நீரில் மட்டுமின்றி; நிலத்திலும் நடமாடக்கூடிய மீன்கள் தெரியுமா?

Fish that can walk on land
Mudskipper, Lungfish, Longlure Frogfish, Climbing Perch
Published on

மீன்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கடல், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகளில் அது அழகுற வழுக்கிக்கொண்டு நீந்திச் செல்லும் காட்சிதான். ஆனால், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வாழும், சில வகை மீன்கள் நீர் வறட்சி ஏற்படும் காலங்களில் நிலத்திலும் வாழக்கூடும் என்பதை அறியும்போது நமக்கு வியப்புண்டாகிறது. அப்படிப்பட்ட 8 வகை மீன்கள் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

1. மட்ஸ்கிப்பர் (Mudskipper): இந்தோ பசிஃபிக் சதுப்பு நிலக் காடுகளில் காணப்படும் சிறிய வகை மீன் இது. இதை நீரில் பார்ப்பதை விட, நிலப்பகுதிகளில் அதிகம் காணலாம். இது தனது தலைப் பகுதியில் உள்ள வலுவான துடுப்புகளின் உதவியால் மண் சகதி மீது  குதித்தும் நகர்ந்தும் செல்லும். நீருக்கு வெளியே இருக்கும்போது இது தனது வாயின் உட்புற லைனிங் மற்றும் சருமத்தின் வழியாக சுவாசிக்கிறது.

இதையும் படியுங்கள்:
'ஆக்ஸிலாட்ல்' - நடக்கும் அதிசய மீன் பற்றி தெரியுமா?
Fish that can walk on land

2. லங் ஃபிஷ்(Lungfish): இது ஆப்பிரிக்கா, சவுத் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இது சுவாசிப்பதற்கு செவுள்கள் (Gills) மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டு அமைப்புகளையும் கொண்ட மீன். தான் வசிக்கும் நீர்நிலைகள் வறண்டு போகும்போது அருகில் தரையில் ஒரு குழியைத் தோண்டி அதற்குள் தண்ணீரில்லாமல் மாதக் கணக்கில் செயலற்று, உறக்க நிலையில் (hybernation) இருந்து கொள்ளும்.

3. லாங்லூர் ஃபிராக்ஃபிஷ் (Longlure Frogfish): மேற்கு அட்லான்டிக் கடல் பகுதியில், பவளப் பாறைகளில் காணப்படுபவை இவை. அவற்றின் தலைப் பகுதியில் உள்ள துடுப்புகளை உபயோகித்து, கடலோரம் மெதுவாக நடந்து சென்று இரையைப் பிடித்துத் தின்றுவிட்டு, மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.

இதையும் படியுங்கள்:
தோட்டம் அமைக்க செடிகள் வாங்கும் முன்பு யோசிக்க சில விஷயங்கள்!
Fish that can walk on land

4. க்ளைம்பிங் பெர்ச் (Climbing Perch): தரையில் நடக்கும் திறமையுடைய இவ்வகை மீன்களை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவில் சில இடங்களிலும் காணலாம். இவை வசிக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிடும்போது, தனது செவுள்களின் உதவியாலும், உடல் பலத்தாலும் நடந்து, வேறொரு குளத்திற்கு சென்றுவிடும். தண்ணீர் இல்லாத இடத்தில் நடக்கும்போது சில மணி நேரம் இவற்றால் சுவாசிக்கவும் முடியும்.

Fish that can walk on land
Cave Angel Fish, Walking Catfish, Lithogenes Wahari, Epaulette Shark

5. கேவ் ஏஞ்ஜெல் ஃபிஷ் (Cave Angel Fish): தாய்லாந்தின் ஆழமான குகைகளில் வாழும் தனித்துவமான மீன் இனம் இது. தனது மேம்படுத்தப்பட்ட இடுப்புப் பகுதி துடுப்புகளின் உதவியால் கொட்டும் அருவிகளினூடே செங்குத்தான பாறைகளின் மீதும் ஏறக்கூடிய வல்லமை பெற்ற மீனினம் இது. முழுவதும் இருண்ட இடங்களில், அசாதாரண வழியில் வாழ தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்ட அபூர்வமான மீன் இனம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மின்மினிப் பூச்சிகளின் முக்கியப் பங்கு!
Fish that can walk on land

6. வாக்கிங் கேட்ஃபிஷ்(Walking Catfish): தென் கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த வகை மீன்கள், தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் காணப்படுகின்றன. மழை அதிகம் பெய்யும் நேரங்களில் இந்த மீன் தரைப் பரப்பில் நடந்து செல்லும். இதன் துடுப்புகளின் உதவியால், ஒரு குளத்திலிருந்து மற்றொன்றிற்கு ஈரமான தரையை நடந்து கடந்து செல்லும். நிலையற்ற சூழல்களிலும் சுவாசிக்கக்கூடிய திறமை பெற்றவை இந்த மீன்கள்.

7. லித்தோஜென்ஸ் வஹாரி (Lithogenes Wahari): வெனிசுலாவில் காணப்படும் மீன். இது நீரை விட்டு வெளியில் வராது. ஆனால், அதன் இடுப்புப் பகுதி துடுப்பை உபயோகித்து பாறைகள் மீது ஏறவும், வேகமாகப் பாய்ந்து வரும் நதிகளின் அடிப்பகுதியில் நடக்கவும் செய்யும். பல வகையான மீன்களை அடித்துச் செல்லக் கூடிய நதியின் பலமான இழுப்பு சக்தியைக் கூட எதிர்த்து நிற்கும் வகையில் இதன் உடல் வடிவமைக்கப்பட்டிருப்பது அதிசயம் எனக் கூறலாம்.

8. ஈபாலெட் ஷார்க் (Epaulette Shark): ஆஸ்திரேலிய கடலோரப் பகுதியில் காணப்படும் சுவாரஸ்யமான மீன் வகை இது. அலைகள் கொண்ட குளத்தில் (tidepool) நீர் குறையும்போது மற்றொரு குளத்திற்கு தனது துடுப்புகளின் உதவியால் தரையில் நடந்து செல்லும். குறைவான ஆக்ஸிஜன் உள்ள இடங்களிலும், மணிக்கணக்கில் வாழக் கூடியவை. மேடு, பள்ளமான பாறைகள் மீதும் பயணிக்கக்கூடிய நிபுணத்துவம் பெற்ற அபூர்வ மீன் இனம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com