பச்சை பசேலென மனதை கொள்ளை கொள்ளும் இந்தியாவின் 10 அழகிய நீர்வீழ்ச்சிகள்!

இந்தியாவின் மறைந்திருக்கும் 10 அழகிய நீர்வீழ்ச்சிகள் (Waterfalls) பற்றிய முழுத் தொகுப்பு.
நீர்வீழ்ச்சிகள் (Waterfall)
நீர்வீழ்ச்சிகள் (Waterfall)

நீங்கள் இயற்கையை ரசிப்பவராக இருந்தால், அவசியம் காணவேண்டிய இயற்கை எழில் நிறைந்த பத்து நீர்வீழ்ச்சிகள் (Waterfall) குறித்து பார்ப்போம்‌...

1. குனே நீர்வீழ்ச்சி:

Kune Waterfall
Kune WaterfallAI Image

மகாராஷ்டிராவில் லோனாவாலா பகுதியில் உள்ள இது இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். மழைக்காலத்தில் இதன்  வேகம் அதிகமாகும்‌. தற்போது இங்கு யாரையும் அனுமதிப்பதில்லை.

2. சதோடி நீர்வீழ்ச்சி:

Sathodi Waterfalls
Sathodi WaterfallsAI Image

உத்தர கர்நாடகா பகுதியில் இது அமைந்துள்ளது‌. பலவித நதிகள் இணைந்து நீர்வீழ்ச்சியாகப் பாய்வது மிகத் தனிச் சிறப்பு. இது செவ்வக வடிவில் அமைந்திருக்கும். கல்லாரமனே காட் பகுதியில் காணப்படுகிறது. இங்கு மக்கள் குளிக்கலாம்‌. பச்சை பசேலென்று அடர்ந்த இயற்கையழகு நிறைந்த இந்த இடம் காணவேண்டிய இடமாகும்.

3. ஹெப்பே நீர்வீழ்ச்சி:

Hebbe Falls
Hebbe FallsAI Image

கர்நாடகாவின் வனப்பகுதியில் உள்ளது‌. பத்ராநதி இந்த நீர்வீழ்ச்சியில் இரண்டாகப் பிரிகிறது‌. ஒன்று தொட்ட ஹெப்பே என்றும், இன்னொன்று சிக்க ஹெப்பே என்றும் அழைக்கப்படுகிறது.  நீர்வீழ்ச்சி (Waterfall) விழும் இடம், கீழே குளம் போன்று காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகமே உறைந்து பார்க்கும் கிளிமாஞ்சாரோ மலையின் ரகசியம் என்ன?
நீர்வீழ்ச்சிகள் (Waterfall)

குளிக்கவும் நீந்தவும் பயன்படுகிறது. மழைக்காலத்தில் காணவேண்டிய நீர்வீழ்ச்சி‌. இது பெங்களூரிலிருந்து 278கி. மீ தொலைவில் உள்ளது. காபி தோட்டங்கள் காடுகள் நிறைந்த இடத்தில் உள்ளது‌. மழைக்காலத்தில் இரட்டை நீர்வீழ்ச்சி இயற்கை ப்ரியர்களை ஈர்க்கிறது‌.

4. ஜரிபணி நீர்வீழ்ச்சி:

Jaripani Waterfall
Jaripani WaterfallAI Image

உத்திரப் பிரதேசம் முசோரியில் இது அமைந்துள்ளது‌. இங்குள்ள நீர் ஸ்படிகம் போன்று சுத்தமாக இருக்கும்‌. பைன் மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது‌.  இங்கு நீர்வீழ்ச்சி விழுவது இடியோசை போன்று இருக்கும்‌. பலவித வண்ணப் பறவைகளின் ஒலியை கேட்டும் அவைகளை கண்டும் ரசிக்கலாம். கோடைக்காலத்தில் குளிர்ச்சியை இங்கு அனுபவிக்கலாம்‌.  இயற்கைப்ரியர்களுக்கு ஏற்ற இடம்.

5. பரேஹிபானி நீர்வீழ்ச்சி:

Barehipani Waterfall
Barehipani WaterfallAI Image

இந்த நீர்வீழ்ச்சி ஒரிச்சாவின் சிம்லிபால் தேசிய  பூங்காவில் உள்ளது. இந்தியாவிலேயே உயரமான நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இது இரட்டையாக விழுவது தனிச்சிறப்பாகும்.  அதிக மழையின் காரணமாக ஓவென்று இரைச்சலுடன் தொடர் அருவியாகக் கொட்டுவது காண மகிழ்ச்சியை உண்டாக்கும். அடர்ந்த காடுகள் காணப்படும் மலை உச்சியிலிருந்து கொட்டுவது தனித்தன்மையானது. இது சுமார் 1309அடி உயரத்திலிருந்து விழுகின்றது‌.

