தண்ணீரை வயிற்றிலும் வேரிலும் சேமிக்கும் 9 விசித்திர மரங்கள்! தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் தண்டு மற்றும் வேர்களில் தண்ணீரை சேமித்து வளரும் அதிசய மரங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.
வறட்சி தாங்கும் மரங்கள் | Drought resistant trees
வறட்சி தாங்கும் மரங்கள் | Drought resistant treesAI Image

இந்தியாவின் வறண்ட பகுதிகளில் தண்டுகள், வேர்கள், அடிப்பகுதிகளில் தண்ணீரை சேமிக்கும் வறட்சி தாங்கும் மரங்கள் குறித்து இந்த பதிவு விளக்குகிறது. சஜ், செமல், ஜிவோடியா, முருங்கை, பாவோபாப், கெஜ்ரி, சவாய், பேய் மரம், ஹில்டேகார்டியா போன்றவை வறட்சியிலும் உயிர் வாழ தண்ணீரை சேமித்து, மனிதர், விலங்குகள், மருத்துவம், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கு பலனளிக்கின்றன.

இந்தியாவில் சில இடங்களில் இருக்கும் மரங்கள் தங்கள் தண்டுகளிலும் மற்றும் சில மரங்கள் தங்கள் வேர்களிலும் நீர் சத்தை சேமித்து வைக்கின்றன. அதனால் இத்தகைய மரங்கள் எப்பேர்ப்பட்ட வறட்சியான சூழலிலும் வளரமுடியும். அத்தகைய வறட்சி தாங்கும் மரங்கள் சிலவற்றைக் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. சஜ் (Terminalia tomentosa):

வறட்சி தாங்கும் மரங்கள் | சஜ் (Terminalia tomentosa)
சஜ் (Terminalia tomentosa)AI Image

இந்தியாவின் மத்தியப் பகுதியில் காணப்படும் இதன் மரப்பட்டைகள் கனமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்‌. இது எப்பேர்ப்பட்ட வறட்சியையும் தாங்கி வளரும். இந்த வகை மரங்களில் சுமார் 5 லிருந்து 10 சதவீத மரங்கள் தங்கள் தண்டுக்குள் நீரை நிரப்பி வைக்கும்‌. தண்ணீர் நிறைந்த மரங்களின் பட்டைகள் வீக்கமாக இருக்கும். இதை ஓட்டையிட்டு கோடைகாலத்தில் மக்கள் தண்ணீரை பருகுவார்கள். இது மருத்துவ குணமுள்ளதாகவும் அறியப்படுகிறது.

2. முள் இலவம் (Red silk cotton - Bombax ceiba):

வறட்சி தாங்கும் மரங்கள் | Bombax ceiba
Bombax ceiba

இவை வறண்ட இடங்களில் காணப்படும்‌. தண்ணீர் வறண்ட நிலையில், இம்மரங்கள் தன் தண்டின் நீர் மூலம் உயிர் வாழ்கின்றன. இம்மரத்தில், இலைகளே இல்லாத நிலையில், கருஞ்சிவப்பு மலர்களைக் காணலாம். ஸ்பான்ஞ்சு போன்ற மென்மையான இம்மரத்தண்டில் தண்ணீர் சேமிக்கப்படுவதாக தெரிகிறது. இந்த தண்ணீர் மூலம் பூக்கள் மலர்கின்றன. கரடிகள், தேன்சிட்டு மற்றும் வௌவால்கள் ஆகியவை இந்த மலர்களை உணவாகக் கொள்கின்றன. இந்த மரம் தனக்குள் ஈரத்தன்மையைத் தக்கவைத்து பூக்களை மலரவைக்கிறது.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் வாழ்ந்தும் நனையாத வாத்துகள் - காரணம் தெரியுமா?
வறட்சி தாங்கும் மரங்கள் | Drought resistant trees

3. ஜிவோடியா (Givotia rottleriformis):

வறட்சி தாங்கும் மரங்கள் | Givotia rottleriformis Griff
Givotia rottleriformis GriffAI Image

மிகவும் வறட்சியான இடத்தில் கூட தாக்குபிடிக்க கூடிய மரமிது. இது ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. இவை தண்டுகளில் தண்ணீரை சேமித்து வைக்கின்றன. இந்த மரம் கொண்ட பள்ளி பொம்மைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

4. முருங்கை மரம்:

வறட்சி தாங்கும் மரங்கள் | drumstick tree
drumstick tree

இது மிக வறட்சியான இடத்தில் கூட வளரக்கூடியது. இதன் வேர்களில் நீரை சேமித்து வைக்கிறது. இதை வெட்டினாலும் இதன் வேர்களின் நீர்சத்துக்கள் மூலம் மீண்டும் துளிர்க்க் கூடியது.

