பாரம்பரியமே புதிய ஸ்டைல்! - பிரபலங்களைக் கவர்ந்த ஜம்தானி ரகசியங்கள்!

jamdani-saree-history
jamdani-saree-history
Updated on

ம்ம வாழ்க்கை எவ்வளவு நவீனமாக மாறினாலும், சில விஷயங்கள் காலத்தைத் தாண்டி நம்மோடு பயணிக்கிறது. அப்படிப்பட்ட ஒன்றுதான் ஜம்தானி. இது ஒரு ஆடை மட்டுமல்ல; நம்ம கலாச்சாரம், பொறுமை, கைவினை நுணுக்கம் எல்லாத்தையும் சேர்த்து சொல்ற ஒரு உயிருள்ள கதை. இன்று வேகமாக மாறும் ஃபேஷன் உலகத்திலும், இந்தப் பழமையான நெசவு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது என்பது சுவாரஸ்யமான விஷயம்.

இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஒரு நெசவுக் கலை, இன்றைய உலக ஃபாஷன் மேடையில் மீண்டும் ஒளிர்கிறது என்றால் அது ஜம்தானிதான். “காற்றால் நெய்யப்பட்டது” என்று புகழப்பட்ட இந்த மென்மையான முஸ்லின், பெங்காலின் பண்பாட்டு மரபின் உயிர்மூச்சாக இருந்து வருகிறது.

ஒருகாலத்தில் முகலாய அரண்மனைகளையும் ஐரோப்பிய வியாபாரிகளையும் கவர்ந்த இந்த நெசவு, காலத்தின் ஓட்டத்தில் மறைந்துபோகும் நிலையில் இருந்தது. ஆனால் இன்றோ, அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. ஆம் அது இப்போ அது மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

ஜம்தானி ஒரு சாதாரண ஆடை இல்லை. ஒவ்வொரு டிசைனும் கையாலேயே நெய்யப்படுகிறது. அதனால ஒரு சேலை நெய்ய வாரங்களோ, சில நேரம் ஆண்டுகளோ கூட ஆகும். அந்த அளவுக்கு பொறுமையும் உழைப்பும் இதில் இருக்கிறது. அதனாலதான் இது இவ்வளவு விலை மதிப்பானதும், தனித்துவமானதுமாக இருக்கிறது.

இப்போ மக்கள் மீண்டும் நம்ம பாரம்பரியத்தைக் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா பெண்கள், “நம்ம கலாச்சாரம் நம்ம பாரம்பரிய உடையிலேயே இருக்கணும்”ன்னு நினைச்சு ஜம்தானி மாதிரி கைவினை ஆடைகளை தேர்வு பண்ணுறாங்க. பெரிய நிகழ்ச்சிகள்ல கூட ஜம்தானி சேலைகள் பார்க்க முடிகிறது. இது ஒரு ஃபேஷன் மட்டும் இல்ல, நம்ம அடையாளத்தைக் காட்டுற ஒரு வழி.

இதையும் படியுங்கள்:
அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற 'டிரெண்டி' காட்டன் பிளவுஸ் டிசைன்கள்!
jamdani-saree-history

சமீப காலத்தில் பல பிரபலங்களும் ஜம்தானியைத் தேர்வு செய்தது இதை இன்னும் முன்னிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. நிதா அம்பானி ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் ஜம்தானி சேலை அணிந்தது பெரிய கவனம் பெற்றது. அதேபோல் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் போன்றவர்களும் முக்கிய தருணங்களில் இந்த நெசவை அணிந்து, “பாரம்பரியம்தான் புதிய ஸ்டைல்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

சினிமா உலகத்திலும் இது ஒரு புதிய அலைபோல இருக்கிறது. ராணி முகர்ஜி, ஆலியா பட், கொங்கனா சென்ஷர்மா போன்றவர்கள் ஜம்தானியை நவீன ஸ்டைலுடன் இணைத்து அணிந்தது, இளம் தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. இதனால், ஜம்தானி நெசவு பழையதல்ல காலத்துக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் கலாச்சாரச் சின்னம் என்று இன்றைய இளம் தலைமுறையினருக்கு புரிய ஆரம்பிச்சிருக்கிறது.

ஜம்தானி இப்போ சேலைக்குள்ள மட்டும் இல்ல. குர்தா, ஸ்கர்ட், டிரஸ் மாதிரி பல புதிய வடிவங்கள்ல வருகிறது. அதனால இளம் தலைமுறையினருக்கும் இது ரொம்ப ஈஸியா பிடிச்சு போயிருக்கு. தினசரி வாழ்க்கையிலேயே இதைப்பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ ஃபேஷன் உலகம் ரொம்ப வேகமா ஓடுது. இன்று வாங்குறது நாளைக்கு பழையதாகிடுது. ஆனா ஜம்தானி அப்படியில்லை. இது உருவாக நீண்ட நாட்கள் ஆவது போலவே நீண்ட நாட்கள் நிலைக்கும் அழகு.

இதையும் படியுங்கள்:
வெயிலால் கருத்த சருமமா? தேங்காய் பால் மேஜிக் மூலம் முகத்தை பளபளப்பாக மாற்றுங்கள்!
jamdani-saree-history

ஒரு ஜம்தானி துணியை அணிவது, ஒரு கைவினைஞனின் உழைப்பையும், ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தையும் மரியாதையுடன் தாங்கி நிற்பதற்கு சமம். அதனால்தான், ஜம்தானி இன்று ஒரு உடை மட்டுமல்ல. அது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலம். அந்த பாலம் வழியாக நாம் நம் அடையாளத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறோம்.

இன்று அதைத் தேர்வு பண்ணுற ஒவ்வொருவரும், ஒரு ஃபேஷன் ஸ்டேட்மென்ட் மட்டும் இல்லாமல், ஒரு பாரம்பரியத்தை காப்பாற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறார்கள். காலம் மாறினாலும், ஜம்தானியின் நெய்த கதை தொடர்ந்து நம்மோடு பேசிக்கொண்டே இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com