ஓட்ஸ் சாப்பிட்டா மட்டும் போதாது... முகத்தில் தடவினால் நடக்கும் அதிசயம் தெரியுமா?

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களை நீக்கி இயற்கை பொலிவு தரும் எளிய வீட்டு வைத்திய முறைகள்.
ஓட்ஸ்
ஓட்ஸ்Gemini image
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

லோரி குறைந்த ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதுபோல், சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதால் முகத்தில் மினுமினுப்பை  கூட்டவும் பளிச் சருமத்தை பெறவும் ஓட்ஸ் உதவுகிறது.

ஓட்ஸில் இருக்கும் செபோனின் இயற்கையாக சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சென்று வைக்கிறது. சரும துளைகளில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும் பணிபுரிகிறது.

சருமத்தின் ஆரோக்கியத்தை எப்போதும் பராமரிக்க இந்த ஓட்ஸ் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் இதயநோய்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இது அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

முகப்பரு நீங்க

ஓட்ஸில் ஜிங்க் என்ற பொருள் உள்ளது. இது சரும அழற்சிக்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது.

இதனால் பருக்கள் வருவது கட்டுப்படுத்தப்படும். சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதால் முகப்பரு வருவதும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

அரைக்கப் ஓட்ஸ் எடுத்து அதே அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஆறியபின் அதை நன்றாக கலக்கி பேஸ்ட் ஆக்கி முகத்தில் அப்ளை செய்துகொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நேரில் கழுவி வர முகப்பரு நீங்கும்.

சருமம் பொலிவாக

ஓட்ஸ் மீல், வெது வெதுப்பான நீர், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கரப் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மென்மையான துணிகொண்டு முகத்தை துடைத்து எடுத்து கழுவிவர முகம் பொலிவாகும். வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ஓட்ஸ்
ஓட்ஸ்Gemini image

கரும்புள்ளிகள் நீங்க

ஓட்ஸில் உள்ள செபோனின் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. சரும துளைகள் அடைப்பட்டிருக்கும் கரும்புள்ளிகளை விரட்ட போன்ஸ் பயன்படுகிறது. அடைபட்ட சருமத்துளைகள் திறந்து சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்விடும்.

ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல், தயிர் 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் மட்டும் வைத்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

வறண்ட சருமம் மென்மை பெற

ஓட்ஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வறண்ட சருமம் நீங்கி சருமம் மென்மை பெறும். ஓட்ஸ் மீல் 2 டேபிள் ஸ்பூன், 1 ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ரெண்டு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகும்.

சருமத்தை மென்மையாக்க தயிருடன் ஓட்ஸ் சேர்த்து கெட்டியான பேஸ்ட் ஆக்கி குழைத்து கண் மற்றும் உதடு பகுதிகளை தவிர்த்து இதரப் பகுதிகள் அனைத்திலும் தடவி குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் மென்மையாகும்.

சரும அழுக்கு நீங்க

கடலை மாவு, ஓட்ஸ் தலா ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சிறிது. இதனை ஒன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து, காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவி பின் மாயசரைசர் தடவினால் சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி சுத்தமாக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
முகப்பருவை விரட்டி இயற்கையான அழகைப் பெற எளிய வீட்டு வைத்தியம்!
ஓட்ஸ்

முகத்தின் பொலிவைக் கூட்ட

பாதாம் பருப்பு மூன்று, பால் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஓட்ஸ் மீல் ஒரு டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பை தூளாக்கி, அதனுடன் பால் ஓட்ஸ் சேர்த்து கலந்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகத்தின் நிறத்தை மாற்றி பொலிவை கூட்டுகிறது.

ஓட்ஸ் எல்லா சரும வகைக்கும் ஏற்றது. பெரிய சருமத் துறைகளை சுருக்கி சின்னதாக மாற்றி ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவுகிறது. சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஓட்ஸ் மிகச்சிறந்த இயற்கை பொருளாக பயன்படுகிறது.

சரும துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை ஓட்ஸ் மென்மையாக நீக்குகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து வறண்ட தன்மையை போக்குகிறது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை உறிஞ்சி பருக்கள் வருவதையும் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
முகத்தின் வசீகரத்தை கூட்டும் கன்னங்கள்! அழகை கெடுக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி!
ஓட்ஸ்

ஓட்ஸில் நம் உடலின் இறந்த செல்களை எதிர்த்து புதுப்பிக்கக்கூடிய பண்பு இருப்பதாலும் மேலும் அடைந்த துளைகளை நீக்கி சருமத்தின் மென்மையாகவும் வைக்கக்கூடியது. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமம் சிவத்தல் மற்றும் அழற்சியை குறைத்து சரும ஆரோக்கியத்தை சீராக்கும்.

ஓட்ஸை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள மாசு, மரு நீங்கி பிரமாசமான முகமாகும். சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் கொடுக்கக்கூடியது.

இந்த எளிய ஓட்ஸ் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், செலவில்லாமல் வீட்டிலேயே முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி பளிச்சின மின்னும் மிருதுவான சருமத்தைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com