உலகின் நீளமான கடற்கரைகள்: உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடங்கள்!

இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்தும் உலகின் 10 மிக நீளமான மற்றும் ரம்மியமான கடற்கரைகள் இதோ.
Beach | கடற்கரை
Beach | கடற்கரைAI Image

கடற்கரையின் அழகு எல்லோரையும் ஈர்க்கிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கும் அமைதியைத் தேடுபவர்களுக்கும் சிறந்த இடமாக கடற்கரை கருதப்படுகிறது‌. உலகில் சில கடல்கள் மிக நீளமானதாக அறியப்படுகின்றன. மிக நீளமான ரம்யமான கடற்கரைகள் சிலவற்றைக் காண்போம்...

1. ப்ரேயா டோ காசினோ - பிரேசில்

Praia do Cassino - Brazil | கடற்கரை
Praia do Cassino - Brazil | கடற்கரை

இது கிராண்டோ பகுதியில் உள்ளது‌. நீளமான கடலாகக் கருதப்படுகிறது. இது 254 கி.மீ தூரம் பரவியுள்ளது. ரியோ கிராண்டேயிலிருந்து உருகுவே வரை நீண்டதாக உள்ளது‌. இந்த கடலின் வெள்ளை மணல் விசேஷமானது‌. மிகவும் மிருதுவாக இருக்கும்.

2. எண்பது மைல் கடல் - ஆஸ்திரேலியா

Eighty Mile Beach - Australia | கடற்கரை
Eighty Mile Beach - Australia | கடற்கரை

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள இது, சுமார் 220 கி.மீ நீளம் வரை பரவியுள்ளது. இந்தி இடம் மிக ரம்மியமான சூழலைக் கொண்டது‌. ஒவ்வொரு வருடமும் சுமார் 5 லட்சம் பறவைகள் இங்கு வருகின்றன.

3. நைன்டி மைல் கடல் - ஆஸ்திரேலியா

Ninety Mile Beach - Australia | கடற்கரை
Ninety Mile Beach - Australia | கடற்கரை

உலகிலேயே நீளமான கடலாகக் கருதப்படுகிறது‌. 90 மைல் நீளம் பரவி கிப்ஸ்லாந்து ஏரி மற்றும் பாஸ் ஸ்ட்ரெயிட்டையும் பிரிக்கிறது. இது நீர் வாழ் இனங்களுக்கு சொர்க்கமாகும். இங்கு 860 வகை நீர் வாழ் விலங்கினங்கள் உள்ளன.

4. காக்ஸ் பாஜார் பீச் - பங்களாதேஷ்

Cox's Bazar Beach - Bangladesh | கடற்கரை
Cox's Bazar Beach - Bangladesh | கடற்கரை

சுமார் 220 கி.மீ நீளம் உள்ளது‌. வங்காள விரிகுடா கடலோடு சேர்ந்து ஓடுகிறது‌. மாலை வேளை சூரியன் மறையும் சமயம் வெகு அழகான காட்சியைக் காண டூரிஸ்டுகள் இந்த கடற்கரையில் குவிகிறார்கள்‌. இதன் அருகே புத்த மடங்கள் உள்ளன.

5. நைன்டி மைல் கடற்கரை - நியூசிலாந்து

Ninety Mile Beach - New Zealand | கடற்கரை
Ninety Mile Beach - New Zealand | கடற்கரை

சுமார் 90 கி.மீ வரை நீண்ட கடலான இது நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ளது. மாவோரி என்ற பழங்குடியினர் வாழ்ந்த இடமாக இருந்த இது, தற்போது டூரிஸ்டுகளை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது‌. ஆழம் அதிகம் கிடையாது. மிக அமைதியான இடமாகக் திகழ்கிறது‌. டூரிஸ்டுகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது.

6. பத்ரே தீவு கடல் - அமெரிக்கா

Padre Island Sea - USA | கடற்கரை
Padre Island Sea - USA | கடற்கரை

அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் அமைந்துள்ள இது சுமார் 113 கி.மீ நீளம். இது உலகிலேயே அதிகம் வளர்ச்சியடையாத தீவாகக் கருதப்படுகிறது‌. இக்கடலில் நிறைய கடல் ஆமைகளைக் காணலாம். பல வகையான பறவைகள் இங்கு வருகின்றன. இங்கு மீன் பிடிப்பது, சர்ஃபிங் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம்‌.

7. கிராண்ட் ஸ்டிராண்ட் - அமெரிக்கா

Grand Strand - USA | கடற்கரை
Grand Strand - USA | கடற்கரைImg Credit: Condo-World Blog

சுமார் 96 கி.மீ நீளம் உடையது‌. தெற்கு கரோலினா பகுதியில் உள்ளது‌. இங்கு குடும்பமாக வந்து தங்கி மகிழ்கிறார்கள். உலக அளவில் கமெர்ஷியல் கடற்கரையாக திகழ்கிறது.

8. ப்ளேயா நொவில்லெரோ - மெக்சிகோ

Playa Novillero - Mexico | கடற்கரை
Playa Novillero - Mexico | கடற்கரை

வட அமெரிக்காவின் மிக நீண்ட கடற்கரையாக கருதப்படுகிறது‌. அதிக ஆழமில்லாதது. மிகவும் அமைதியான சூழல் நிலவும் இடமாக உள்ளது‌‌. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க ஏற்ற இடம்.

இதையும் படியுங்கள்:
கடற்கரை சிப்பிகளுக்குள் மறைந்திருக்கும் பழங்கால மனிதனின் வியக்கவைக்கும் அழகுணர்வு!
Beach | கடற்கரை

9. முய்சென் பெர்க் கடற்கரை - தென் ஆப்ரிக்கா

Muizenberg Beach - South Africa | கடற்கரை
Muizenberg Beach - South Africa | கடற்கரை

ஆப்ரிக்காவில் சுமார் 40 கி.மீ வரை உள்ள கடற்கரை‌. இங்கு வண்ணமயமான குடில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் விளையாட்டான சர்ஃபிங்கில் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
சர்வதேச அங்கீகாரம் பெற்ற கேரளாவின் ரகசிய கடற்கரை: இதில் இவ்வளவு சிறப்புகளா?
Beach | கடற்கரை

10. ஸ்டாக்டன் கடற்கரை - ஆஸ்திரேலியா

Stockton Beach - Australia | கடற்கரை
Stockton Beach - Australia | கடற்கரை

ஆஸ்திரேலியாவில் ந்யூ சௌத் வேல்ஸ் பகுதியில் உள்ளது‌. இங்கு கார்களில் செல்வதற்கும் மீன் பிடிப்பதற்கும் மக்கள் வருகிறார்கள். தண்ணீர் விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாக உள்ளது‌. டூரிஸ்டுகளை கவரும் இடமாகக் திகழ்கிறது.

logo
Kalki Online
kalkionline.com