மாடித்தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்: குறைஞ்ச இடத்துல கொத்து கொத்தா காய்கறிகள் வளர்க்கலாம் வாருங்கள்!

நகர்ப்புற வீடுகளில் பால்கனி மற்றும் மாடித்தோட்டம் அமைத்து, இயற்கை முறையில் காய்கறிகளை செழிப்பாக வளர்க்க எளிய வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாடித்தோட்டம் | terrace garden tips
மாடித்தோட்டம் | terrace garden tipsAI Image
Updated on

நகர வீடுகளில் பால்கனி, மாடி போன்ற குறைந்த இடத்திலும் தொட்டி, பைகள் மூலம் காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. அரிசி, பருப்பு கழுவுநீர், முட்டை வேக வைத்த நீர், பழத்தோல், டீ-காபி தூள், முட்டை ஓடு, காய்ந்த இலைகள் போன்ற இயற்கை உரங்கள் மூலம் செடிகளுக்கு சத்து சேர்த்து, மண்புழு உரம் தயாரிக்கும் முறையும் கூறப்படுகிறது.

இன்று நகரங்களில் பெரும்பாலோனார் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான பால்கனி மற்றும் மாடியில் தொட்டிகளில் அல்லது பைகளில் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு காய்கறி தோட்டம் அமைத்து பயிர் செய்கிறார்கள். அந்த தோட்டத்தை மேம்படுத்த சில எளிய இயற்கை வழிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

மாடித்தோட்டம் மேம்படுத்த எளிய வழிகள்:

1. உர மேலாண்மை (Fertilizer Management)

  • அரிசி, பருப்பு கழுவும் நீர் – செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஸ்ப்ரே செய்யலாம்.

  • முட்டை வேக வைத்த நீர் – குளிரவைத்து இன்டோர் பிளாண்ட்ஸில் தெளிக்கலாம்.

  • காய்கறி, வெங்காயம், பூண்டு கழிவு நீர் – ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி செடிகளுக்கு ஊற்றலாம்.

  • வாழைப்பழத் தோல் – தொட்டிகளில் போடலாம்; மக்னீசியம் சத்து நிறைந்தது.

  • பழத் தோல் நீர் – 2 நாள் ஊறவைத்து ஸ்ப்ரே செய்யலாம்.

  • கழிவுகளை காயவைத்து உரம் தயாரித்தல் – மண் / மண்புழு உரம் சேர்த்து கிளறி வைக்கவும்.

  • ஒரு மாதத்தில் இயற்கை மண்புழு உரம் கிடைக்கும்.

  • கோல்டன் வாட்டர் (Golden Water) – உரத் தண்ணீர்; தண்ணீரில் கலந்து ஊற்றினால் பூக்கள், காய்கள் அதிகம் கிடைக்கும்.

  • டீ & காபி தூள் – வெயிலில் உலர்த்தி வாரம் ஒருமுறை உரமாகப் பயன்படுத்தலாம்.

  • முட்டை ஓடு பொடி – சுத்தம் செய்து உரமாகப் பயன்படுத்தலாம் (வேகவைத்தது வேண்டாம்).

  • காய்ந்த இலைகள் – மாதம் ஒருமுறை சேகரித்து உரமாகப் பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டம்  | terrace garden tips
மாடித்தோட்டம் | terrace garden tipsAI Image

மாடித்தோட்டம் செடிகள் வளர்ப்பு வழிமுறைகள் (Plant Care & Growing Tips):

  • சிறிய தொட்டிகளில் கீரை வகைகள் விதைத்து வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.

  • சிறு கீரை வகைகளை கலந்து விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.

  • பாலக் போன்ற கீரைகள் – பெரிய தொட்டிகளில் வளர்க்கவும்.

  • கீரையை பறிக்கும் போது தண்டுகள் விட்டு பறித்தால் மீண்டும் புதிய தளிர்கள் விட உதவும்.

  • தக்காளி – ஒரு தொட்டிக்கு இரண்டு செடிகள் வீதம் வைத்து கம்பி / கயிறு கட்டி விட்டால் நிலத்தில் படராமல் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வம் செழிக்க வளர்க்க வேண்டிய 20 வாஸ்து செடிகள்!
மாடித்தோட்டம் | terrace garden tips
  • பச்சை மிளகாய் – 2-3 செடிகள் ஒரே தொட்டியில் நடுவது நல்லது.

  • புதினா – சிறிய தொட்டிகளில், வெயில் படும் இடத்தில் வையுங்கள்.

  • மேரிகோல்ட் (சாமந்தி) – நடுவில் வைத்தால் அழகும் புத்துணர்ச்சியும் அளிக்கும். பூச்சி கட்டுப்பாடு அதிகரிக்கும்.

  • டேபிள் ரோஜா – ஜன்னல் அருகில் வைக்கலாம்; கலந்த நிறங்கள் அழகாக இருக்கும்.

  • பாகல் போன்ற கொடி வகைகள் – கம்பி, கயிறு கட்டி வளர்க்கலாம்.

  • கத்தரி, வெண்டை, முள்ளங்கி போன்றவற்றை எளிதில் வளர்க்கலாம்.

  • சிறு தொட்டிகளில் மணத்தக்காளிக் கீரையை விதைத்தால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.

  • துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளையும் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
பல்லிகள் தலைதெறிக்க ஓடணுமா? உடனே இந்த 7 செடிகளை உங்க வீட்ல வளருங்க!
மாடித்தோட்டம் | terrace garden tips

மாடித்தோட்டம்: பூச்சி கட்டுப்பாடு (Natural Pest Control):

  • பெருங்காயம் + புளித்த மோர் + தண்ணீர் – தெளிக்கலாம்.

  • இஞ்சி + பூண்டு + மிளகாய் – அரைத்து தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்யலாம்.

  • லெமன் லிக்விட் அல்லது எலுமிச்சைச் சாறு – தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

  • பேக்கிங் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து நன்கு தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்யலாம்.

இரசாயனக் கலப்படமில்லாத நஞ்சு இல்லாத தூய்மையான நாட்டுக்காய்கறிகளை உங்கள் சொந்தக் கைப்பட அறுவடை செய்து, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை உங்கள் குடும்பத்தினருக்குப் பரிமாறும் பெருமிதத்தை உடனடியாகப் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com