இதையும் படியுங்கள்:
டைனோசரை முழுங்கியதா இந்த பாம்பு… விஞ்ஞானிகளை அதிரவைத்த உண்மை!
வறட்சி தாங்கும் மரங்கள் | Drought resistant trees

5. பாவோபாப்:

வறட்சி தாங்கும் மரங்கள் | Baobab tree
Baobab tree

இது ஒரு அதிசயமான ராட்க்ஷச மரமாகக் கருதப்படுகிறது. குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. அரேபியர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கொண்டுவரப்பட்டதாக அறியப்படுகிறது. பூமியிலேயே இயற்கையான தண்ணீரை சேமித்து வைக்கக் கூடிய மரமாக இது விளங்குகிறது. இதன் தண்டுகளில் அளவிற்கதிகமான தண்ணீர் சேமிக்கப்படுவதால், இது மிக வறட்சியான இடங்களில் கூட தாக்குப்பிடித்து வளரக்கூடியது‌. ஆப்ரிக்காவில் யானைகள் இந்த மரத்தை தாக்கி நீர் உண்ணும்.

6. கெஜ்ரி:

வறட்சி தாங்கும் மரங்கள் | Khejri tree
Khejri tree

இது தார் பாலைவனப் பகுதியில் காணக்கூடியது. இது தன் தண்டில் (trunk) தண்ணீரை சேமிக்காமல் பூமிக்கடியில் ஆழமான வேர்கள் உள்ளதால் அதில் தண்ணீரை சேமித்து வைக்கிறது. பூமியில் 30 அடி ஆழம் வரை இதன் வேர்கள் படர்வது வியக்கத்தக்க விஷயமாகும்‌. இந்த மரம் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் மரமாகும். 1730 ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பிஷ்னாய் இன மக்கள் இந்த மரத்தைக் காக்க தங்கள் உயிரை விட்டார்கள்.

7. சவாய் மரம் (Boswellia serrata):

வறட்சி தாங்கும் மரங்கள் | Boswellia serrata
Boswellia serrata

இந்த மரம் தன் அடிப்பாகத்தில் நீரை சேமிக்கிறது. இது‌ கார்போஹைட்ரேட் வெப்பத்திலிருந்து இந்த மரங்களை காக்கிறது. இதன் பிசின் ஆயுர்வேத சிகிச்சையில் பயன் படுத்தப்படுகிறது‌.

இதையும் படியுங்கள்:
மாடித்தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்: குறைஞ்ச இடத்துல கொத்து கொத்தா காய்கறிகள் வளர்க்கலாம் வாருங்கள்!
வறட்சி தாங்கும் மரங்கள் | Drought resistant trees

8. பேய் மரம் (ghost tree):

வறட்சி தாங்கும் மரங்கள் | ghost tree
ghost tree

இம்மரத்தின் தண்டுகளே ஒளிச் சேர்க்கையில் ஈடுபட்டு நல்ல சக்தியைப் பெறுகின்றன. இதன் பட்டைகள் ஈரத்தன்மையுடன் காணப்படுவதால் வறண்ட இடங்களிலும் வளரக் கூடியதாக உள்ளது.

9. ஹில்டேகார்ட் (Hildegardia):

வறட்சி தாங்கும் மரங்கள் | Hildegardia tree
Hildegardia treeAI Image

இந்தவகை மரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் காணப்படுகின்றன. பாட்டில் போன்ற இதன் தண்டில் நீரை சேமிக்கிறது‌. இந்த வகை மரங்கள் குறைந்த அளவே உள்ளன!

இயற்கையின் இந்த விந்தையான வறட்சி தாங்கும் மரங்கள் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், கடுமையான வறட்சிச் சூழலிலும் தாவரங்கள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்ற அரிய அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொண்டு, நமது சுற்றுச்சூழலின் மீதான புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com