குப்பைக் கிடங்கில் தொடங்கிய மாயம்: 60 வயது பாட்டி உருவாக்கிய விசித்திர பாட்டில் கிராமம்!

60 வயது பாட்டி குப்பைக் கிடங்கில் சேகரித்த பாட்டில்களைக் கொண்டு எப்படி ஒரு விசித்திரமான பாட்டில் கிராமம் உருவாக்கினார் என்பதை அறியுங்கள்.
பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa Prisbrey
பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa PrisbreyImage credit: Chatgpt
வைகறை கண்ணன்

வணக்கம். நான், அனைத்து ஊடக, பத்திரிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் விளம்பரங்கள் வெளியிட்டு தரும் விளம்பர ஏஜென்ஸி தொழில் செய்து வருகிறேன். விளம்பரப்படம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறேன். பல முன்னணி பத்திரிக்கைகள், வார, மாத, இணைய இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். கட்டுரைகள் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய கல்கி ஆன்லைன் குழுமத்திற்கு என்றென்றும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். முதல் காதல்! முதல் வாய்ப்பு! முதல் வெற்றி! முக்கியம் தானே..!

Updated on

குப்பைகளும் கழிவுகளும் உலகிற்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கும் இந்தக் காலத்தில், அதே குப்பைகளைக் கொண்டு ஒரு ஒற்றைப் பாட்டி உருவாக்கியுள்ள விசித்திரமான "பாட்டில் கிராமம்" (Bottle Village) உலகை வியக்க வைத்துள்ளது. மற்றவர்கள் தூக்கி எறிந்த குப்பைகளுக்குள் ஒளிந்திருக்கும் பேரழகையும், ஒரு படைப்பாளியின் விடாமுயற்சியையும் கண்முன்னே காட்டும் இந்தக் கலை உலகிற்குள் நுழைவதற்கான சுவாரஸ்யமான பயணம் இதோ...

தூக்கி எறியப்படும் குப்பைகளும், கழிவுகளும் பூமிக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் இன்றைய சூழலில், அதுவே, உலகமே கண்டு களிக்கும் கலைக்கூடமாக பாட்டில் கிராமமாக வர்ணஜாலம் காட்டி வருகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

வாழ்க்கையை தனிமையாக, அமைதியாக, மிக எளிமையாக நடத்தி வந்த, அறுபது வயது பாட்டி ட்ரெஸ்ஸா ப்ரிஸ்ப்ரேவுக்கு புயலாகப் புறப்பட்டு வந்தது, பிரச்சினை!

1956-ல், அமெரிக்க நிலப்பரப்பு கணக்கெடுப்பின் படி, அந்தப் பாட்டிக்கு தன் வீட்டை அருகிலுள்ள வான்கோழிப் பண்ணையிலிருந்து எல்லையாகப் பிரிக்க ஒரு சுவர் எழுப்ப வேண்டும் என்றதுமே தலையில் பெரிய பாறாங்கல்லைத் துக்கிப் போட்டது போல் இருந்தது.

அந்தப் பாட்டிக்கு. ஒத்த ஜீவன். கையில் கையிருப்பு ஏதுமில்லை. வயோதிகம். வருவாயுமில்லை. சுவர் எழுப்ப செலவுக்குப் பணம் வேண்டுமே, என்ன செய்ய?

குழப்பத்திலும் மன உளைச்சலிலும் சோர்வுற்று இருந்ததால், ஆறுதலுக்காக கொஞ்சம் நடக்கத் தொடங்கினாள். கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கு தென்பட்டது. எட்டிப்பார்த்தாள், ட்ரெஸ்ஸா பாட்டி ப்ரிஸ்ப்ரே. அந்தப் பள்ளத்தாக்கு குப்பைகளாலும், பழைய பாட்டில்கள், பல வண்ணக் கண்ணாடித் துண்டுகள் என நிரம்பியிருந்தது.

