ஒரே செடியில் பல வண்ணங்கள்! பச்சோந்தி போல் நிறம் மாறும் 7 அதிசய பூக்கள்!

காலையில் வெள்ளையாகவும், மாலையில் சிவப்பாகவும் நிறம் மாறும் பூக்கள் பற்றி தெரியுமா? ஹைட்ரான்ஜியா முதல் லன்டானா வரை 7 அதிசய மலர்களின் பின்னணி.
பூக்கள் | Flowers
பூக்கள் | FlowersImage credit: Chatgpt
இந்திரா கோபாலன்

இந்திரா கோபாலன், பி.எஸ்சி பட்டதாரி. மங்கையர் மலரின் 40 ஆண்டுகால வாசகி; வாசக எழுத்தாளர். திருமணத்திற்குப் பின் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், பல இதழ்களுக்கு எழுதிப் பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

சில பூக்கள் காலையில் ஒருநிறம், மதியம் வேறு நிறம் ஆவதை கவனித்திருப்பீர்கள். அந்தவகையில், நிறம் மாறும் ஏழு வகை பூக்கள் பற்றியும் இப்படி நிறம் மாறுவதற்கான காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.

1. ஹைட்ரான்ஜியா (Hydrangea):

பூக்கள் | Hydrangea
பூக்கள் | Hydrangea

இது மண்ணின் தன்மையைப் பொறுத்து நீலநிறமாகவோ அல்லது பிங்க் வண்ணத்திலோ இருக்கும்‌. அமெரிக்க ஆராய்ச்சியின் படி, மண்ணில் இருக்கும் அமிலத்தன்மையில் அலுமினியம் அயான்கள் (ions) செடிக்குக் கிடைக்கிறது‌. அப்போது டெல்ஃபின்டின் என்ற வேதிப்பொருள் உருவாகி நீலநிறத்தைத் தருகிறது‌. இதுவே காரத்தன்மை படைத்த மண்ணில் அதே வேதிப்பொருள் பிங்க் அல்லது சிவப்பு நிறப் பூக்களைத் தருகிறது‌. மண்ணின் பி.ஹெச் அளவைக் கட்டுப்படுத்தி நமக்கு வேண்டிய நிறப் பூக்களைக் பெறலாம்.

2. மார்னிங் க்ளோரி (Morning Glory):

பூக்கள்  | Morning Glory
பூக்கள் | Morning Glory

இவை மொட்டுக்கள் ஆக இருக்கும்போது நல்ல நீலநிறத்தில் இருக்கும்‌. மலர்களாக மலரும் போது, ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். சிறிது நேரத்தில் ஆகாய நீல நிறத்தில் மாறும். 2005ம் ஆண்டு இந்த நிறம் மாற்றம் பற்றிய ஆராய்ச்சியின் படி இந்த பூக்களின் இதழ்களின் பி. ஹெச். அளவு 6.6 லிருந்து 7.7 அளவு உயர்கிறது‌. இதன்மூலம் பொட்டாசியம் உள்ளே சென்று ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது. இதனால் நிறம் மாற்றம் ஏற்படுகிறதாம்.

இதையும் படியுங்கள்:
டைனோசர் காலத்து ரகசியம்: நம் வீட்டு எறும்புகளுக்கு பின்னால் இருக்கும் வியப்பூட்டும் உண்மை!
பூக்கள் | Flowers

3. பட்டர் ஃப்ளை பீ பூக்கள் (Clitoria ternatea):

பூக்கள் | Clitoria ternatea
பூக்கள் | Clitoria ternatea

பட்டர் ஃப்ளை பீ பூக்களிலும் பி.ஹெச் அளவு மாறுபாடு ஏற்படுகிறது‌. நல்ல அடர்த்தியான நீல நிறத்தில் இருந்து பிங்க் அல்லது பச்சை நிறத்திற்கு மாறுகிறது‌. சுற்றுச்சூழலில் அமிலத்தன்மையால் உடனடி நிற மாற்றம் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

