மர இலைகளில் தங்கம்: பின்லாந்து ஆய்வில் அதியசத் தகவல்!

பின்லாந்து தங்கச் சுரங்கம் அருகே உள்ள ஸ்ப்ரூஸ் மரங்களின் இலைகளில் தங்கம் சேமிக்கப்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். முழு விவரம் இதோ.
தங்கம் | gold in tree spruce tree leaves
தங்கம் | gold in tree spruce tree leavesImage credit: Chatgpt
இந்திரா கோபாலன்

இந்திரா கோபாலன், பி.எஸ்சி பட்டதாரி. மங்கையர் மலரின் 40 ஆண்டுகால வாசகி; வாசக எழுத்தாளர். திருமணத்திற்குப் பின் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், பல இதழ்களுக்கு எழுதிப் பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Updated on: 

தங்கச் சுரங்கத்திற்கு அருகில் உள்ள மரங்களின் இலைகளில் தங்கம் பதுங்கியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இலைகளில் தங்கும் இந்த தங்கம், நிலத்தடி கனிம வளங்களை மிகத் துல்லியமாகக் கண்டறிய எவ்வாறு உதவுகிறது? இந்த வியக்கத்தக்க அறிவியல் ரகசியத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பின்லாந்து தங்கச் சுரங்கம் அருகே அமைந்துள்ள மரங்களின் ஊசி போன்ற இலை அமைப்பு கொண்ட இலைகளில் சிறிய அளவில் தங்கம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது‌. நார்வேயில் உள்ள ஸ்ப்ரூஸ் மரங்களின் ஊசி போன்ற இலைகளில்  மைக்ரோஸ்கோபிக் தங்கத் தூள்கள் உள்ளதாம். இந்த நானோ பார்டிகிள்ஸ் மண்ணிலிருந்து இலைக்கு வந்திருப்பதாக அறியப்படுகிறது‌. இந்த இலைகளை ஆய்வதன்மூலம் ஒளிந்திருக்கும் தங்கத்தை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது‌.

இயற்கையான ஆக்சிடேஸன் மற்றும் மைக்ரோ பயல் செயல்பாடு மூலம் இலையில் தங்கம் சேர்த்திருக்கலாம் என நம்பப்படுகிறது‌. நிலத்தடி நீரின் அயான்கள் (ions) மண்ணுக்கு மேலே பயணிப்பதால் இந்தமரத்தின் வேர்கள் தண்ணீரோடு ஊட்டச்சத்துக்களையும் ஊறிஞ்சுகின்றன. 

பின்லாந்தின் உலு ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்றின்படி ஸ்ப்ரூஸ் (Spruce) மரத்தின் ஊசி போன்ற இலைகளில் ஆவியீர்ப்பு (Transpiration Stream) மூலம்  தங்கம் சென்றடைவதாக அறியப்படுகிறது. இலைகளுக்குச் சென்றபிறகு மரத்தின் திசுக்கள் தங்கமாக மாற்றுகிறது. இதை பயோமினரலைசேஷன் என்று கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திலும் புதினா செடி தளதளன்னு வளர இந்த 4 டிப்ஸ் போதும்!
தங்கம் | gold in tree spruce tree leaves

இதன்மூலம் ஊசி போன்ற இந்தமரத்தின் இலைகளில் தங்கம் சேமிக்கப்படுகிறது‌. மணலின் ஊட்டச்சத்துக்கள் எப்படி தங்கமாக மாறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இசோகுவோட்கோ தங்கச்சுரங்கங்களில் உள்ள மரங்களின் 138 ஊசி போன்ற இலைகளை ஆய்வு நடத்தினர்‌. இவை தங்கச் சுரங்கம் அருகே காணப்படுகின்றன. மூன்று மரங்களிலிருந்து ஊசி போன்ற இலைகளை ஆராய்ந்தார்கள். இதற்கு ஸ்பெக்ட்ரோக்ஸ்கோபி (Spectroscopy) முறையை பயன்படுத்தி ஆய்வு செய்தார்கள்.

ஆராய்ச்சியின் படி தங்க நானோ பார்டி கில்ஸ் ஊசி போன்ற இலையில் மீசோஃபில் பகுதியில் சேர்வதை அறிந்தார்கள். மேலும் இந்த ஊசிகளில் சேரும் தங்கம் அதிக அளவில் இருப்பதையும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. தங்கத்தோடு கூட பாக்டீரியாக்களும் சேர்ந்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. சிறிய அளவில் தங்கம் இருந்தாலும் அதை பிரித்தெடுத்து எப்படி என்ற முழு ஆய்வு நடந்து வருகிறது.

ஒவ்வொரு செடிகளின் திசுக்கள் மற்றும் மண்ணின் தன்மை மற்றும் எந்த அளவில் ஊட்டச்சத்துக்கள் இந்த இலையில் சேர்கின்றன போன்ற விவரங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். ஆனால் இந்த மேற்கூறிய ஆராய்ச்சிகளின் மூலம் ஸ்ப்ரூஸ் மரத்தின் இலைகளில் ஊசி போன்ற அமைப்பில்  பயோமினரலைஸ்டு மூலம் தங்கம் சேர்ந்திருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.

தங்கம்  | spruce tree leaves
தங்கம் | spruce tree leaves

இந்த ஊசிகளில் பசில் லோட்டா, ஆக்டினோ மைசிடோடா போன்ற பாக்டீரியாக்கள் இருப்பதையும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது‌. ஆய்வில் சுமார் 18 பாக்டுரியாக்களும் தங்கத்தோடு இருப்பதாக அறியப்படும் உள்ளது. இதில் இருக்கும் தங்கத்தை எந்த அளவிற்கு கமர்ஷியல் பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம் என்பதற்கான தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் என்று கூறுவார்கள். அதேபோல் தங்கச் சுரங்கத்திற்கு அருகே இருக்கும் மரங்களின் இலைகளில் மணல்மூலம் தங்கச்சத்து வேர்களின் வழியாக மரத்திற்கு உறிஞ்சப்பட்டு அதன் இலைகளில் தங்கம் சேர்வது வியக்கத்தக்க விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் சுண்டைக்காய் செடி கொத்துக் கொத்தாக காய்க்க எளிய வழிகள்!
தங்கம் | gold in tree spruce tree leaves

தங்கம் விற்கும் விலையில் இந்த மரங்களின் இலைகளை ஆய்வு செய்வதன் மூலம், நிலத்தடிக்கு அடியில் தங்கம் அல்லது கனிம வளங்கள் எங்கு புதைந்துள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க (Mineral Exploration) இந்த ஆய்வு விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இயற்கையின் விசித்திரமான கனிம மாற்றங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் எதிர்கால கனிம வளத் தேடுதல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னணியில் நிற்கும் வாய்ப்பைப் பெறுங்கள்.