மனிதனையே தாக்க வல்ல மார்ஷியல் கழுகு: இயற்கையின் விசித்திரப் பறவை!

ஆப்பிரிக்காவில் காணப்படும் மார்ஷியல் கழுகின் வியக்க வைக்கும் சக்திகள், வேட்டைத் திறன்கள் மற்றும் அழிந்துவரும் காரணங்களை அறியுங்கள்.
மார்ஷியல் கழுகு | Martial Eagle
மார்ஷியல் கழுகு | Martial EagleImage credit: Chatgpt
இந்திரா கோபாலன்

இந்திரா கோபாலன், பி.எஸ்சி பட்டதாரி. மங்கையர் மலரின் 40 ஆண்டுகால வாசகி; வாசக எழுத்தாளர். திருமணத்திற்குப் பின் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், பல இதழ்களுக்கு எழுதிப் பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Updated on: 

மனிதக் கண்களைவிட 8 மடங்கு கூர்மையான பார்வையும், மனிதனையே கொல்லும் ராட்சத சக்தியும் கொண்ட ஆப்பிரிக்காவின் மார்ஷியல் கழுகு குறித்த தகவல்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும்! இந்த அரிய பறவையினம் தற்போது ஏன் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது? இதன் மர்மமான வாழ்வியலையும் வேட்டைத் திறன்களையும் முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்!

ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரிய பறவையாக மார்ஷியல் கழுகு கருதப்படுகிறது‌. இது 31லிருந்து 38 அங்குலம் நீளமும், 3.6 கி. கிராம் அளவு எடையும் மற்றும் இதன் இறகு 72 லிருந்து 102 அங்குலம் வரையில் நீண்டு காணப்படும் பெரிய பறவையாகும்.  இந்த இனத்தில் பெண் பறவைகள் அதிக கனமாகவும்  ஆண் இனத்தை விடப் பெரிய அளவிலும் காணப்படும். 

இந்த கழுகுகளின் இனப்பெருக்க காலம் நவம்பரில் மேற்கு ஆப்ரிக்காவிலும், ஆகஸ்டில் கிழக்கு ஆப்ரிக்கா பகுதியிலும், பிப்ரவரியில் மத்திய ஆப்ரிக்க பகுதியிலும் நடக்கும்‌. குச்சிகளால் கட்டப்படும் பெரிய கூடு 12 லிருந்து 15மீட்டர் அகலமானதாகவும் மேலும் 60 செ.மீ ஆழமாகவும் இருக்கும்‌. மார்ஷியல் கழுகு மிக உயரமான மரத்தில் கூடு கட்டும். ஒரே முட்டை 47 நாட்களுக்கு அடைகாக்கப்பட்டு குஞ்சு வெளிவரும்‌.

வளர்ந்த பெரிய கழுகுகள் அடர்த்தியான ப்ரௌன் நிறத்திலும் தலையில் கருப்புக் கொண்டையுடனும் விஸ்தாரமான வலுவான உடலுடன் காணப்படும். இதன் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்தில் ப்ரௌன் திட்டுகளுட ன் காணப்படும்.  இதன் இறகுகளுக்கு அடியில் வெள்ளையாக இருக்கும். பறக்கும் போது உடல் நல்ல ப்ரௌன் நிறத்திலும் அடிப்பகுதி வெள்ளையாக காட்சிதரும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் தொட்டியில் உள்ள கற்றாழையை அழுகாமல் பாதுகாக்க 4 வழிகள்!
மார்ஷியல் கழுகு | Martial Eagle

இதன் வால்பகுதி அடர்த்தியான ப்ரௌன் நிறத்திலும் கண்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். சிறிய அளவில் இருக்கும்போது ப்ரௌன் நிறம் குறைவாக இருக்கும் இதன் அடிப்பகுதியும் வளர்ந்த பறவைகளுக்கு இருப்பது போன்று வெண்மையாக இல்லாமல் சற்று வெளிர்நிறத்தில் காணப்படும்.

மார்ஷியல் கழுகு சிறகை விரித்தபடி பெரும்பாலும் பறந்து கொண்டே இருக்கும். இது 5500 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் பறக்கக்கூடியது‌. இந்த அளவிற்கு இது உயரத்தில் பறக்கும் போது நம் கண்களுக்குத் தெரியாது‌. இந்தக் குறிப்பிட்ட கழுகின் பார்வை மனிதர்களின் கண்களை விட எட்டு மடங்கு அதிக பார்வைசக்தி கொண்டதாகத் தெரிகிறது‌.

ஆறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து இரையை கண்டு அறிந்து பிடிக்கக் கூடிய சக்தி படைத்தது. மிக உயர்ந்த நிலையில் பறக்கும்போது இதன் வலுவான கால்கள், கூர்மையான நகங்கள், கூர்மையான அலகு மூலம் இரையைக் கண்டவுடன் பாய்ந்து அதைப் பிடிக்கும் சக்தியைக் கொண்டது.

மார்ஷியல் கழுகு | Martial Eagle
மார்ஷியல் கழுகு | Martial Eagle

இதன் இராக்ஷச சக்திமூலம் மனிதனையே கொல்லக்கூடிய சக்தி படைத்தது. புள்ளிகள் நிறைந்த இதன் அடிப்பாகம் இரையை மிக வேகமாக தாக்கிப் பிடிப்பதால் இதைச் செல்லமாக காற்றின் சிறுத்தைப் புலி என்று குறிப்பிடுகிறார்கள். 

இது மிகவும் சக்திவாய்ந்த பறவையாக இருந்தாலும் இது அளவில் குறைந்து வருவது கலவையைக் தருகிறது‌. ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் அதிக அளவில் இது வேட்டையாடப்படுகிறது‌. மேலும் இது ஆடு மாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதி கொன்று விடுகிறார்கள். மேலும் இதன் கூடுகளை அழிப்பது, விஷம் கொடுப்பது போன்ற மனிதர்களின் செயலால் இதன் இனம் அழிந்து வருகிறது. 

இதையும் படியுங்கள்:
மிளகாய் செடியில் பூக்கள் கொட்டுகிறதா? கொத்து கொத்தாக காய் காய்க்க டிப்ஸ்!
மார்ஷியல் கழுகு | Martial Eagle

மக்கள் தொகை பெருக்கத்தால் இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது‌. மேலும்  பாரம்பரிய மருந்துகளில் இதன் பாகங்கள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. இந்த இனத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மற்ற கழுகுகளிலிருந்து வித்தியாசமாகக் காணப்படும் இந்த பார்லியில் கழுகு ஆப்பிரிக்காவின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பறவையைப் பற்றிய விரிவான தகவல்களைப் படிப்பதன் மூலம் விலங்கு உலகம் குறித்த உங்கள் அறிவு வளர்வதோடு, இயற்கையின் அரிய உயிரினங்களை அடையாளங்காணும் தனித்துவமான பார்வையைப் பெறுவீர்கள்.