5 நிமிடத்தில் அசத்தல் லுக்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான எளிமையான ஹேர் ஸ்டைல்கள்!

trendy-hair-styling
trendy-hair-styling
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தினசரி மற்றும் விசேஷ நாட்களுக்கு ஏற்ற எளிமையான ஹேர் ஸ்டைல்கள் நிறைய உள்ளன. ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய டோனட் பன், கிளாசிக் போனிடெயில், சைடு பிரைடுகள் மற்றும் கர்லிங் ஹேர் ஸ்டைல்கள் டிரெண்டில் உள்ளன. கூந்தலை ஆரோக்கியமாக வைத்து, ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஹீட் ப்ரொடெக்டன்ட் பயன்படுத்துவது முக்கியம்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலை நேர அவசரத்தில், நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தக்கூடிய ஹேர் ஸ்டைல் டிப்ஸ்கள் இவை.

பெண்களுக்கான எளிமையான ஹேர் ஸ்டைல் டிப்ஸ்:

டோனட் பன் (Donut Bun):

முடியை நன்கு சீவி தேவையான உயரத்தில் ஹேர்பேண்ட் கொண்டு போனிடெயில் போடவும். முடியின் வழியாக டோனட் பன் மேக்கரை நுழைத்து, முடி அடிப்பகுதி வரை கொண்டு வந்து டோனட் தெரியாதவாறு போனிடெயில் முடியை டோனட் மேக்கரின் மீது பரப்பி, மீண்டும் ஒரு ஹேர் பேண்ட் கொண்டு டோனட்டைச் சுற்றி முடியை மறைத்துக் கட்டினால், ஐந்து நிமிடத்தில் நேர்த்தியான பன் தயார். இது நடுத்தர மற்றும் நீளமான முடிக்கு ஏற்றது.

மெஸ்ஸி பன்(Messy Bun):

இதில் பல வகைகள் உள்ளன. கிளாசிக் லோ மெஸ்ஸி பன்(Classic low Messy Bun): தலைமுடியை பின்னி, கழுத்துப் பகுதிக்கு அருகில் மென்மையாக சுருட்டி, ஹேர்பின் மூலம் குத்த வேண்டும். இது புடவை மற்றும் லெஹங்காக்களுக்கு ஏற்றது.

ஹை டாப் நாட் (High Top Knot):

தலைமுடியை தலைமுடியின் உச்சியில் உயரமாக போனிடெயில் போட்டு அதை மெஸ்ஸியாக சுருட்டி பின் செய்யவேண்டும்.

கர்லி மெஸ்ஸி பன் (Curly Messy Bun):

சுருள் முடி உள்ளவர்கள் அல்லது கர்லர் பயன்படுத்திய பின் மெஸ்ஸி பன் போடுவது அதிக கவர்ச்சியைத்தரும்.

இவை அன்றாட பயன்பாட்டிற்கும், விழாக்களுக்கும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
சிம்பிள் லுக்... செம கெத்து! வெயிலுக்கும் பார்ட்டிக்கும் ஏற்ற நவீன ஹெட்பேண்ட்கள்!
trendy-hair-styling

ட்விஸ்ட் & ராப் போனிடெயில் (Twist & Wrap):

இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் செய்வதற்கு 5 நிமிடங்களே போதும். முடியை உயரமாக அல்லது தாழ்வாகக் கட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கவும். இரண்டு பிரிவுகளையும் தனித்தனியாக ரோப் போல சுருட்டவும். இந்த இரண்டு சுருட்டப்பட்ட பிரிவுகளையும் ஒன்றோடொன்று சேர்த்து இறுக்கமாக சுருட்டி இறுதியில் ஹேர் பேண்ட் போட விரைவில் சூப்பரான ஹேர் ஸ்டைல் தயார்.

பார்ட்டி லுக் (Party Look):

ஓபன் ஹேர் உடன் முன்னால் சிறிய பிரெய்ட்ஸ் (Braid) அல்லது கர்ல்ஸ் (Curls) செய்து கொள்ளலாம்.

ட்விஸ்ட் ஹேர்ஸ்டைல்:

முகத்தின் இருபுறமும் உள்ள முடியைச் சுருட்டி பின்புறம் கொண்டு வந்து 'பாபி பின்கள்'(Bobby pins) மூலம் சரிசெய்யலாம்.

ஹாஃப் அப் ட்விஸ்ட் (Half Up Twist):

தலைமுடியின் மேல் பாதியை மட்டும் எடுத்து, அதை இரு பிரிவுகளாகப் பிரித்து ட்விஸ்ட் செய்யவும். பிறகு அதனை பின்புறம் கிளிப் போட எளிய மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தரும்.

குமிழி போனிடெயில் (Bubble Ponytail):

வழக்கமான போனிடெயிலுக்கு பதிலாக, முடியை ட்விஸ்ட் செய்து, இடைவெளியில் ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்தி குமிழ்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கலாம்.

முடி பராமரிப்பு மற்றும் ஸ்டைலிங் டிப்ஸ்:

ஹீட் ப்ரொடெக்டனாட் (Heat Protectant):

ஸ்ட்ரைட்டனிங் அல்லது கர்லிங் செய்வதற்கு முன்பு கண்டிப்பாக சீரம் அல்லது ஹீட் ப்ரொடெக்டன்ட் ஸ்பிரே பயன்படுத்தவும்.

கண்டிஷனர் பயன்பாடு:

கண்டிஷனரை முடி நுனியில் மட்டும் தடவவும். வேர்க்கால்களில் தடவுவதை தவிர்க்கவும்.

வால்யூம் (Volume):

கூந்தல் அடர்த்தியாகத் தெரிய ஹேர் மவுஸ்(Hair Mousse) பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை! நீங்கள் அணியும் 'ஹை வேஸ்ட்' ஜீன்ஸ் இவ்வளவு பிரச்னைகளைத் தருமா?
trendy-hair-styling

அலங்காரம் (accessories):

பன் போடும் பொழுது பூக்கள், ஸ்டைலான ஹேர்பின்ஸ் அல்லது பந்துகளான அலங்காரங்களைப் பயன்படுத்தலாம்.

தலையில் ஹேர் பேண்ட், ஜியோமெட்ரிக் கிளிப்புகள் அல்லது அழகான ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்தி சாதாரண ஹேர் ஸ்டைலையும் அழகாக்கலாம். இந்த ஸ்டைல்கள் அனைத்தும் 5-10 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கக் கூடியவை.

logo
Kalki Online
kalkionline.com