அந்தக் குப்பைகளை ட்ரெஸ்ஸா பாட்டி ப்ரிஸ்ப்ரே துடிப்பான பிரகாசமான ஒன்றின் தொடக்கமாகக் கண்டார். தன்னை ஒரு படைப்பாளியாக உணர்ந்தார். சாதாரணத்திலும் ஒரு அசாதாரணத்தை தரிசிப்பது தானே படைப்பாளியின் குணம்.

இதையும் படியுங்கள்:
கூக்கபரா: மனிதர்களைப் போல உரக்கச் சிரிக்கும் விசித்திரமான பறவை!
பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa Prisbrey

பாட்டில்களை சேகரித்து எடுத்துச் சென்று, அவற்றை சிமெண்ட் தரையில் வரிசையாக அடுக்கத் தொடங்கினாள். அது எளிமையாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருந்தது. பின்னர், வண்ணக் கண்ணாடிகள் வழியாக சூரிய ஒளி பாய்ந்து, அவள் இதற்கு முன் பார்த்திராத வடிவங்களை உருவாக்கத் தொடங்கிய போது, கிட்டத் தட்ட தற்செயலாகத்தான் ஏதோ, ஒரு மாயாஜாலமான ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

அந்தச் சுவர் ஒரு ஆரம்பம் மட்டுமே. ஒரு சிறிய தடையாக இருந்திருக்க வேண்டியது. வளர்ந்து கொண்டே இருந்தது.

பிரிஸ்ப்ரே தொடர்ந்து அந்தக் குப்பைக் கிடங்கிற்குச் சென்று, தன்னால் சுமக்க முடிந்த அனைத்தையும் சேகரித்தாள். பல வண்ண பாட்டில்கள், உடைந்த தட்டுகள், பொம்மைகள், சிப்பிகள், பென்சில்கள், தலை விளக்குகள் முதலானவைகளையும் சேகரித்தார்.

பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa Prisbrey
பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa PrisbreyImage credit: Gemini AI

அடுத்த 25 ஆண்டுகளில் அவருடைய ஒற்றைச் சுவர் ஒரு சிறிய அதிசய உலகமாக விரிவடைந்தது. புட்டிகள் மற்றும் மொசைக்குகளால் மூடப்பட்ட கட்டிடங்கள், சன்னதிகள், வேண்டுதல் கிணறுகள், சுழலும் பாதைகள், கலக அறை, கிளியோபாட்ராவின் படுக்கையறை, துப்பாக்கி கண்ணாடி வீடு போன்ற பெயர்களைக் கொண்ட விசித்திரமான கட்டமைப்புகள் கொண்டு இருந்தன. அவருடைய பென்சில் சேகரிப்பு மட்டுமே ஒரு கட்டிடம் நிரம்பியது. மொத்தத்தில், அந்த பாட்டில் கிராமம் சுமார் மூன்றில் ஒரு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்தது.

சிறிய இடம் தான். ஆனால், நிறைய விசித்திரங்கள் நிரம்பியிருந்தது. ஆம்! அமெரிக்காவின் மிச்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு கனவு கிராமம் போலத் தோன்றியது.

மற்றவர்களால் தேவையில்லாதது என்று கருதி தூக்கி எறிந்த சிதறல்களால் நிறைந்திருந்தது. அவை அனைத்திற்கும் மீண்டும் ஒரு வாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பூந்தொட்டியில் எறும்பு தொல்லையா! விரட்ட எளிய வழிமுறைகள்!
பாட்டில் கிராமம் | Bottle Village and Tressa Prisbrey

குப்பை என்று ஒதிக்கித் தள்ளிய பொருட்களுக்குள்ளும் ஒரு பேரழகும், பயன்பாடும் ஒளிந்திருப்பதை, காண்போர் கண்களுக்கு சூரிய ஒளியில் பல வண்ணங்களில் காட்சிப்படுத்துகிற விசித்திரம்... அந்த பாட்டில் கிராமத்தில் இன்னமும் நிகழ்வது விசித்திரத்திலும் விசித்திரமே!

வாசகர்கள் தாங்கள் கடந்து செல்லும் எளிய பொருட்களிலும், சவாலான சூழ்நிலைகளிலும் மறைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான திறமையைக் கண்டறிந்து, தங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கையைப் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com