
பாலிசைப்போனியா வகை சிவப்பு பாசி (Red algae) தாலசின் (thallus) அமைப்பு, வடிவமைப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம்:
தாலஸ் என்பது கீழ்நிலை தாவரமாகிய ஆல்கே, பூஞ்சைகளின் உடலமைப்பை குறிக்கும். Polysiphonia என்பது சிவப்பு ஆல்கேயின் கீழ்வரும் ஒரு முக்கியமான ஜீன் ஆகும். இது பொதுவாக கடல்களில் காணப்படும் மிகவும் சிக்கலான அமைப்புடைய பொன்னிறம் வாய்ந்த பஞ்சு போன்ற ஆல்கே ஆகும்.
பாலிசைப்போனியாவிற்கு நூலிழைப் போன்ற உடலமைப்பு (thallus) உள்ளது. இந்த நூலிழைகள் பலமுறை கிளை விட்டு பரந்து செடியின் உடலுக்கு அழகான, மென்மையான, இறகு போன்ற தோற்றத்தை வழங்குகின்றன. தாலஸ் நீரின் அடித்தளத்தில் hold fast எனப்படும் ஓர் அமைப்பின் மூலம் பொருந்தி இருக்கும். P.Urceolata, மற்றும் p. Nigrescens போன்ற பல பாலிசைப்போனியா இனங்கள் அடித்தளத்தில் தடித்த கோப்பைகள் அல்லது அடர்ந்த துடுப்புகள் போல வளர்ந்து அதன் அளவில் சில செ.மீ முதல் பல செ.மீ உயரம் வரை மாறுபடுகின்றன. பெரும்பாலான இனங்களில் இது இரண்டு வகையான நூலிழைகளை கொண்டுள்ளது.
1. அடித்தளம் பரவலாக உள்ள நூலிழைகள் (Basal prostrate filaments):
இவை அடித்தளத்தைத் தாண்டி பரவி அடித்தளத்தில் தங்களை நிலை நிறுத்துவதற்காக, புறக்கருவிகளிலிருந்து உருவாகும் தடித்த சுவருடனும் நீண்ட ஒரு வரிசை செல்களால் ஆன ரைசாய்டுகள் (Rizoids) மூலம் பற்றி கொள்கின்றன. ரைசாய்டுகள் ஒழுங்கற்று, பரந்து விரிந்து மற்றும் நிலைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. இவற்றில் ட்ரைக்கோ பிளாஸ்டுகள்(Trichoblasts) காணப்படுவதில்லை.
2. செங்குத்து நூலிழைகள்:
இவை அடித்தளத்தில் பரவி கிடக்கும் நூலிழைகளில் இருந்து உருவாகின்றன. இதில் சில பரவி ஓடும் அச்சுகளின் மேல் நோக்கி திரும்பிய முனைகளால் உருவாகலாம். இந்த செங்குத்தாக எழும் நூலிழைகளில் ட்ரைக்கோபிளாஸ்டுகள் காணப்படுகின்றன.
பொருளாதார முக்கியத்துவம் :
அகர் அகர் மற்றும் கரஜீனன் தயாரிப்பு: இந்த சிவப்பு பாசியில் இருந்து (Agar-Agar) மற்றும் (carrageenan) போன்ற ஜெல்லிங் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இவை உணவு பதப்படுத்தல், ஐஸ்கிரீம், மற்றும் ஜெல்லி தயாரிப்பு, மருந்து தொழில் நுட்பம், ஆய்வக கலாச்சாரம் போன்றவற்றில் பயன்படுகின்றன.
மருந்து பயன்பாடுகள்: பாலிசைப்போனியாவில் காணப்படும் உயிர் செயலாற்றும் இரசாயனங்கள் புற்றுநோய் எதிர்ப்பு (Anti-cancer), நுண்ணுயிர் எதிர்ப்பு (Anti-bacterial, Anti viral), அழுகிய எதிர்ப்பு (Anti-oxidant) போன்ற மருத்துவ பண்புகளை வழங்குகின்றன.
உணவு பயன்பாடு: பாலிசைப்போனியா சில நாடுகளில் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக உள்ளது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: கடல்சார் உயிரினங்களுக்கு வாழிடம் அளிக்கிறது. கடல் சூழலில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கும், கார்பன் சுழற்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயிரியல் ஆராய்ச்சி: பாலிசைப்போனியா வகைகள் அதன் வளர்ச்சி, சுழற்சி, மற்றும் மரபணு அமைப்பு காரணமாக பல உயிரியல் மற்றும் மரபியல் ஆராய்ச்சிகளில் மாதிரியாக பயன்படுகின்றன.
பாலிசைப்போனியா ஒரு சிறப்பான பாசி வகை ஆகும். இது பல தொழில் நுட்பங்கள், மருத்துவம், உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பல்வேறு பயன்பாடுகள் காரணமாக இது ஒரு மதிப்பு மிக்க உயிரினமாக கருதப்படுகிறது.