங்களை சாப்பிடுவது வழக்கம். அதில் குறிப்பாக மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் ஒரு பழம் ஆப்பிள். இதனை சாப்பிடும் போது பலரும் அதன் தோலை சீவி குப்பையில் வீசிவிடுவார்கள். ஆனால் அந்த தோலில் தான் நமது முகத்தை பளபளப்பாக மாற்றும் ஒரு மாபெரும் அழகு ரகசியம் ஒளிந்திருக்கிறது. 

விலை உயர்ந்த கிரீம்களை கடைகளில் அதிக காசு கொடுத்து வாங்கி பணத்தை வீணாக்குவதை விட, வீணாக தூக்கி எறியும் இந்த தோலை வைத்து எப்படி முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தோலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்!

ஆப்பிளின் சதைப்பகுதியை விட அதன் மேல் தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் கொட்டிக்கிடக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் சருமத்திற்கு மிகச்சிறந்த ஒரு பாதுகாப்பை கொடுக்கின்றன.

வெளியில் சுற்றும் போது ஏற்படும் தூசு மற்றும் மாசுகளால் நமது முகத்தில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவதை இது முற்றிலுமாக தடுத்து நிறுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் முகம் சீக்கிரமாகவே முதிர்ச்சியடைந்து சுருக்கங்கள் விழுவதையும் இந்த ஆப்பிள் தோல் அடியோடு கட்டுப்படுத்துகிறது.

இறந்த செல்களை நீக்கும்! 

நமது முகத்தில் இயற்கையாகவே சேரும் இறந்த செல்களை அகற்றுவதில் இது ஒரு மிகச்சிறந்த கிளீனராக செயல்படுகிறது. இதிலுள்ள சில இயற்கையான அமிலங்கள், முகத்தில் உள்ள சிறிய துளைகளில் அடைத்து கொண்டிருக்கும் அழுக்குகளை ஆழமாக சென்று சுத்தம் செய்கின்றன. இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, சருமம் ரொம்பவே பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற ஆரம்பித்துவிடும்.

பேஸ் பேக் தயாரிக்கும் சிம்பிள் முறை!

இந்த பேஸ் பேக் தயாரிக்க நமக்கு ஆப்பிள் தோலுடன் கொஞ்சமாக தேன் மற்றும் ரோஸ் வாட்டர் மட்டுமே தேவைப்படும். இதை இரண்டு விதமாக நாம் தயார் செய்யலாம். முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை மட்டும் உரித்து வெயிலில் காய வைக்க வேண்டும். தோல் சத்தம் வரும் அளவுக்கு காய்ந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
பிடித்த உணவைச் சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்! இதோ அந்த 'டைம் டேபிள்'!
apple-peels-for-glowing-skin

அந்த பவுடரில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம். காயவைக்க நேரம் இல்லை என்றால், உரித்த பச்சை தோலை அப்படியே மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து அதிலும் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம். இதை தடவி பதினைந்து நிமிடம் கழித்து மெதுவாக மசாஜ் செய்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

யாருக்கெல்லாம் செட் ஆகும்?

பலருக்கும் தங்களின் சருமத்திற்கு இது ஒத்துப்போகுமா என்ற ஒரு சிறிய தயக்கம் இருக்கும். ஆனால் இது எண்ணெய் பசை உள்ள முகம் முதல் வறண்ட சருமம் வரை என அனைத்து வகையான சருமத்தினருக்கும் கச்சிதமாகப் பொருந்தும். வெயிலில் அலைந்து முகம் கருமையாக மாறியவர்களுக்கும், எப்போதுமே முகம் டல்லாக இருப்பவர்களுக்கும் இந்த பேஸ் பேக் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

 இயற்கையாக கிடைக்கும் எந்த ஒரு பொருளுமே நமக்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஒருபோதும் ஏற்படுத்தாது. நாம் வேண்டாம் என குப்பையில் வீசும் பல பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் மறைந்து கிடக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; இரண்டு பிரதிகள்..!
apple-peels-for-glowing-skin

வாரத்திற்கு இரண்டு முறை இந்த சிம்பிளான இயற்கை மருத்துவத்தை உங்களின் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். எந்த ஒரு பெரிய செலவும் இல்லாமல் உங்களின் முகம் இளமையாகவும் பொலிவுடனும் மாறுவதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com