130 ஆண்டுகளைக் கடந்த முல்லைப் பெரியாறு அணை!தற்போதைய ஆய்வும் வரலாற்று உண்மைகளும்!

முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு, பென்னிகுவிக் தியாகம் மற்றும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் சமீபத்திய ஆய்வுகள் பற்றிய முழுமையான தொகுப்பு.
முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam
முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam Image credit: Chatgpt
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

தென் தமிழகத்தின் வறண்ட நிலங்களை வளமாக்க ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தன் சொந்த சொத்தை விற்றுப் போராடி கட்டிய முல்லைப் பெரியாறு அணை, 130 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. இந்நிலையில், அணையின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய தேசிய நிபுணர் குழு களம் இறங்கியுள்ளது. வரலாறு, தியாகம் மற்றும் தற்கால பாதுகாப்புச் சூழல் குறித்த இந்த விறுவிறுப்பான தொகுப்பு முழுவதையும் தொடர்ந்து படியுங்கள்!

16-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் பல ஆறுகள் வறண்டதால் பஞ்சம், பட்டினி அதிகரித்தது. இதற்காக வட மேற்கு திசையில் சென்று அரபிக்கடலில் கலந்த முல்லைப் பெரியாற்றில் அணை கட்ட முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு.

இப்பொறுப்பு ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் வசம் 1882-ல் பிரிட்டிஷ் அரசு ஒப்படைத்தது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அடர்ந்த காடு, வன விலங்குகள், அதீத மழை பொழிவு உள்ளிட்டவை பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் 1887-ம் ஆண்டு செப்டம்பர் 21-ல் பெரியாறு அணை அடித்தள பணிக்கான முதல் கல்லை ஊன்றினார் ஆங்கில பொறியாளரான பென்னி குவிக். இதையடுத்து அணைக்கான வேலைகள் தொடங்கின.

இருப்பினும், கட்டப்பட்ட அடித்தளப் பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அணை கட்டும் பணியைத் தொடர வேண்டாம் என்று அப்போதைய ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:
5000 லிட்டர் தண்ணீரை சேமிக்கும், 400 வயதான சென்னையின் அதிசய மரம் பற்றி தெரியுமா?
முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam

இருப்பினும் இங்கிலாந்து சென்ற பென்னிகுவிக் தனது சொத்தின் பெரும் பகுதியை விற்று பணம் திரட்டினார். பின்னர் கோடைகாலத்தின் தொடக்கத்தில் மீண்டும் அடித்தளத்தை வடிவமைத்தார். இப்போது கன மழையால் கட்டுமானம் பாதிக்கவில்லை. அதன் பிறகே, அணை கட்ட சென்னை மாகாணம் பென்னிகுவிக்குக்கு துணை நின்றது. இந்திய பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் பதவிக்கு வந்த முதல் இந்தியரான ஏ.வி. ராமலிங்க அய்யர், மற்றொரு பொறியாளரான எ.டி. மெக்கன்சி ஆகியோர் பென்னிகுவிக்குடன் இணைந்து பணியாற்றினர்.

மணலும் சுண்ணாம்பும் கலந்து சுருக்கிகளை உருவாக்கி சிறு சூளைகளில் வைத்து சுட்டெடுத்தது, கருங்கல்லை 6 அங்குல கனத்தில் உடைத்து அடுக்கி சுருக்கி கலவையால் அணை கட்டப்பட்டது.

அப்போதே 5 ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்ந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 1895-ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய மதிப்பீடு ரூ.81.30 லட்சம். சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் பிரபு தலைமையில் 1895 அக்.10-ம் நாள் அணை அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam
முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam Image credit: Gemini AI

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பூந்தொட்டியில் எறும்பு தொல்லையா! விரட்ட எளிய வழிமுறைகள்!
முல்லைப் பெரியாறு அணை | Mullaperiyar Dam

முல்லைபெரியாறு அணை நிர்வாகம் மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு ‘பெரியாறு திட்டத்தின்’ கீழ் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றுப் பின்னணி, பென்னிகுவிக் மேற்கொண்ட தியாகங்கள் மற்றும் தற்கால பாதுகாப்பு ஆய்வுகள் குறித்த துல்லியமான முழுமையான அறிவைப் பெற்று, அணை குறித்த தெளிவான புரிதலைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com