Animals that keep the heat at bay
Animals that keep the heat at bay

சூட்டையும் சுகமானதாக்கும் சூட்சுமம் அறிந்த ஐந்து வகை அனிமல்கள்!

Published on

ற்போதைய காலநிலை மாற்றத்தால், பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அதிகளவு வெப்பத்தால் தாக்கப்பட்டு, தகிக்கும் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில விலங்கினங்கள், உச்சக்கட்ட வெப்பத்தைக்கூட தாங்கிக்கொண்டு நன்கு வாழவும் கற்றுக்கொண்டுள்ளன. அவ்வாறான விலங்குகளில் ஐந்தைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1. பொம்பீய் ஓர்ம் (Pompeii Worm): இந்த வகைப் புழுக்கள் கடலின் ஆழமான பகுதிகளில் காணப்படும் ஆழி நீர் வெப்ப ஊற்றுக்களின் அருகில் எந்தவிதமான அச்சமோ தயக்கமோ இன்றி தொங்கிக் கொண்டிருக்கும். உஷ்ண நிலை 105°C வரை இருக்குமிடங்களிலும் சாதாரணமாக அவை வாழ்ந்து கொண்டிருக்கும். நமக்கு அது நீராவிக் குளியல் (Sauna) போன்றிருக்கும். பொம்பீய் ஓர்மின் முதுகின் மீது பாக்டீரியாக்கள் பரவி, நிறைந்து வசித்துக் கொண்டிருக்கும். இவை பொம்பீய்க்கு ஒரு பாதுகப்புக் கவசமாக அமைந்து வெப்பத்தைத் தாங்க உதவிபுரிகின்றன. பதிலுக்கு பொம்பீய், பாக்டீரியாக்கள் தங்கி வசிப்பதற்கு ஒரு வசதியான வீட்டைக் (தனது உடலை) கொடுத்து உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பாம்புகளை விரட்டும் செடிகள்!புடலங்காய் செடி இருந்தால் பாம்பு வராதாம்!
Animals that keep the heat at bay

2. டார்டிகிரேட்ஸ் (Tardigrades): அகா வாட்டர் பேர்ஸ் (aka water bears) எனவும் அழைக்கப்படும் இந்த மைக்ரோஸ்கோபிக் உயிரினமானது, 'மிகக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் விலங்கு'களுக்காக ஒரு போட்டி வைத்தால் டார்டிகிரேட்ஸ் ஜெயிப்பது உறுதி. உறைய வைக்கும் குளிர், உச்சபட்ச வெப்பம் (upto 150°C), கதிர்வீச்சு, வறட்சி மற்றும் விண்வெளி என எந்த சூழலில் வசிக்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்டாலும் அவை சுருட்டிக்கொண்டு, செயலற்று அமர்ந்து அடுத்த மாற்றத்திற்காக காத்திருக்கும். இது விஞ்ஞானிகள் பரிசோதித்து கண்டறிந்த உண்மை.

3. சஹாரன் சில்வர் ஆன்ட்ஸ் (Saharan silver ants): 60°C வெப்பத்தில் இவை நாள் முழுக்க இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருக்கும். வெப்பத்தைப் பிரதிபலிக்கும் அதன் பளபளக்கும் உடம்பும், சுறுசுறுப்பான கால்களும், சூட்டில் எரிந்து போகாமல் பாலைவன மணலை அவை கடந்து செல்லும் பாங்கும் பார்ப்போரை வியக்க வைக்கும். பிறக்கும்போதே வெப்பத்தைத் தாங்கக்கூடிய உடை ஒன்றை உடலுக்குள் வைத்துத் தைத்து விட்டதைப் போன்றிருக்கும் அதன் செயல்பாடுகள்.

இதையும் படியுங்கள்:
மனிதர்கள் போலவே நடக்கும் வால்வரின் விலங்கு பற்றித் தெரிந்து கொள்வோம்!
Animals that keep the heat at bay

4. ஹீட் லவிங் மைக்ரோப்ஸ் (Heat Loving Microbes): சரியாக சொல்லப்போனால், தெர்மோஃபைல்ஸ் (Thermophiles) எனவும் அழைக்கப்படும் இவை, விலங்குகளே அல்ல எனலாம். இந்த தெர்மோஃபிலிக் பாக்டீரியா மற்றும் தொல் குச்சுயிரிகள் (Archaea), ஒருசெல் நுண்ணுயிரிகளின் குழுவாகும். இவற்றில் சில120°C வெப்பமுள்ள நீரூற்றுகளிலும் வாழக் கூடியவை. ‘Strain 121‘, என்ற செல்லப் பெயர் கொண்டதொரு குறிப்பிட்ட இனம், ஆட்டோக்ளேவ் (Autoclave) வெப்ப நிலையிலும் (121°C) உயிர் வாழும் என்பது நம்ப முடியாத உண்மை. மருத்துவமனை உபகரணங்கள் ஆட்டோக்ளேவ் வெப்பநிலையில்தான் ஸ்டெரிலைஸ் செய்யப்படுகின்றன.

5. ஃபென்னெக்ஸ் நரிகள் (Fennex Foxes and their Desert Cousins): ஃபென்னெக்ஸ் நரிகள் மற்றும் அவற்றின் உறவினர்கள் மற்ற உயிரினங்கள் போல அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டவை இல்லை என்றபோதிலும், பாலைவன வாழ்க்கைக்கு சில தந்திரங்களை அவை கையாள்கின்றன. தங்களின் மிகப்பெரிய காதுகளை விசிறி போல் உபயோகித்து உடல் வெப்பத்தை வெளியேறச் செய்கின்றன. இவற்றின் உடல்கள் குறைந்த நீரில் வாழும் வகையில் அமைந்துள்ளன. எப்போது நிழலில் மறைந்திருக்க வேண்டும் என்பதையும் அவை அறிந்து வைத்திருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com