
டக்கா சாண்ட்ரியரி (Tacca chantrieri) அல்லது 'கருப்பு வவ்வால் பூ' என்பது யாம் குடும்பமான டயோஸ்கோரேசியேயைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது முதன்முதலில் 1901-ம் ஆண்டு எட்வார்ட் ஆண்ட்ரே என்பவரால் விவரிக்கப்பட்டது. சாண்ட்ரியரி தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. அதன் வடிவம் மற்றும் வண்ணம் காரணமாக இது பொதுவாக 'கருப்பு வௌவால் பூ' என்று அழைக்கப்படுகிறது.
வௌவால் பூ தனித்துவமான மகரந்தச் சேர்க்கை முறையைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது பெரும்பாலும் தன்னாட்சி சுய மகரந்தச் சேர்க்கை செய்கிறது. கருப்பு வவ்வால் பூ வெப்பமண்டல, ஈரப்பதமான நிலங்களை கொண்ட அதன் பூர்வீகப் பகுதியைப் போன்ற சூழல்களை விரும்புகிறது. வௌவால் பூ பொதுவாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் வௌவால் பூவின் வேர்த்தண்டுக் கிழங்குகள் அல்லது வேர் தண்டுகளில் உள்ளன. வேர்த்தண்டுக் கிழங்குகளில் சபோனின்கள் மற்றும் டைரியல்ஹெப்டனாய்டுகள் போன்ற பரந்த அளவிலான மருத்துவ சேர்மங்கள் உள்ளன.
இந்த மருத்துவச் சாறுகள் பொதுவாக உயர் இரத்த அழுத்தம், இரைப்பைப் புண்கள், தீக்காயங்கள், ஹெபடைடிஸ் மற்றும் குடல் அழற்சி போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. இந்த சிக்கலான சேர்மங்கள் பல பொதுவான மருத்துவம் முதல் புற்றுநோய் போன்ற மிகவும் சிக்கலான நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பூவின் தனித்துவமான வடிவம் மற்றும் நிறம் பார்ப்பதற்கு கருப்பு வவ்வால் பறப்பதை போன்று தோன்றமளிப்பதால், இது ‘கருப்பு வவ்வால் பூ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பூவின் நிறங்கள் அடர் பழுப்பு, ஊதா மற்றும் சில நேரங்களில் பச்சை நிறத்தில் கூட இருக்கும்.
வவ்வால் பூ இனத்தில் பத்து இனங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் வௌவால் பூ, பிசாசு பூ அல்லது பூனை மீசை என்று குறிப்பிடப்படுகின்றன. இது கருப்பு நிற பூக்களைக் கொண்டிருப்பதால் இது ஒரு அசாதாரண தாவரமாகும். வவ்வால் பூவில் இறக்கைகள் போல தோற்றமளிக்கும் மற்றும் பெரிய பரப்பளவு கொண்ட மகரந்தம் (bracts) உள்ளன. பூ 12 அங்குல அகலம் வரை இருக்கலாம். இதன் உயரம் 50 –100 செ.மீ உயரம் வரை இருக்கலாம். மகரந்தங்கள் 8-10 அங்குல நீளம் கொண்ட வௌவால்களில் தொங்கும் நீண்ட மீசைகளைப் போல இருக்கும். சில ஆராய்ச்சியாளர்கள் மகரந்தங்கள் ஒளிச்சேர்க்கை பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.
கருப்பு வவ்வால் பூ தென்கிழக்கு ஆசியாவில் அசாம், சிங்கப்பூர், வங்காளதேசம், பங்களாதேஷ், கம்போடியா, தெற்கு சீனா, ஹைனான், லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, திபெத் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இது அதன் இனத்தின் பரந்த புவியியல் வரம்பை உள்ளடக்கியது. இருப்பினும், அதிகப்படியான சுரண்டல், வாழ்விட அழிவு மற்றும் காடுகள் துண்டு துண்டாக வெட்டப்படுவதால் அதன் பரவல் குறைந்துள்ளது.
கருப்பு வவ்வால் பூக்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரை பூக்கும் தன்மை கொண்டவை. இதன் பூக்கும் பாகங்களை வெட்டாமல் விட வேண்டும், வெட்டினால் பூ விரைவில் குறைந்துவிடும். குறைந்தது இரண்டு இலைகள் வளர்ந்த பிறகு அதன் பூக்கும் செயல்முறையைத் தொடங்கும். இது ஒரு வளரும் பருவத்தில் 8 முறை வரை பூக்கும். கருப்பு வவ்வால் பூக்கள் ஆர்க்கிட்களைப் போன்ற வளரும் நிலைமைகளைக் கொண்டுள்ளது.
இந்த மலரின் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான தோற்றத்தால் இவை அலங்கார தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. சில ஆசிய கலாசாரத்தில், தீய சக்தியை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது. அலங்கார தேவையை தாண்டி பாரம்பரிய மருத்துவத்தில் இந்த பூக்கள் இடம்பெறுகின்றன.