ஏ.சி கூட தோத்துடும்... சருமத்தை ஜில்லுனு மாத்தும் 5 சூப்பர் ஐடியாஸ்!

Summer Skincare
Summer Skincare
Published on

வெயில் காலம் வந்துவிட்டாலே நமது சருமம் வறண்டுபோய், கருத்துப்போய் பல பிரச்னைகளை சந்திக்க ஆரம்பிக்கும். உடனே நாம் கடைகளில் விற்கும் விலையுயர்ந்த கெமிக்கல் கிரீம்களை வாங்கி முகத்தில் பூசத் தொடங்கிவிடுவோம். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நமது பாட்டிகள் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான பொருட்களை வைத்தே வெயிலை மிக எளிதாக சமாளித்தார்கள். 

அந்த அற்புதமான வழிகளை நாம் காலப்போக்கில் சுத்தமாக மறந்துவிட்டோம். லேப்டாப் முன்பாக நாள் முழுவதும் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வெயிலில் அலைபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் சில பழைய காலத்து ஸ்கின் கேர் ரகசியங்களை இப்போது பார்க்கலாம்.

மறக்கப்பட்ட 5 இயற்கையான குறிப்புகள்!

1. சந்தனம் + பன்னீர்: பழைய படங்களில் எல்லாம் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். ஒரிஜினலான சந்தனக்கட்டையை உரைத்து, அதில் கொஞ்சம் சுத்தமான பன்னீர் கலந்து முகத்தில் தடவினால், ஏசி ரூமில் இருப்பதுபோல முகம் அவ்வளவு ஜில்லென்று மாறிவிடும். வெயிலால் முகத்தில் வரும் எரிச்சலை இது உடனடியாக குறைத்து ஒரு பெரிய நிம்மதியை கொடுக்கும்.

2. வெட்டிவேர் தண்ணீர் ஸ்ப்ரே: வெட்டிவேரின் வாசனை பலருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஒரு கைப்பிடி வெட்டிவேரை இரவே தூய தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். வெயிலில் வெளியே சென்று வந்ததும் இதை முகத்தில் அடித்தால், முகம் ரொம்பவே பிரெஷ் ஆகி புத்துணர்ச்சி பெறும்.

இதையும் படியுங்கள்:
வெறும் பாட்டில் இருந்தால் போதும்.. வீட்டிலேயே வளர்க்கலாம் ப்ரெஷாக புதினா!
Summer Skincare

3. முல்தானி மிட்டி + புதினா: முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த இது ஒரு சூப்பரான வழி. புதினா இலைகளை அரைத்து அதன் சாற்றை முல்தானி மெட்டியுடன் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி காய்ந்ததும் மெதுவாக கழுவினால், சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.

4. வெள்ளரி + கற்றாழை ஜெல்: வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் வீட்டில் வளர்க்கும் கற்றாழையின் ஜெல்லை கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்யலாம். இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், வெயிலால் ஏற்பட்ட கருமையையும் ரொம்ப சீக்கிரமாகவே நீக்கி உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

5. தயிர் + கடலை மாவு: இது ரொம்ப காலமாகவே பல வீடுகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிம்பிளான ட்ரிக். புளித்த தயிரில் கொஞ்சம் கடலை மாவு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி மெதுவாக தேய்த்து குளிக்க வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கும், அதே வேளையில் கடலை மாவு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி செம பிரகாசத்தை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நந்தி பகவானுக்கு அழகு அபிஷேகம்... காண கண் 'கோடி' வேண்டும்!
Summer Skincare

விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களை தேடி ஓடுவதை விட, நமது வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது எப்போதுமே ரொம்பவே பாதுகாப்பானது. இந்த ஐந்து குறிப்புகளும் செய்வதற்கு மிகவும் எளிமையானவை, அதே சமயம் கோடைக்காலத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த பலனை தரக்கூடியவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com