பெண்களை மயக்கும் டூ இன் ஒன் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்கள்!

மங்கள சூத்ரா முதல் குந்தன் வரை—உங்கள் கைகளுக்கு கம்பீரம் தரும் லேட்டஸ்ட் ட்ரெண்ட்ஸ்!
பிரேஸ்லெட் வாட்ச்
பிரேஸ்லெட் வாட்ச்AI image
Updated on

பெண்களுக்கான டூ இன் ஒன் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்கள் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. மங்கள சூத்ரா வாட்ச் பிரேஸ்லெட், ஹார்ட் ஷேப் டயல் வித் லோட்டஸ் செயின், பேர்ல் குந்தன் போல்கி, பிரைடல் பிரேஸ்லெட் வாட்ச், குந்தன் மற்றும் குங்ரூ போன்ற மாடல்கள் எப்படி திருமணமான பெண்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை அனைவருக்கும் ஸ்டைலான தேர்வாக உள்ளன என்பதையும், வீட்டிலேயே டிசைன் தேர்வு செய்யும் பயனையும் கூறுகிறது.

பெண்கள் நேரத்தை காட்டும் வாட்ச்கள் கூட விதவிதமான டிசைன்களில் இருக்க வேண்டும் என விருப்பப்படுவர். அதிலும் டூ இன் ஒன்னாக செயல்படும் பிரேஸ்லெட் டிசைன் வாட்ச்கள் பெண்களை தற்போது மிகவும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் தற்போது பெண்கள் கைகளை அழகாக்கி ஸ்டைலான தோற்றத்தை அளிக்கும் பிரேஸ்லெட் வாட்ச் டிசைன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. மங்கள சூத்ரா வாட்ச் பிரேஸ்லெட்

திருமணமான பெண்களின் சிறந்த தேர்வாக மங்கள சூத்ரா வாட்ச் பிரேஸ்லெட் டிசைன் உள்ளது. இதில் பொதுவாக இருக்கும் பிரேஸ்லெட் டிசைனும், தாலி டிசைனும் ஒன்றிணைந்து இருப்பதோடு இதய வடிவில் வாட்ச் என மூன்றும் சேர்ந்து மங்களகரமாக இருப்பதால் திருமணமான பெண்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் மணிகளும் அழகு சேர்ப்பதால் புத்தம் புதிய தோற்றத்துடன் வாங்கி அணியும் ஆவலை தூண்டுகிறது.

2. ஹார்ட் ஷேப் டயல் வித் லோட்டஸ் செயின்

சிம்பிள் மற்றும் சோபர் லுக்கை விரும்புபவர்கள் 'ஹார்ட் ஷேப் டயல் வித் லோட்டஸ் செயின்' டிசைனை வாங்கலாம். தாமரை வடிவ செயினில் வண்ண வண்ண கற்கள் பதித்து இருப்பதோடு ஹார்ட் ஷேப் டயல் கொண்டு சீரான தோற்றத்தை வழங்குகிறது. கைகளில் கலை நயத்துடனும் நேர்த்தியான தோற்றத்தை விரும்புபவர்கள் இந்த டிசைனை அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

பிரேஸ்லெட் வாட்ச்
பிரேஸ்லெட் வாட்ச்AI image

3. பேர்ல் குந்தன் போல்கி பிரேஸ்லெட்

அட்டகாசமாகவும், அழகாகவும் கைகளுக்கு கம்பீரத்தையும் கொடுக்கும் பேர்ல் குந்தன் போல்கி பிரேஸ்லெட் இள நங்கையர்களின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கொட்டும் முடியை நிறுத்தி காடாய் வளர்க்கும் எளிய இயற்கை ரகசியங்கள்!
பிரேஸ்லெட் வாட்ச்

வாட்ச்சின் இருபுறமும் யானைகள் சூழ மூன்று அடுக்குகளில் வடிவமைக்கப்பட்டுள்ள பேர்ல் குந்தன் போல்கி பிரேஸ்லெட் புதிய வடிவத்தில் இருப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

4. பிரைடல் பிரேஸ்லெட் வாட்ச்

புதுமணப் பெண்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் பிரைடல் பிரேஸ்லெட் வாட்ச் ஆடம்பரமான தோற்றத்தை வழங்குகிறது. செவ்வக வடிவில் இருக்கும் வாட்ச்சின் இருபுறமும் அதிகமான கற்கள் பதிக்கப்பட்டு கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிகள் சூழ்ந்த அதிக வேலைப்பாடுடன் பெரிதாக காட்சி தருவதால் விசேஷங்களுக்கு ஏற்ற டிசைனாக உள்ளது.

5. குந்தன் மற்றும் குங்ரூ பிரேஸ்லெட் வாட்ச்

விலை குறைவாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களின் தேர்வாக குந்தன் மற்றும் குங்ரூ பிரேஸ்லெட் வாட்ச் உள்ளது. வாட்ச்சை சுற்றி பிரமாண்டமான முறையில் குந்தன் கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் விதவிதமான வண்ண மணிகள் கோர்க்கப்பட்டு பெரிதாக காட்சி தருகிறது. கல்லூரி பெண்களின் கைகளில் தற்போது காட்சி தரும் இந்த டிசைன் ஃட்ரெண்ட் ஆகிவருகிறது.

இதையும் படியுங்கள்:
ஆளுமையை உயர்த்தும் தங்க பிரேஸ்லெட்டுகள்: லேட்டஸ்ட் டிரெண்ட்ஸ் இதோ!
பிரேஸ்லெட் வாட்ச்

வாட்ச் தனியாகவும் பிரேஸ்லெட் தனியாகவும் இல்லாமல் இரண்டும் ஒன்றாக வடிவமைக்கப்பட்டு அதிலும் விதவிதமான டிசைன்களில் தற்போது வாட்ச் பிரேஸ்லெட்டுகள் வந்துள்ளன. மேற்கூறிய டிசைன்களில் உங்களுக்கு பொருத்தமானவற்றை வீட்டிலேயே தேர்வு செய்து மனதில் உருவகப்படுத்திக் கொண்டால் கடைக்கு சென்று வாங்கும்போது குழப்பம் ஏற்படாமல் தெளிவாக தேர்வு செய்ய முடியும்.

இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், எந்தவொரு விசேஷம் அல்லது அன்றாட பயன்பாட்டிற்கும் உங்கள் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய வாட்ச் டிசைனை கடைகளுக்கு செல்லும் முன்பே சுலபமாக திட்டமிட்டு தேர்வு செய்யும் தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com