

ஒவ்வொருவருக்கும் கண்கள் என்பது மிக மிக முக்கிய பொறுப்பாகும். எனவே கண்களை நாம் அதிக கவனத்துடன் கவனித்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒருவரின் முக அழகு அவர்களின் கண்களைப் பொறுத்தே அமையும்.
எனவே அழகான கண்கள் அமைவது நம் முகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. கண்களின் ஆரோக்கியமே அழகை மேம்படுத்துகிறது.
அதிக நேரம் டி.வி. பார்த்தாலோ, கணினி, செல்ஃபோன், புத்தகம் வாசித்தாலோ, போதிய வெளிச்சம் இல்லாமல் புத்தகம் வாசித்தாலும் கண்களுக்கு சோர்வு ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்படும்.
உணவுகள்:
கண் பார்வைக்கேற்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். விட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளான கீரை, கேரட், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள் பால், பால் வகைப் பொருட்கள் மாமிசம் ஆகியவற்றில் இந்த சத்து உள்ளது.
சோர்வை அகற்ற சில வழிகள்:
கண்களை மூடிக்கொண்டு, இரு கைகளையும் கண்களின் மீது குவித்து சிறிது கூட வெளிச்சம் தெரியாமல் இருட்டாக இருக்கும்படி செய்து அந்த இருட்டிலேயே விழிகளை மட்டும் அசைத்து பயிற்சி அளிப்பதன் மூலம் கண்களின் சோர்வை அகற்றலாம்.
கண்களுக்கு சோர்வு ஏற்படும் நேரங்களில் 10 நிமிடம் கண்களை நன்றாக மூடி அமைதியாக உட்கார்ந்து இருந்துவிட்டு பிறகு மீண்டும் வேலைகளை கவனிக்கலாம்.
கண் இமைகளின் மீது ஓர் ஈரத்துணியை வைத்துச் சிறிது நேரம் ஒத்தியெடுத்தால் கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் கண்களுக்கு ஏற்பட்ட சோர்வு நீங்கும்.
கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடன் இருக்க தினமும் இரவில் விளக்கெண்ணெயை ஒன்று இரண்டு சொட்டுகள் விட்டு வரவேண்டும்.
பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.
கண்கருவளையம் நீங்க சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து இரவில் பூசி வந்தால் விரைவில் மறையும்.
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களை மூடி வைத்து கண்ணிற்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.
கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலை சாற்றை பூசி வந்தால் கட்டி கரையும்.
நந்தியாவட்டைப் பூவை நீரில் கழுவி வெள்ளத்துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டி வர கண்கள் பிரகாசமாகும். அப்பூவை தண்ணீரில் கழுவி கண்களின் மேல் ஒற்றி எடுக்க கண்கள் குளிர்ச்சி அடைந்து பிரகாசமாகும்.
உருளைக்கிழங்கு அரைத்து கண்களை சுற்றி கண்களை மூடி மேலும் பேக் மாதிரி போட்டால் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசம் அடையும்.
வெண்ணெயுடன் கொத்தமல்லி சாறை கலந்து கண்களைச் சுற்றி பேக் போட்டால் கண்களின் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
தேயிலைத்தூளை கொதிக்க வைத்து வடிகட்டி தூளை வெள்ளை துணியில் கட்டி கண்களின் மேல் வைத்து வந்தாலும் கருவளையம் நீங்கி கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
கண்களை இடது வலமாக, மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு ஐந்து முதல் ஆறு முறை செய்ய வேண்டும்.
பின் கண்களை இறுக்கமாக மூடி திறக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும் இதை கண்களுக்கான சிறந்த பயிற்சி.
இந்த எளிய முறையால் கண்களுக்கான பயிற்சி மற்றும் எளிய வழிகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம்.
டிஜிட்டல் திரைகளால் சோர்வடைந்த கண்களுக்குப் புத்துயிர் அளித்து, கருவளையங்களை இயற்கையாக விரட்டி, பார்வையைப் பாதுகாக்க உதவும் எளிய மற்றும் பாரம்பரிய முறைகள்.