பல்லிகள் தலைதெறிக்க ஓடணுமா? உடனே இந்த 7 செடிகளை உங்க வீட்ல வளருங்க!

ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட உதவும் 7 செடிகள் மற்றும் அதைப் பற்றிய முழு தகவல்கள்.
பல்லி விரட்டி | lizards and  lizard repellent indoor plants
பல்லி விரட்டி | lizards and lizard repellent indoor plants AI Image

பல்லிகள் அண்டாதவாறு உங்கள் வீட்டைப் பாதுகாக்க உதவும் ஏழு சிறந்த பல்லி விரட்டி செடிகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.

உங்கள் வீட்டில் பல்லி பிரச்னை அதிகமாக உள்ளதா? உங்கள் வீட்டு ஜன்னல், கதவுகள் மற்றும் பல இடங்களில் காணப்படும் பல்லிகளை விரட்ட எளிமையான வழி ஒன்று உள்ளது. இது கெமிக்கல் கலப்பு இல்லாதது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் வீட்டில் குறிப்பிட்ட ஏழு பல்லி விரட்டி செடிகளை வளர்க்க வேண்டும். பல்லிகளுக்கு சில வாசனைகளைக் கண்டால் பிடிக்காது‌. வாசனையுள்ள ஏழு செடிகளை வளர்க்கும் போது அந்த வாசனையே பல்லிகளின் வரவைத் தடுக்கும்‌. அந்த ஏழு செடிகள் எவையெவை என்பதை இப்பதிவில் காண்போம்.

1. பெப்பர் மிண்ட்செடி (Peppermint plant):

பல்லி விரட்டி| Peppermint plant
பல்லி விரட்டி | Peppermint plant

இச்செடியிலிருந்து வீசும் நறுமணம் பல்லிக்கு அலர்ஜியானது‌. இதன் அழுத்தமான மணமும் இதன் இலைகள் மற்றும் பெப்பர் மிண்ட் ஆயிலில் உள்ள நல்ல நறுமணம் பல்லியை விரட்டி அடிக்கக் கூடிய பண்பை பெற்றதாகும். பல்லி மணத்தை நுகரும் நாக்கை பெற்றுள்ளது. இது பச்சைநிற இலைகள் மற்றும் சிறிய பூக்களைக் கொண்ட செடியாகும்.

2. லெமன் புல் செடி (Lemon grass plant):

பல்லி விரட்டி | Lemon grass plant
பல்லி விரட்டி | Lemon grass plant

இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் இரண்டு நன்மைகள் உண்டு. இது பல்லியை விரட்டுவதோடு கொசுவையும் தடுக்கும். சிட்ரஸ் வாசனை நிறைந்த இச்செடியின் மணம் பல்லிக்கு அச்சத்தை கொடுக்கக் கூடியதாகும்‌. கொசுவை ஆகாரமாக உண்ணும் பல்லி. இச்செடி மூலம் கொசுக்களின் வரவும் தடுக்கப்படுவதால் அவை விரட்டப்படும்‌ எலுமிச்சை புல் எண்ணெய் கொசு விரட்டி தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

3. லாவெண்டர் செடி:

பல்லி விரட்டி | Lavender
பல்லி விரட்டி | Lavender

மனிதர்களுக்கு இதன் மணம் மகிழ்ச்சியையும் இதத்தையும் தரக்கூடியது. இதன் ஊதா நிறப் பூக்கள் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீடு முழுவதும் லாவெட்டரின் நறுமணம் சூழ்ந்து கொள்ளும். இது அரோமா தெரபியில் பயன்படுத்தப்படுகிறது‌. இதன் நறுமணம் பல்லிகளை விரட்டி அடிக்கும்.

இதையும் படியுங்கள்:
சில்வண்டுகள் எழுப்பும் ரீங்கார சத்தத்தின் பின்னணி என்ன?
பல்லி விரட்டி | lizards and  lizard repellent indoor plants

4. பூண்டு வெங்காயம் செடிகள் (Garlic and onion plants):

பல்லி விரட்டி | Garlic and onion plants
பல்லி விரட்டி | Garlic and onion plants

உங்கள் வீட்டில் சமயலறையில் தோட்டம் இருந்தால் இதை நிச்சயம் வளர்க்க வேண்டும். இந்த இரண்டு செடிகளிலும் சல்பர் இருப்பதால் இதன் மணம் பல்லிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும்.

5. சாமந்திச் செடி (Marigold plant):

பல்லி விரட்டி | Marigold plant
பல்லி விரட்டி | Marigold plant

கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் பூக்களைக் கொண்ட இது பூச்சிகளை விரட்டக் கூடிய பண்பைப் பெற்றது‌. இதிலிருந்து வரும் நறுமணமும் மற்றும் இதன் வேர்களின் கசப்புத் தன்மையும் பல்லிகளை விரட்டக்கூடியதாக உள்ளது.

6. யூகலிப்டஸ் (Eucalyptus):

பல்லி விரட்டி | Eucalyptus
பல்லி விரட்டி |Eucalyptus

யூகலிப்டஸின் இலைகள் சிறந்த மணம் கொண்டவை. இதன் மணம் இயற்கையான முறையில் பூச்சிகளை விரட்டுகிறது. குறிப்பாக இச்செடியில் இருக்கும் சினியோல் என்ற பொருள் பல்லிகளை விரட்டக் கூடியது‌.

இதையும் படியுங்கள்:
மாங்கொட்டையில் இருந்து மதிப்புமிக்க பொருட்கள் தயாரிப்பு - பீகார் விஞ்ஞானிகள் சாதனை!
பல்லி விரட்டி | lizards and  lizard repellent indoor plants

7. பென்சில் காக்டஸ் (Pencil Cactus):

பல்லி விரட்டி | Pencil Cactus
பல்லி விரட்டி | Pencil CactusAI Image

இது நீர்த்தன்மை நிறைந்த செடியாகும்‌. இச்செடியில் காணப்படும் பால் போன்ற திரவம் பல்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதால் இச்செடியை வைக்கும் போது பல்லிகள் அண்டாது‌.

இயற்கை முறையில் கெமிகல்களின் பாதிப்பு இல்லாமல் இந்த ஏழு பல்லி விரட்டி செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க பல்லிகள் ஒழிக்கப்படும். அது மட்டுமல்லாமல் இந்த செடிகளின் இனிய நறுமணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கக் கூடியது‌. வீட்டில் இதமான சூழல் நிலவும்..

இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம் உங்கள் வீட்டை விஷ ரசாயன sprays பயன்படுத்தாமல் முற்றிலுமாக பல்லி தொல்லையிலிருந்து பாதுகாத்து, எப்போதும் நறுமணமிக்க மற்றும் புத்துணர்ச்சியான ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com