4. ஹைபிஸ்கஸ் ம்யூடாபில்ஸ் (Hibiscus mutabilis):

பூக்கள்  | Hibiscus mutabilis
பூக்கள் | Hibiscus mutabilis

சில வகைப் பூக்கள் வயது ஆக ஆக நிறம் மாறுவதாக அறியப்படுகிறது. கான்ஃபெடரேட் ரோஜா என்று அழைக்கப்படும் இந்த பூவும் நிறம் மாறுவதற்குக் காரணம் வயதாவதால்தான். இது காலையில் மலரும் போது வெள்ளையாக இருக்கும். மதிய வேளையில் பிங்க் நிறமாக மாறும்‌. மாலை நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும்‌. இந்த பூக்களில் இருக்கும் வேதிப்பொருள் ஆன ஆன்தோசயானின் மாறுபாட்டினால் இந்த நிறமாற்றம் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

5. ரோசா ம்யூடாபில்ஸ் (Rosa Mutabilis):

பூக்கள்  | Rosa Mutabilis
பூக்கள் | Rosa Mutabilis

இந்த பூவும் நிறம் மாறக்கூடியதாக அறியப்படுகிறது. இது முதல்முதலில் பூக்கும் போது மஞ்சள் நிறத்தில் காணப்படும்‌. அதன் பிறகு மெதுவாக ரோஸ் நிறத்திற்கு மாறும்‌. முடிவில் சிவப்பு நிறத்தில் காணபடும். இப்படி மூன்று வண்ணங்களை இது பெறுகிறது‌. இதற்குக் காரணம் செடிக்கு வயது அதுமட்டுமல்ல, அதற்கு கிடைக்கக் கூடிய சூரிய வெளிச்சமும் ஒரு காரணமாகிறது.

இதையும் படியுங்கள்:
⚠️ பார்க்க அழகா இருக்கும் ஆனா செம விஷம்... ஹைவேல இருக்குற இந்த 'அழகான வில்லி' பற்றித் தெரியுமா?
பூக்கள் | Flowers

6. புருன்ஃபெல்சியா (Brunfelsia):

பூக்கள்  | Brunfelsia
பூக்கள் | Brunfelsia

இந்த மலரை பொதுவாக நேற்று, இன்று, நாளை என்று அழைப்பார்கள்‌. இந்த பூக்கள் முதலில் மலரும் போது முதல்நாள். நல்ல அழுத்தமான ஊதா நிறத்தில் இருக்கும்‌. அடுத்த நாளில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். அதற்கும் அடுத்த நாளில் வெண்மையான நிறத்தில் இதைக் காணலாம்‌. இது நாளாக நாளாக இந்தச் செடியில் இருக்கும் ஆன்தோசயானின்கள் உடைந்து போகும்போது, இதன் நிறங்களில் மாற்றம் ஏற்படுகின்றன. இதன் வண்ண நிறங்களால் செடியில் அழகான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

7. லன்டானா (Lantana):

லன்டானா  | Lantana
லன்டானா | Lantana

இது மிக விந்தையான பூவாக அறியப்படுகிறது. கூட்டாக பூக்கும் மலர் இது. காண்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்‌. முதலில் இந்த பூக்கள் பூக்கும் போது மஞ்சளாக இருக்கும்‌ அல்லது க்ரீம் நிறத்தில் மலரும். இந்த நிறமாற்றம் பூச்சிகளால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கையால் என்று நம்பப்படுகிறது‌. வெப்பமும் ஒரு காரணமாக அறியப்படுகிறது. காலநிலை குளிர்ச்சியாக இருக்கும்போது ஆன்தோசயானின் அதிகரிக்கப்பட்டு சிவப்பு மற்றும் ஊதா நிறம் ஏற்படுகிறது‌. ஆன்தோசயானின் குறையும் போது நிறம் வெளுத்த நிலையில் காணப்படுகிறது.