தினசரி உபயோகப் பொருட்களில் நிறுவனங்கள் உங்களை ஏமாற்றும் 5 கிரீன்வாஷிங் தந்திரங்கள்!

Greenwashing tactics
Greenwashing tactics
Published on

மார்க்கெட்டிங்கில் கிரீன்வாஷிங் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று நுகர்வோரை நம்ப வைக்கும் வகையில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் தந்திரங்களைக் குறிக்கிறது. இதனால் நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்ப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சமையல் பொருட்கள், குழந்தைகளுக்கான பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட்டுகள், பற்பசை போன்றவற்றின் பேக்கிங்கில் பச்சை சின்னம் இருக்கிறதா என்று கவனிப்போம். அதில் தாவர அடிப்படையில் ஆனது, இயற்கை மூலப் பொருட்களை கொண்டு செய்யப்பட்டது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் உண்மை அல்ல. தங்கள் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளை பற்றி தவறான கூற்றுக்களை விளம்பரப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
வளர்ச்சியடைந்த கொரில்லாவை சிறைப்படுத்த முடியாது: வியக்க வைக்கும் தகவல்கள்!
Greenwashing tactics

கிரீன் வாஷிங்கை கண்டுபிடிக்க சில வழிகள்: இயற்கை சார்ந்த படங்கள்: நிறைய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கம்பெனிகள் தங்களுடைய தயாரிப்புகளின் புத்துணர்ச்சியை குறிக்கும் வகையில் கம்பீரமான நிலப்பரப்புகளின் படங்களை தங்கள் பேக்கேஜிங்கில் அச்சிடுகின்றன. இந்த ரேப்பர்கள் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று தவறான எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும். இவை ஆறுகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படுபவை.

தெளிவற்ற லேபில்கள்: நிறைய நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களில் கிரீன், எக்கோ பிரண்ட்லி, இயற்கையானது. சுத்தமானது, நச்சுத்தன்மையற்றது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, தாவர அடிப்படையில் ஆனது, ஆர்கானிக் போன்ற மார்க்கெட்டிங் லேபிள்களை பயன்படுத்துகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் அப்படியே நம்பக் கூடாது.

மாயத்தோற்றம்: சில நிறுவனங்கள் தமது பிராண்டுகள் பச்சை நிறத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. பிளாஸ்டிக் பை நிறுவனங்கள் முன்பை விட குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக அறிவிக்கின்றன. ஆனால். இது பிளாஸ்டிக் நல்லது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.

உடைகள்: ஆர்கானிக் பருத்தியால் செய்யப்பட்டவை என்பதற்கு பதிலாக எழுபது சதவீதம் கரிம பருத்தியால் தயாரிக்கப்பட்டது என்பது போன்ற சான்றிதழ்கள் மக்களை ஏமாற்றுபவையே.

இதையும் படியுங்கள்:
மழைக்காலம் தொடங்கியாச்சு மக்களே: உங்க வீட்டு செல்லப் பிராணிகள் பத்திரம்!
Greenwashing tactics

கிரீன் மார்க்கெட்டிங் மற்றும் கிரீன் வாஷிங் இடையே உள்ள வேறுபாடு: கிரீன் மார்க்கெட்டிங் என்பது நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சுற்றுச்சூழல் நேர்மறையின் அடிப்படையில் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வதாகும்.

கிரீன்வாஷிங் என்பது ஆர்கானிக் இயற்கை, பச்சை, சுற்றுச்சூழல் நட்பு போன்ற வார்த்தைகள் நுகர்வோரை குழப்பும் வகையில் லேபிள்கள் அல்லது லோகோக்கள் இருக்கும். ஆனால், அது உண்மை அல்ல. சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு நல்லது என்று மிகைப்படுத்தி சொல்லலாம். உண்மையான சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளில் இருந்து மக்களை திசை திருப்பும். மாசுபாட்டை குறைப்பது அல்லது வளங்களை பாதுகாப்பது போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சில பொருட்களை வாங்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உதவுவதாக நினைத்து மக்கள் ஏமாற்றப்படலாம்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தின் ரகசியம்: சுற்றுப்புறத்தையும் உணவையும் பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்!
Greenwashing tactics

நுகர்வோர் கிரீன் வாஷிங் தயாரிப்புகளை தவிர்ப்பது எப்படி? கிரீன் வாஷிங் தயாரிப்புகளை கண்டுபிடிப்பது சற்று சவாலான விஷயம்.

1. சுற்றுச்சூழலில் உண்மையாகவே அக்கறை இருக்கும் கம்பெனிகள் தங்களது சான்றிதழில் குதிக்கும் முயல், மழை பொழியும் காடுகள், தவளையின் படம் மற்றும் பச்சை முத்திரையோடு அதிகாரப்பூர்வமான சான்றிதழ்களை வெளியிட்டு இருப்பார்கள். சில நிறுவனங்கள் போலியாக சான்றிதழ் பெறுகின்றன.

2. நிறுவனத்தின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சாதனை மற்றும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும், அதனுடைய சான்றிதழ்களையும் சரி பார்க்க வேண்டும். லேபிள்களில் தெளிவற்ற சொற்கள் இருந்தால் அது குறித்து புகார் அளிக்கலாம்.

3. அறிமுகம் இல்லாத பொருட்களைத் தவிர்க்கலாம்.

4. வெறும் பச்சை நிற பேக்கேஜிங்கை மட்டும் பார்க்காமல் அதன் உற்பத்தி செயல்முறைகள், விநியோகச் சங்கிலிகள், ஒட்டுமொத்த கார்ப்பரேட் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விவரங்களை பார்க்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com