சரும பொலிவுக்கு உதவும் அற்புத நாட்டு மருத்துவக் குறிப்புகள்!

medicine tips for skin glow!
medicine tips for skin glow!
Published on

பெண்கள், ஆண்கள் என பலருக்கும் இருக்கும் கவலைதான் உடல், சருமத்தை பராமரிப்பது. தற்போதைய நடைமுறை வாழ்க்கை அதுக்கு ஏற்றதாக அல்ல. எனவே உடலையும், சருமத்தையும் பாதுகாக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகவும். உடலில் அக்கறை செலுத்த நாம் பழங்கள், ஜூஸ்கள் எடுத்து கொள்கிறோம். ஆனால் சருமத்தை பாதுகாக்க என்ன செய்கிறோம் உடனே செயற்கையான க்ரீம்களை தேடி செல்கிறோம்.

அதிலும் நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் என்றெல்லாம் விற்பனை செய்வதால் நாமும் அந்த க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்திகிறோம்

வீட்டில் உள்ள நாட்டு மருந்துகள் மூலமே நம் சருமத்தை அழகாக பாதுகாக்க முடியும். சீப் அண்ட் பெஸ்ட் என்பது போல் இந்த நாட்டு மருந்து வைத்தியம் நமக்கு அட்டகாசமான நன்மைகளே தரும். அவை என்னென்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

மஞ்சள்

மஞ்சளும் நம் வீட்டில் தினசரி உபயோகப்படுத்தும் ஒரு எளிய பொருள் தான். மஞ்சள் இயல்பாகவே பேக்டீரியாவை நீக்கும் தன்மை கொண்டது. பெண்களின் சரும பராமரிப்பில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இதன் ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாதிக்கின்ற நுண்ணுயிரிகளை அழிக்கும். பருக்கள் மற்றும் அவற்றால் உண்டாகும் தழும்புகளை குணப்படுத்தும்.

மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும்?

சருமம் இளமையாக இருக்க, மஞ்சளை பால் அல்லது தயிருடன் கலந்து முகத்தில் பூசி வரலாம்.

அமுக்கிரா

அமுக்கிரா என்பது ஒரு மூலிகை பொருள் ஆகும். இந்த பொருளை நீங்கள் எளிதில் மூலிகை கடைகளில் பெறமுடியும். அமுக்கரா, அமுக்கிரி, அஸ்வகந்தா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த மூலிகையில், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பங்கல் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் கிருமித்தொற்றைத் தடுத்து, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

அமுக்கிராவை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அஸ்வகந்தா பொடி, இஞ்சி பொடி ஆகியவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
சருமத் தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை: வெள்ளை மஞ்சள்!
medicine tips for skin glow!

லவங்கப்பட்டை

உணவில் அவ்வபோது சேர்க்கும் ஒரு பொருள்தான் லவங்கப்பட்டை. இதுவும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள்தான். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மிருதுவாக்கக்கூடியது லவங்கப்பட்டை. இதில் உள்ள ஆன்டி- செப்டிக் பண்புகள் சருமத் துளைகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். லவங்கப்பட்டையில் உள்ள மூலக்கூறுகள் சரும நிறத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.

லவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

லவங்கப்பட்டைத் தூளுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் முகத்தின் வசீகரம் அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

நெலிக்காய் சாப்பிட்டால் இதயத்திற்கு ஆயுள் நீடிக்கும் என்றே சொல்வார்கள். அத்தகைய நன்மை உடைய நெல்லிக்காய் சருமத்திற்கு சிறந்ததாகும். நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை. இதனால் அது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருக்களால் உண்டாகும் வடுக்கள் ஆகியவற்றை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும்.

துளசி

அனைவருக்கும் தெரிந்த மூலிகைப் பொருட்களுள் ஒன்று துளசி. இதை நாம் வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். மேலும் தினசரி கோயில்கள், சாலைகளில் கூட நமக்கு துளசி இலைகள் கிடைக்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் சருமத்தை பாதிக்கும் பிரீ-ரேடிக்கல்களை கட்டுப்படுத்தி, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பளிச்சென்ற சருமத்தைப்பெற அன்றாடப் பொருட்களே போதும்!
medicine tips for skin glow!

துளசி இலையை வைத்து என்ன செய்யவேண்டும்:

10 முதல் 20 துளசி இலைகளை வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து விழுதாக அரைக்கவும். இதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com