'முப்பதில் முப்பது'... இது என்னது?

Ocean Protection
Ocean Protection
Published on

உலகிலுள்ள பெருங்கடல்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமேத் திறம்பட பாதுகாக்கப்படுகின்றன என்றும், அதனை மேலும் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து அரசு, 2010 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலின் ஒரு பெரிய பகுதியைப் பாதுகாப்பிற்காக ஒதுக்கியது. 6,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய கடல் சார் பாதுகாக்கப்பட்ட பகுதி, பூமியிலுள்ள மிகப் பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கடல் ஆமைகள் அதிக அளவில் பெருகி வருவதாகவும், கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பச்சை ஆமைகள் 20,000-க்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கூடு கட்டும் கடல் பறவைகளும் செழித்து வருகின்றன. மேலும் அலைகளுக்கு அடியில் பவளப்பாறைகள் இப்போது 50 சதவீத பாறை மேற்பரப்புகளை உள்ளடக்கியது.

பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு பெருமளவில் வெற்றி பெற்று வரும் நிலையில், சட்டவிரோத மீன்பிடித்தல் நடக்கிறது என்பதையும், குறிப்பாக தரையில் உள்ள சமூகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இதைக் தவிர்க்கப் பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

உலகின் கடலில் 2.7 சதவீதம் மட்டுமே அதிக அளவிலான பாதுகாப்பால் மூடப்பட்டுள்ளது. ஆனால் பல அறிவியலாளர்களும் அரசாங்கங்களும் அதை 2030 ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர். புவியில் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் சுத்தமான, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் நிலையான கடல் சூழல்களை உருவாக்குவதே இதன் குறிக்கோளாக இருக்கிறது.

முப்பதில் முப்பது (30 by 30) என்பது 2030 ஆம் ஆண்டிற்குள் பூமியில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதியில் 30 சதவீதத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்காக பல்வேறு நாட்டு அரசுகள் முன்னெடுக்கும் ஓர் உலகளாவிய முயற்சியாகும்.

"இயற்கைக்கான உலகளாவிய ஒப்பந்தம்" என்ற 2019 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் கட்டுரை மூலம் இந்த இலக்கு முன்மொழியப்பட்டது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க விரிவாக்கப்பட்ட இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளின் அவசியத்தை இம்முன்னெடுப்பு எடுத்துக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டு உயர் லட்சியக் கூட்டணியால் தொடங்கப்பட்ட இம்முயற்சியை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சனவரி 2021 ஆம் மாதத்திற்குள் முயற்சிக்க ஒப்புக்கொண்டன. இந்த எண்ணிக்கை இதே ஆண்டு அக்டோபரில் 70 ஆக விரிவடைந்தது மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டு கூட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டது. செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு இம் முன்முயற்சிக்காக 5 மில்லியன் டாலர் நிதியுதவி, இப்புவியின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டது. இந்த முயற்சி பூர்வீக உரிமைகள் தொடர்பான சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது

கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பரந்த சமூகத்திற்கு முக்கியமான நன்மைகளை வழங்குகின்றன என்பது ஒரு முக்கியச் செய்தி. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடல் மற்றும் கடலோர பல்லுயிர் பெருக்கத்தை நம்பியுள்ளனர். கடல் காலநிலை மாற்றத்தையும் குறைக்கிறது. 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கடல் ஒவ்வொரு ஆண்டும் நமது கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் சுமார் 23 சதவீதத்தை உறிஞ்சுகிறது. ஆனால், பெரும்பாலான பெருங்கடல்கள் மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வெள்ளை மிளகின் பத்து பயன்கள்
Ocean Protection

வெப்பம் மற்றும் மாசுபாடு இப்போது கடலிலுள்ள வளங்களை அச்சுறுத்துகிறது. மேலும் அதிக மாசுபாட்டை உருவாக்குகிறது. அதே நேரத்தில், காலநிலை மாற்றம் நீரை வெப்பமாக்கி, அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும், ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து, உயிரினங்களை இடம் பெயரக் கட்டாயப்படுத்துகிறது.

கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கடலின் 30 சதவீதமாக விரிவுபடுத்துவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட பெருங்கடல் பகுதிகளில் மீன்பிடித்தலைத் தடை செய்யலாம், அதே போல் திரட்டுகளை பிரித்தெடுப்பது, அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் குப்பைகளைக் கொட்டுதல் ஆகியவற்றைத் தடை செய்யலாம் என்கின்றனர். இப்படிச் செய்யும் போது, கார்பன் டை ஆக்சைடை அகற்றும் கடலின் திறன் அதிகரிக்கும் என்கின்றனர். நீண்ட காலத்திற்கு, இது மீன்பிடி சமூகங்களுக்கு உதவும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் மீன் எண்ணிக்கை மீண்டும் உயரும் போது, அவை அருகிலுள்ள மீன்பிடித் தளங்களுக்குள் பரவி, மீன்பிடிப்பும் அதிகரிக்கும் என்கின்றனர்.

முக்கியமாக, கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் கடலின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருப்பதால், அதன் நன்மைகள் உள்ளூர் பகுதியிலிருந்து உலகளாவிய நிலைக்கு மாறுகின்றன. 30 சதவீத இலக்கு என்பது உலகம் முழுவதையும் பாதுகாக்கும் இலக்கு என்றும் குறிப்பிடுகின்றனர். கடல் சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதற்கேற்ப கடல் வளங்கள் மட்டுமில்லாது, உலகின் பெரும்பகுதி பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பெண்களை வசீகரிக்கும் பல்வேறு வகையான இந்தியப் புடவைகள்!
Ocean Protection

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com