

முகம், நகம், முடி பொலிவு பெற மங்கு மங்கி வர இரசாயன கலவை சிறிதும் இல்லாமல் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே அழகுக்கு அழகு சேர்ப்போம் வாருங்கள்!
கருங்கூந்தல் அலைபாய...
நரை முடியை ரசாயனப் பொருட்கள் இன்றி இயற்கையாகக் கருமையாக மாற்ற அவுரி மிகச் சிறந்தது. அவுரிப் பொடியுடன் (Indigo Powder) சிறிதளவு மைதா அல்லது உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்துத் திக்கான பேஸ்டாகக் கலந்து கொள்ளவும். ஏற்கனவே மருதாணி (Henna) தடவி அலசிய தலைமுடியில் இந்த அவுரிப் பேக்கைத் தடவி, 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து அலசினால் வெள்ளை முடி இயற்கையான கருமை நிறத்திற்கு மாறும்.
அவுரி இலைப்பொடி அல்லது அதன் காய்ந்த விதைகளை அரைத்த பொடியுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் சேர்த்துச் சிறு தீயில் காய்ச்சவும். எண்ணெய் ஆறியதும் தலையின் வேர்க்கால்களில் தேய்த்து மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். இது பொடுகைக் கட்டுப்படுத்தி, முடியின் வேர்களை வலுவாக்கும்.
அவுரிப் பொடியுடன் சமஅளவு கறிவேப்பிலை பொடி மற்றும் மோர் அல்லது கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதைத் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்துச் ஷாம்பு போட்டு அலசினால், முடி உதிர்வது நின்று வேகமாக வளரத் தொடங்கும்.
அவுரி விதை, நெல்லி முள்ளி, செம்பருத்திப்பூ இவற்றை சம அளவு சேர்த்து அரைத்து நான்கு மணி நேரம் இரும்பு பாத்திரத்தில் ஊறவைத்து தலையில் தடவினால் நரை கட்டுப்படும்.
மழைக்காலத்தில் சிலருக்கு பொடுகு வரும்
அது போன்றவர்கள் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து அதனுடன் வால் மிளகு, காய்ந்த வேப்பிலை, பிஞ்சு கடுக்காய் போன்றவற்றை பொடி செய்து எண்ணெயில் கலந்து சூடு செய்து வடிகட்டி வைத்து அந்த தெளிந்த எண்ணெய் மட்டும் தேய்த்து குளித்துவர பொடுகு நீங்கும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் பால் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
இரண்டு ஸ்பூன் சுத்தமான களிமண்ணுடன் வெள்ளரிச்சாறு கற்றாழைச்சாறு, இளநீர் தலா ஒரு ஸ்பூன் கலந்து தொடர்ந்து பூசினால் உட்கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்துவிடும்.
ஓமவல்லி இலைச் சாறுடன் சிறிது துளசிச்சாற்றை கலந்து மங்கு இருக்கும் இடங்களில் தடவினால் அது தினசரி மங்கி வருவதை காணலாம்.
புதினா, துளசி இலைகளை இளஞ்சூடான நீரில் போட்டு 15 நிமிடம் அதற்குள் கைகளை வைத்தால் நகங்களில் கிருமிகள் ஒட்டாது. நகச்சுத்தியும் வராது.
தாளம் போடுவது இசைக்கருவியில் வாசிப்பது போன்றவற்றை செய்ய ஆரம்பிக்கும் புதிதில் சில சமயங்களில் நகத்தில் சுருக்கம் விழுவதைக் காணலாம். அப்படி சுருக்கம் இருந்தால் விரல்களில் விளக்கெண்ணெய் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இப்படி செய்து வரும் பொழுது விரலின் சொரசொரப்பு நீங்கி நகங்கள் பளிச்சிடும். நக சுருக்கம் போய்விடும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப்பழத்துடன் பன்னீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இப்படி செய்யும் பொழுது கருமை மறைந்து முகம் பளபளப்பாகும்.
இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனில் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
அதிமதுரம், ஜாதிக்காய், வசம்பு ஆகியவற்றை மைபோல் அரைத்து அதில் பன்னீர் கலந்து பருக்கள் மீது தடவி வந்தால் பரு அமுங்கிவிடும். வடு ஏற்படாது.
முகத்தில் ஒரு வறட்சி மற்றும் சுருக்கம் தெரிந்தால் முட்டையின் வெள்ளை கருவில் தேன் கலந்து கண்கள் தவிர்த்து முகம் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் தோல் சுருக்கங்கள் வறட்சி நீங்கி முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்.
குளிர், மழைக்காலத்தில் எண்ணெய் பசை உள்ள சருமம் சாதாரண சருமமாகவும் சாதாரண சருமம் வறண்ட சருமமாகவும் மாறிவிடும். இந்த நேரங்களில் அதிக பாதிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்குத் தான். தோலின் ஈரப்பசை குறைவதால் மினுமினுப்பு இல்லாமல் போகும். வறட்சி காரணமாக கருமை ஆகி கறுத்தும் போகலாம்.
இதற்கு காரணம் தாகம் அடிக்கவில்லை என்று மழைக்காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவோம். ஆதலால் தாகம் இல்லை என்றாலும் தண்ணீரை அதிகம் குடித்தால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மீளலாம். உடம்பு நீரேற்றத்துடன் இருந்தாலே நல்ல ஒரு பொலிவு கிடைக்கும்.
அவ்வப்பொழுது மாதுளம் பழம் சாப்பிடும்பொழுது அந்தச் சாற்றை கண்களுக்கு கீழே தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கண்களின் அடியில் இருக்கும் கருவளையம் நீங்கி கண்கள் பளிச்சிடும்.
கருவளையம் உள்ள இடங்களில் பன்னீரை தேய்த்தாலும் அந்த இடத்தில் உள்ள கருமை மாறும்.
மழைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை விட வெதுவெதுப்பான தண்ணீரில் அரோமா உள்ள லாவண்டர் ஆயில் ஒரு சில துளிகளை கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.
வாசகர்கள் பக்கவிளைவுகள் தரும் இரசாயனப் பொருட்கள் எவுமின்றி, சமையலறையில் இருக்கும் எளிய இயற்கைப் பொருட்களைக் கொண்டே பிடிவாதமான முடி, சருமம் மற்றும் நகப் பிரச்சினைகளுக்கான அழகு குறிப்புகள் பெறுவர்.