பூனைகளுடன் நட்பாக பழகும் 7 நாய் இனங்களைப் பற்றி தெரியுமா?

dog breeds friendly with cats
dog breeds friendly with catsimage credit - Greenfield Puppies
Published on

பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஏனெனில் நாய்க்கு தன்னை விட சிறிய விலங்கான பூனையை விரட்டும் போது அது பயந்து ஓடுவதை பார்க்க அலாதி பிரியம். ஆனால் பூனைக்கோ எங்கே தன்னை நாய் கொன்று விடுமோ என்ற பயத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடும். ஏனெனில் ஒரு நாயுடன் சண்டையிட முயன்றால் தான் காயமடையலாம் என்று பூனைக்கு தெரியும்; எனவே, பூனை உடனடியாக தன்னை தற்காத்துக் கொள்ள ஓடி ஒளியும். ஆனால் நிச்சயமாக நாய்கள் மற்றும் பூனைகள் எப்போதும் எதிரிகள் அல்ல.

உண்மையில் சில நாய் இனங்கள் வியக்கத்தக்க வகையில் பூனைக்கு நட்பானவை. நாய்களால் பூனையுடன் நட்பாக அமைதியான, அன்பான சூழலை உருவாக்க முடியும். பூனைகளுடன் நட்பாக பழகுவதற்கு அறியப்பட்ட சில நாய் இனங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
"இது எதையும் நீங்க செய்ய போறது இல்ல..." அனைவர் வாயையும் அடைத்த ஸ்ருதிஹாசன்
dog breeds friendly with cats

* பீகிள்ஸ் (beagle dog) நாய்கள் இயற்கையாகவே சமூக நாய்கள், அவை பூனைகள் உட்பட மற்ற செல்லப்பிராணிகளுடன் நன்றாகப் பழக முடியும். பீகிள்ஸ் நாய்கள் வேட்டையாடும் திறன் கொண்டவை என்பதால் சிறிதாக இருக்கும் போதே பூனையை அறிமுகம் செய்தால் மட்டுமே நட்புடன் பழகும். இல்லையெனில் பூனையை துரத்த ஆரம்பிக்கும்.

* பூனைகளுடன் வாழ்வதற்கு ஏற்றது பாசெட் ஹவுண்ட் (basset hounds dog). இவை பொதுவாக பூனைகளுடன் நன்றாக பழகும். ஏனெனில், அது அவற்றின் அமைதியான மற்றும் எளிதான இயல்பாகும். பாசெட் ஹவுண்ட் நாய்கள் பெரும்பாலும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கொண்டவை. இவை, பூனையை துரத்தவோ அல்லது தொந்தரவு செய்யவோ வாய்ப்பில்லை என்பதால் பூனைகள் உள்ள வீடுகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
‘பராசக்தி’யால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்!
dog breeds friendly with cats

* கோல்டன் ரெட்ரீவர் (golden retriever dog ) பொதுவாக பூனைகளுடன் நட்பாக இருக்கும் ஒரு சிறந்த நாய் இனமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அவை அவற்றின் பொறுமை, நட்பு மற்றும் அமைதியான நடத்தைக்கு பெயர் பெற்றவை. பெரும்பாலும் பூனைகளுடன் அமைதியாக இணைந்து வாழக்கூடியவை. இருப்பினும், ஒரு இணக்கமான உறவை உறுதிப்படுத்த சரியான அறிமுகம் மற்றும் கவனமாக மேற்பார்வை இன்னும் அவசியம்.

* லாப்ரடோர் ரீட்ரீவர் நாய்கள் (Labrador retriever) பூனையுடன் உறவினர்களைப் போலவே நட்பாகவும் எளிமையாகவும் இருக்கின்றன. அவற்றின் நட்பு மற்றும் விளையாட்டுத்தனமான இயல்பு காரணமாக பூனையுடன் நெருங்கிய பிணைப்பை உருவாக்குகின்றன. அவை பெரும்பாலும் பூனைகளுடன் இணைந்து வாழ்வதற்கான சிறந்த நாய் இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி; ஆட்டநாயகன் திலக் வர்மா!
dog breeds friendly with cats

* கேவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல் (cavalier king charles spaniel dog) பாசமுள்ள, மென்மையான மற்றும் அச்சமற்ற சிறிய நாய்கள். பொதுவாக பூனைகள் இருக்கும் வீட்டிற்கு இவை சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவற்றின் மென்மையான இயல்பு மற்றும் நட்பு காரணமாக, பூனைகள் மற்றும் மற்ற விலங்குகளுக்கு அற்புதமான தோழர்கள் மட்டுமல்ல, மற்ற விலங்குகளையும் நேசிப்பவை. நாய்களுக்கு ஆற்றல் இருந்தபோதிலும், அவர்கள் பூனைக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பூனை மற்றும் பிற விலங்குகளுக்கு செல்லத் தோழர்களாக இருக்கின்றன.

* பக்ஸ் (pug dog) சிறிய உடலில் நிறைய அன்பை கொண்ட விலங்காகும். பக்ஸ் பொதுவாக பூனைகளுடன் மிகவும் நன்கு பழகக்கூடியவையாகவே கருதப்படுகின்றன. இதன் விளையாட்டுத்தனம், இயல்பு, நேசித்தல் மற்றும் பூனைகளை இரையாகப் பார்க்காத போக்கு ஆகியவற்றின் காரணமாக பூனைகளுடன் நட்புப் பிணைப்பை உருவாக்குகின்றன; பூனைகள் உள்ள வீட்டிற்கு பக்ஸ் ஒரு சிறந்த தேர்வாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இளையராஜாவின் சிம்பொனி இசை பயண வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல்
dog breeds friendly with cats

* புல்டாக் (bulldog dog) மற்ற உயிரினங்களுடன் நட்பாக இருக்கிறது. நட்பான குணம் காரணமாக, புல்டாக் பொதுவாக பூனைகளுடன் நன்றாகப் பழக முடியும். எவ்வாறாயினும், சரியான அறிமுகம் மற்றும் மேற்பார்வை முக்கியமானது, ஏனெனில் எந்தவொரு நாயும் பூனையை அதன் ஆளுமை மற்றும் சமூகமயமாக்கலின் அளவைப் பொறுத்து இரையாகப் பார்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com