பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் வடிவமைக்கப்படும் டெரகோட்டா நகைகள்

இளம் பெண்கள், தாங்கள் அணியும் உடையின் நிறத்திற்கு ஏற்ப, அணிகலன்களும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
Terracotta jewelry
Terracotta jewelryimage credit - ozogama.lt
Published on

பெண்கள் தாங்கள் அணியும் ஆடை முதல் அணிகலங்கள் வரை தனித்துவமாகவும், அனைவரும் பாராட்டும் வகையிலும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் விரும்புவது பல வண்ணங்களில் வரும் களிமண்ணால் செய்யப்பட்ட டெரகோட்டா நகைகளை தான். ஏனெனில் டெரகோட்டா நகைகளை அணிந்து கொண்டால் பார்க்க அழகாக இருப்பது மட்டுமில்லாமல் கௌரவ தோற்றத்தையும் கொடுக்கிறது.

களிமண்ணைச் சுட்டுத் தயாரிக்கப்படும் டெரகோட்டா நகைகள், கைவினை அழகை வெளிப்படுத்துகின்றன. இவை பாரம்பரிய மற்றும் நாகரீகமான உடைகளுக்கு ஏற்றவை. டெரகோட்டா நகைகள், ஃபேஷன் உலகில் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பூனைகளுடன் நட்பாக பழகும் 7 நாய் இனங்களைப் பற்றி தெரியுமா?
Terracotta jewelry

டெரகோட்டா செய்வதற்கான களிமண்ணில் நகையை செதுக்க வேண்டும். பின்னர் அதை அறை வெப்பநிலையில் உலர வைத்த பின்பு நெருப்பில் சுட்டு எடுக்க வேண்டும். அது முடிந்ததும் நகையின் மேல் நமக்குத் தேவையான வண்ணங்களைத் தீட்டலாம். இவ்வாறு ஒரு நகையைத் தயாரித்து முடிக்க 5 முதல் 6 நாட்களாகும். வெறும் 1500 ரூபாய் செலவிலேயே, டெரகோட்டா நகைகளை வடிவமைக்க முடியும்.

ஒவ்வொரு டெரகோட்டா கலைஞரும் அடிக்கடி டிசைனை அப்டேட் செய்து கொண்டே இருப்பதால், ஆண்டுகள் கடந்தும் டெரகோட்டா நகைக்கு மவுசு இன்னும் குறையால் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் கலைநயமான டெரகோட்டா நகைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களிடையே வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

டெரகோட்டா நகைகள் செய்ய, பொறுமை மிக மிக அவசியம். ஆனால் தற்போது பலரும், மோல்ட் அச்சில் வைத்து டெரகோட்டா நகைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டனர். மோல்ட்டில் செய்வதை விட கையில் செய்வது தான் அழகிய கலைநயத்துடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க... உடற்பயிற்சியா? யோகாவா?
Terracotta jewelry

இளம் பெண்கள் அணியும் உடையின் நிறத்திற்கு ஏற்ப, அணிகலன்களும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை டெரகோட்டா நகைகள்தான் பூர்த்தி செய்கின்றன. ஒருசிலர், வாங்கும் புதிய ஆடைக்கு மேட்சிங்கான, நகைகளை மேட்சிங்கான கலரில் செய்ய ஆர்டர் கொடுக்கிறார்கள்.

நெத்திச்சுட்டி முதல் கால் கெலுசு வரை, திருமண நகைகள் என்ற பெண்கள் விரும்பும் நகைகளை, டெரகோட்டா நகைகளாக உருவாக்க முடியும். டெரகோட்டா நகைகள் ரூ. 80 யில் இருந்து தொடங்கி, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அந்தந்த காலகட்டத்தில் டிரெண்டாக இருக்கும் தங்க நகை கலெக்‌ஷன்களை, அச்சு அசலான டெரகோட்டா நகைகளாக உருவாக்கி, அதில் தங்க நிற வண்ணங்களை இழைந்தோடச் செய்து, தங்க நகைக்கே சவால் விடும் வகையில் பிரம்மிக்க வைக்கும் அணிகலங்களை உருவாக்குகிறார்கள் டெரகோட்டா கலைஞர்கள். அதுவே திருமண நகைகள் என்றால், பெயிண்டிங் மற்றும் பினிஷிங் வேலைப்பாடுகளில் அதீத கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளும், டெரகோட்டா கலைப்படைப்புகளுக்கு ரசிகைகளாக மாறி, சுடுமண் படைப்புகளான டெரகோட்டா நகைகளை ஆர்வத்துடன் விரும்பி அணிந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் இணைந்த பிரபல நடிகை
Terracotta jewelry

எல்லா பெண்களுக்குள்ளும், ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். பெண்கள் வேலைக்கு சென்று தான் சாம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெரகோட்டா போன்ற கைவினை தொழிலை கற்றுக்கொண்டால் வீட்டிலிருந்தே ஆண்களுக்கு நிகராக சம்பாதித்து குடும்பத்தை தலைநிமிர்ந்து வாழ வைக்க முடியும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com