6. சவாய் நீர்வீழ்ச்சி:

Savai Waterfall
Savai Waterfall

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.  மத்திய இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.  இயற்கை அழகு சூழலில் நீர்வீழ்ச்சி கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. 

7. நுரானங் நீர்வீழ்ச்சி:

Nuranam Waterfalls
Nuranam Waterfalls

இந்த இடம் முழுவதும் அடர்ந்த காடுகள் மற்றும் பனிபடர்ந்த சிகரங்களும் சூழ்ந்த இடமாக அமைந்துள்ளது.  இதை போங் போங் நீர்வீழ்ச்சி (Waterfall) என்றும் கூறுவார்கள். 100மீட்டர் உயரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவங் மாவட்டத்தில் உள்ளது. மழைக் காலங்களில் இந்த நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகமாகி காணப் பரவசத்தை ஏற்படுத்துகிறது.

8. பர்கானா நீர்வீழ்ச்சி:

Barkana Falls
Barkana Falls

கர்நாடகாவின் அகும்பே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயர்ந்த நீர்வீழ்ச்சி யாக கருதப்படுகிறது. இது சுமார் 260மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது‌ இங்குள்ள இயற்கை அழகுகளை புகைப்படம் எடுக்கலாம். மழைக்காலங்களில் வெள்ளை திரைச்சீலை போட்டால் போன்று கொட்டும் அருவியையும். சுற்றிலும் பச்சைபசேலென்ற இயற்கை வனப்பும் காணக் கண் கோடி வேண்டும். அக்டோபரில் இருந்து பிப்ரவரி வரை செல்லலாம்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரை வயிற்றிலும் வேரிலும் சேமிக்கும் 9 விசித்திர மரங்கள்! தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!
நீர்வீழ்ச்சிகள் (Waterfall)

9. தலக்கோணம் நீர்வீழ்ச்சி:

Talakona Waterfalls
Talakona Waterfalls

ஆந்திராவின் வெங்கடேஸ்வரா தேசியப் பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். மழைக்காலங்களில் மிக அடர்த்தியாக அருவி கொட்டும் அழகும் மற்றும் சுற்றிலும் காணப்படும் இயற்கைப் போர்வை போர்த்திய பச்சை பசேலென்ற அழகும் எல்லோரையும் சுண்டி இழுக்கும். தலக்கோணம் காடுகளில் சிங்கம், ராக்ஷச அணில், சிறுத்தை போன்றவை உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியின் நீரில் பல மூலிகைகள் கலந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இயற்கைப் ப்ரியர்களுக்கு ஏற்ற இடமாகக் திகழ்கிறது.

10. வஜ்ரை நீர்வீழ்ச்சி:

வஜ்ரை நீர்வீழ்ச்சி  (Vajrai Waterfall)
வஜ்ரை நீர்வீழ்ச்சி (Vajrai Waterfall)

மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. பலவித ஓடைகள் சேர்ந்து மலைச்சிகரங்களிலிருந்து விழும் அழகும் இயற்கை எழில் சூழ்ந்த அழகும் பச்சை வண்ணம் போர்த்திய இயற்கை எழிலும் நம்மை மயக்க வைக்கும். இது சுமார் 850அடி உயரத்திலிருந்து விழுகிறது . இங்கு கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கை எழிலும், பறவைகளின் இனிய ஒலிகளும் நம்மைக் கவரும்‌. இயற்கை ரசிகர்களுக்கு காண வேண்டிய இடமாகும்‌.

இதையும் படியுங்கள்:
மின்மினிப் பூச்சிகள் ஏன் ஒளிர்கின்றன? அதிர்ச்சியூட்டும் காரணம் இதுதான்!
நீர்வீழ்ச்சிகள் (Waterfall)

இந்தத் தொகுப்பின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்குகளில் மறைந்திருக்கும் அதிசய நீர்வீழ்ச்சிகளின் நளினத்தை அறிந்து, அடுத்த உங்களது விடுமுறைப் பயணத்தை மிகச் சிறப்பாகவும் மன அழுத்தமில்லாமலும் திட்டமிட உங்களை இது முழுமையாகத் தூண்டும்.

logo
Kalki Online
kalkionline.com