
காய் மற்றும் பழ விதைகளை சேமிப்பதற்கு முன் விதைகளை நன்றாக உலரவைத்து குளிர்ந்த, இருண்ட உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும். விதைகளை சேகரித்து அவற்றை உலர வைத்து காற்று புகாத கொள்கலன்களில் சேமித்து வைப்பது அவசியம்.
விதைகளை பிரித்தெடுப்பது
பழங்கள் மற்றும் காய்களில் இருந்து விதைகளை கவனமாக பிரித்து எடுக்கவும். விதைகளை சேமிப்பதற்கு முன் அவற்றின் மேல் உள்ள கூழ், சதை பகுதியை அகற்ற வேண்டும்.
விதைகளை உலர்த்துதல்
விதைகளை காகிதத்தில் பரப்பி காற்று புகாத இடத்தில் உலர வைக்கவேண்டும். அவை முற்றிலும் காய்ந்தவுடன் சேகரித்து வைக்க வேண்டும்.
விதைகள் சேமிப்பு
விதைகளை காகித உறைகளில் அல்லது காற்று புகாத பெரிய கொள்கலன்களில் சேமித்து வைக்கலாம். விதைகளை குளிர்ந்த, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைப்பதும் சிறந்தது வெப்பநிலை சீராக வைத்திருக்க உதவும்.
தேதி, பெயர் குறிக்கவும்
விதைகளின் பெயர் மற்றும் சேகரித்த தேதி போன்றவற்றை குறித்து வைக்கவும். விதைகளை சேமிக்கு முன் அவை முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதிப்படுத்தவும். பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அவை ஈரப்பதத்தை அதிகரிக்கும்.
விதைகளை சேமிக்க குளிர்சாதன பெட்டியின் அடிப்பகுதி மிகவும் பொருத்தமானதாகும். விதைகளை இருண்ட குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம் தோட்டத்தில் உள்ள தாவரங்களை வளர்ப்பதுதான் கார்பன் டை ஆக்சடை குறைக்கலாம் மேலும் தாவரங்களை வளர்க்க வணிகரீதியாக பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் உரங்களை தயாரிக்கலாம்.
விதைகள் சேமிப்பதால் பயன்கள்
வீட்டுத் தோட்டத்திலிருந்து விதைகளை சேமிப்பதனால் தாவர வகைகளை பாதுகாத்து ஆண்டுதோறும் செழிப்பான தோட்டத்தை வளர்க்கலாம். சேமிக்கப்பட்ட விதைகளை அடுத்த ஆண்டு புதியதாக வைத்திருக்க உதவும். ஆரோக்கியமான தாவரங்களிலிருந்து விதைகளை முறையாக அறுவடை செய்தல், உணர்த்துதல், சேமித்தல் ஆகியவை நல்ல பண்புகளையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.
அண்மையில் நண்பர் வீட்டுக்கு சென்றபோது அவரும், அவர் மகனும் சேர்ந்து, சில விதைகளை தனித்தனியாக ஒரு கவரில் போட்டு எழுதிக் கொண்டிருந்தனர்.
எதற்கு? என்று விசாரித்தபோது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சொன்னதை நண்பரின் மகன் விவரித்து சொன்னான்.
வீட்டில் பழங்கள் சாப்பிட்ட பின் ஒவ்வொருவரையும் பழங்களின் விதைகளை கழுவி எடுத்து வரச்சொன்னதாகவும், அவற்றை மண் உருண்டைகளில் வைத்து விதைப்பந்துகளாக தயார் செய்வதாகவும் சொன்னான். பள்ளியில் எல்லோரும் சுற்றுலா செல்லும்போதும், வீட்டில் விடுமுறையில் சுற்றுலா செல்லும்போதும் இந்த விதை பந்துகளை மலைப்பகுதிகளிலோ, சாலை ஓரங்களிலோ, தோட்டங்களிலோ, நல்ல இடங்களாக பார்த்து வீசிவிட்டு வரலாம் என்று சொன்னான்.
மேலும் சப்போட்டா, தர்பூசணி, மா, பலா சீதாப்பழம், எலுமிச்சை என பல விதைகளை இப்படி சுத்தம் செய்து வைத்திருப்பதாக சொன்னான். இந்த மழைக்காலத்தில் அந்த விதைப்பந்துகள் எங்காவது விழுந்து முளைத்தால் காட்டு விலங்குகளுக்கும் / பறவைகளுக்கும், பலன் தந்து உதவும். நமக்கும் இதனால் மழை வரும்.
பசுமை சுற்றுச் சூழலாகவும் இடம் மாறி குளிர்ச்சியாகவும், நல்ல காற்று, தண்ணீர் என தூய்மையாக இருக்கலாம் என்று சொன்னவனையும், அவனை ஆசிரியரையும் பாராட்டி நாங்களும் இக்கோடை விடுமுறையில் சாப்பிட்ட பழங்களின் விதைகளை சேமித்து வைக்கிறோம்.
சுற்றுலாவோ, வேறு மலை பிரதேசங்களுக்கு செல்லும்போது போட எடுத்து வைக்கிறோம். மற்றவர்களிடமும் சொல்லி இதனை எடுத்து போகச்சொல்லி உள்ளோம். நீங்களும் இதனை உங்கள் தோட்டத்திலும் செய்து பாருங்கள்.