

செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, காட்டு விலங்குகளையும் கவனமாகப் பார்ப்பது கார்டிசோல் அளவை குறைத்து, மனநிலையை சமநிலைப்படுத்தி, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் நெகிழ்வை உயர்த்துகிறது. குதிரை சவாரி, நாய்களைத் தடவுதல் போன்ற அனுபவங்கள் தசை உறுதி, சமநிலை, நம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொடுத்து, தனிமையை குறைத்து, இயற்கை மற்றும் பல்லுயிர் உலகத்துடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்குகின்றன.
ஆய்வுகள் என்ன கூறுகிறது தெரியுமா? செல்லப்பிராணிகளாக இருந்தாலும் சரி, காட்டு விலங்குகளாக இருந்தாலும் சரி. விலங்குகளை நேரடியாகப் பார்ப்பதால் சில நிரூபிக்கப்பட்ட உளவியல், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான நன்மைகளை அவை வழங்குகின்றன.
இது மன அழுத்தம் குறைகிறது; அனுதாபத்தை அதிகரிக்கிறது மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதே சமயம், இதுபோன்ற அனுபவங்களை ஒருபோதும் அனுபவிக்காதவர்கள், இந்த விளைவுகளை இழக்கிறார்களாம்!
மன மற்றும் உணர்ச்சி நலம்:
விலங்குகளை நிகழ்நேரத்தில் கவனிப்பது, விழிப்புணர்வையும், மன அழுத்தம் குறைவதையும் ஊக்குவிக்கிறது. ஒரு ஒட்டகச்சிவிங்கி மெல்லுவதையோ அல்லது ஒரு சிங்கம் ஓய்வெடுப்பதையோ பார்ப்பது மனித சுவாசத்தை மெதுவாக்கி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இந்தப் பழக்கம் கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவைக் குறைத்து, உணர்ச்சி ரீதியான மீள்திறனை மேம்படுத்துகிறது.
உடல் மற்றும் சமூக நன்மைகள்:
குதிரை சவாரி அல்லது நாய்களைத் தடுவுவது போன்ற விஷயங்கள் சமநிலை, தசை உறுதி மற்றும் ஒருங்கிணைப்பை (Coordination) நமக்குள் மேம்படுத்துகின்றன. அவை ‘அதிர்ச்சியிலிருந்து மீண்டவர்களுக்கு’ நம்பிக்கையையும், அமைதியையும் மீட்டுத் தர உதவுகின்றன. சமூக ரீதியாக விலங்குகள் தனிமையைக் குறைப்பதோடு, சமூகங்களில் உருவாக்க வேண்டிய ஒரு பிணைப்பை நமக்குள் வளர்க்கின்றன.
கல்வி மற்றும் அறிவாற்றல் ஆதாயங்கள்:
மிருகக்காட்சிசாலைப் பயணங்கள் அல்லது நேரடி வனவிலங்கு பார்வை, ஆர்வத்தையும் அனுதாபத்தையும் ஒருவருக்குள் தூண்டுகின்றன. குழந்தைகள் இதனால் சிறந்த நினைவாற்றலையும், அறிவியலில் ஆர்வத்தையும் பெறுகிறார்கள்.
அதே நேரத்தில் பெரியவர்கள் தங்களின் அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மையைப் பெறுகிறார்கள். யானைகள் அல்லது கொரில்லாக்களைப் பார்ப்பதால் ஏற்படும் பிரமிப்பு, பிறர்நல நடத்தை மற்றும் மேம்பட்ட மனநிலையை பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதைக் கவனிப்பவர்களுக்கும், கவனிக்காதவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள்:
கவனிப்பவர்கள்: குறைந்த பதட்டம், தேவையான அனுதாபம், சிறந்த கவனம் மற்றும் பெரும்பாலும் அதிக படைப்பாற்றலைக் காட்டுகிறார்கள்.
அவர்கள் மேம்பட்ட சமூகத் திறன்கள், உணர்ச்சி ரீதியான மீள்திறன் பார்த்தவர்களே பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
இதைக் கவனிக்காதவர்கள்: இந்த அமைதிப்படுத்தும் விளைவுகளைத் தவறவிடுகிறார்கள், அதிக மன அழுத்தம் ஏற்படக்கூடும். பெரும்பாலும் இயற்கை சார்ந்த அல்லது பல்லுயிர்ப் பெருக்கத்துடனான இணைப்பு தொடர்பான உணர்வு அவர்களிடம் காணப்படுவதில்லை.
உத்வேகம் அளிக்கும் நன்கு அறியப்பட்ட விலங்குகள்:
நாய்கள் மற்றும் பூனைகள்: இவைகளால் தோழமை, விசுவாசம் மற்றும் உணர்ச்சி ரீதியான குணப்படுத்தல் கிடைக்குமாம்.
குதிரைகள்: சிகிச்சைமுறை சவாரி போன்றது; உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
யானைகள் மற்றும் கொரில்லாக்கள்: பிரமிப்பு, அனுதாபம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வைத் தூண்டுகிறதாம்.
பாண்டாக்கள் மற்றும் நீர்நாய்கள்: விளையாட்டுத்தனமான நடத்தையின் மூலம் மகிழ்ச்சியையும், விழிப்புணர்வையும் தூண்டுகின்றன.
இதைப் பற்றிய மாமனிதர்களின் கருத்துகள்:
ஜேன் குடால் (Jane Goodall): நாம் விலங்குகளிலிருந்து தனிப்பட்டவர்கள் அல்ல. நாம் அதன் ஒரு பகுதியே.
மகாத்மா காந்தி: ஒரு நாட்டின் மகத்துவத்தையும் அதன் தார்மீக வளர்ச்சியையும், அங்குள்ள விலங்குகள் நடத்தப்படும் விதத்தைக் கொண்டே மதிப்பிட முடியும்.
ஜான் முயர் (John Muir): விலங்குகளின் வாழ்க்கையை உற்றுநோக்குவது நமது சொந்த வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது; அத்துடன் அதை எல்லா வகையிலும் மேன்மையாகவும், செழுமையாகவும் ஆக்குகிறது.
ஆக, விலங்குகளின் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது, வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது அமைதி, அனுதாபம் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் ஒரு இயற்கையான சிகிச்சை முறையாகும். இது மனித வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதோடு, மற்ற உயிர்களுடனான பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.
விலங்குகளுடனான நேரடித் தொடர்பும் அவதானிப்பும் உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நாளாந்திர சோர்வையும் மன அழுத்தத்தையும் முற்றிலுமாகத் துரத்தி அடித்து மன அமைதியையும் புத்துணர்ச்சியையும் நிரந்தரமாகப் பெற்றுத் தரும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference