பிடித்த உணவைச் சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்! இதோ அந்த 'டைம் டேபிள்'!

Intermittent Fasting benefits
Intermittent Fasting benefitsc
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டைப்பட்ட விரத முறை (Intermittent Fasting) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் பல வகைகள் உண்டு என்றாலும், நம் உடலின் தேவையைப் பொருத்து நமக்கான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான அளவு மட்டும் உணவை எடுத்துக்கொண்டு, தேவையற்ற உணவுகளை குறைத்தாலே உடல் எடையை குறைக்க முடியும். இதற்காகத்தான் intermittent fasting என்ற இடைப்பட்ட விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இடைப்பட்ட விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவை உட்கொண்டு, மீதமுள்ள நேரத்தில் உணவைத் தவிர்த்து அதாவது உண்ணாவிரதம் இருக்கும் ஒரு உணவு முறையாகும். இது உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும். அத்துடன் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. முக்கியமாக 16:8 முறை (16 மணி நேர விரதம், 8 மணிநேர உணவு) இதில் மிகவும் பிரபலமானது.

1. 16:8 முறை:

இது மிகவும் பிரபலமான முறையாகும். இதில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உபவாசம் இருந்து, 8 மணி நேரம் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு எடுத்து, மீதமுள்ள 16 மணி நேரம் உபவாசம் இருக்கலாம். தினமும் 8 மணிநேர உணவருந்தி 16 மணிநேரம் விரதம் இருப்பது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றது.

2. 5:2 முறை:

இதில் வாரத்தில் 5 நாட்கள் சாதாரண 3 வேளை உணவுகளை உண்ணலாம். அதாவது வழக்கமான உணவை எடுத்துக்கொண்டு, மற்ற 2 நாட்கள் மிகக் குறைந்த கலோரிகளைக் (சுமார் 500-600 கலோரிகள்) கொண்ட உணவை எடுத்துக் கொள்ளலாம். நம் வசதிக்கு ஏற்ப சாதாரண மற்றும் உண்ணாவிரத நாட்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விரதம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

3. மாற்று நாள் விரதம்:

ஒரு நாள் முழு உணவும், அடுத்த நாள் உபவாசமும் இருப்பது. அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருக்கும் முறை.

4. வாரியர் டயட்:

இடைப்பட்ட உண்ணாவிரத உணவு முறையின் மற்றொரு வகை வாரியர் டயட் (போர்வீரர் உணவு முறை) ஆகும். இந்த உணவுமுறையின்படி, நாள் முழுவதும் சிறிதளவு பச்சைப் பழங்களையும், காய்கறிகளையும் (சாலட்) மட்டுமே சாப்பிட வேண்டும். பின்னர் இரவு உணவிற்கு ஒரு பெரிய வேளை உணவை உண்ண வேண்டும். இந்த விரத முறைகளை பின்பற்றும் பொழுது உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள தண்ணீர் மட்டுமே அருந்தலாம்.

5. இதனால் ஏற்படும் நன்மைகள்:

இடைப்பட்ட விரதம் என்பது நாம் 'என்ன சாப்பிட வேண்டும்' என்பதற்கு பதிலாக, 'எப்போது சாப்பிட வேண்டும்' என்பதில் கவனம் செலுத்தும் ஒரு உணவு முறையாகும். இது குறிப்பிட்ட நேர இடைவெளியில் விரதம் இருப்பதையும், மற்ற நேரங்களில் உணவு உட்கொள்வதையும் அடிப்படையாகக் கொண்டது.

எடை இழப்பு:

உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவும்.

இன்சுலின் கட்டுப்பாடு:

இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இன்சுலின் எதிர்ப்பை சரி செய்கிறது.

செரிமான ஆரோக்கியம்:

செரிமான மண்டலத்திற்கு ஓய்வளித்து வீக்கத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

செல்களை புதுப்பித்தல்:

விரத காலத்தில் உடல் சேதமடைந்த பழைய செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை உருவாக்க வழி வகுக்கிறது.

மூளை ஆரோக்கியம்:

மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. அல்சிமர் மற்றும் பார்கின்சன்ஸ் போன்ற நியூரோடிஜெனரேடிவ் நோய்களிலிருந்து இந்த விரதம் பாதுகாப்பதை சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் தலைவலி, மயக்கம் அல்லது பசி போன்ற பக்க விளைவுகள் இருக்கலாம். நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று இந்த முறையை பின் தொடர்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பக்க விளைவுகள் இல்லா மருந்துகள்!
Intermittent Fasting benefits

உண்ணாவிரத நேரத்தில் தண்ணீர், பிளாக் காப்பி அல்லது மூலிகைத் தேநீர் சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறை மூலம் உடல் உணவிலிருந்து ஆற்றல் பெறுவதற்கு பதிலாக, கொழுப்பு செல்களை ஆற்றலாகப் பயன்படுத்தத் தொடங்கும். இதனால் உடல் எடை குறையும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com