பூமியின் உள் வேதனை வெளிப்பாடுகளே நியூசிலாந்தின் மண் எரிமலைகள்!

New Zealand's mud volcanoes
New Zealand's mud volcanoes
Published on

பூமியின் உள் சக்திகள், அழுத்தங்கள், பாறை பிரிவுகள், எரிவாயுக்கள் ஆகியவை இணைந்து உருவாக்கும் அரிய புவியியல் அற்புதங்களில் ஒன்று மண் எரிமலை. உலகின் பல நாடுகளில் மண் எரிமலைகள் காணப்பட்டாலும், நியூசிலாந்து அவற்றுக்கு ஒரு தனிச்சிறப்பான மேடையாக விளங்குகிறது. நியூசிலாந்து பசிபிக் ரிங் ஆஃப் ஃபையர் (Pacific Ring of Fire) அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள நிலவியல் சூழல் தொடர்ந்து செயல்படும் geothermal கண்களில் நிரம்பியுள்ளது. சூடான நீரூற்றுகள், புகை காற்று வாயுக்கள், கீசர்கள், மண் குமிழ்கள் ஆகிய அனைத்தும் நியூசிலாந்தின் இயற்கை அழகில் தனித்துவம் சேர்க்கின்றன.

நியூசிலாந்தின் மண் எரிமலைகளில் உருவாகும் புவியியல் ரகசியம்: நியூசிலாந்தில் காணப்படும் மண் எரிமலைகள் பெரும்பாலும் geothermal mud pools மற்றும் gas-driven mud volcanoes என்ற இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பூமி கேட்ட மிகப்பெரிய ஓசை: 3,000 மைல் தூரம் கேட்ட மர்மம்!
New Zealand's mud volcanoes

Christchurch - உண்மையான மண் எரிமலைகள்: Canterbury பீடபூமியில் சில உண்மையான மண் எரிமலைகள் உள்ளன. இவை அடிநிலத்தில் சிக்கிய Methane போன்ற வாயுக்கள் அழுத்தத்தை அதிகரிக்கும்போது, மண் மற்றும் தண்ணீர் கலவையை Fountain போல மேலே தள்ளுகின்றன. ஆழமான பாறை வெடிப்பு பாதைகள் வழியாக மண் வெடித்தெழும் சத்தத்தோடு இவை வெளிப்படும்.

Rotorua - சூடான மண் குளங்கள் (Geothermal Mud Pools): நியூசிலாந்தில் மிக பிரபலமான மண் குமிழ் பகுதி. இங்குள்ள மண் புழுங்கும் ஒலியுடன் குமிழ்கள் எழும். இவை volcanic magma உடன் தொடர்புடைய மிக அதிக உள் வெப்பம் காரணமாக சூடான நீராவி, சல்பர் வாயு, தண்ணீர் + Clay மண் ஆகியவை ஓரளவு கொதிக்கும் அளவில் வெளிப்படுகின்றன. இது தொழில்நுட்ப ரீதியில் ‘mud volcano’ அல்ல; ஆனால் சூடான மண் தீக்குளங்கள்.

இதையும் படியுங்கள்:
முயல்கள் பற்றி நீங்கள் கேள்விப்படாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்!
New Zealand's mud volcanoes

Taupo Geothermal Zone: Taupo ஏரியை சுற்றிய பகுதிகளில் செயல்படும் geothermal மண் கீசர்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான மண் குளங்களுக்கு 100°C அல்லது அதற்கும் மேல் வெப்பநிலை இருக்கும்.

மண் எரிமலைகளின் இயற்கை முக்கியத்துவம்: புவியியல் ஆய்வுகளுக்கு பயனாளர், அடிநில வெப்பம், பாறை உறுதி, வாயு அழுத்தம் பற்றி அறிய விஞ்ஞானிகள் இந்த இடங்களை பயன்படுத்துகிறார்கள்.

சுற்றுலா ஈர்ப்பு: Rotorua மற்றும் Taupo உலகின் முன்னணி geothermal tourism இடங்கள். அங்கு குமிழும் மண், சூடான வேகும் நிலம், கீசர்கள் அனைத்தும் புவியியல் காட்சியகமே.

மருத்துவம்: சூடான மண் குளங்களின் மண், மூட்டு வலி, சரும சிகிச்சைகாக சிலர் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்!
New Zealand's mud volcanoes

நியூசிலாந்து மண் எரிமலைகளின் தனித்துவம்: பாறை லாவா அல்லாமல் உள் வெப்பம் + வாயு அழுத்தம் + மண் கலவை கொண்டு உருவாகின்றன. சில பகுதிகளில் வெடிப்பு போல சத்தம் எழும்.

நியூசிலாந்தின் மண் எரிமலைகள் வெறும் இயற்கைக் காட்சிகள் அல்ல அவை பூமியின் உள் சக்தி சார்ந்த மறைக்கப்பட்ட செயல்பாடுகளின் அறிகுறிகள். Christchurchன் உண்மையான மண் எரிமலைகளிலிருந்து Rotoruaவின் சூடான குமிழும் மண் குளங்கள் வரை, நியூசிலாந்து புவியியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய ஆய்வகம் போன்றது. புவியின் உள் வெப்ப சக்தி மேற்பரப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை மிகச் சிறப்பாகக் காட்டும் உதாரணம் நியூசிலாந்தின் மண் எரிமலைகள். இவை பூமியின் உள் வாழ்க்கையின் ஒலிகளும், தொடர்ச்சியான இயற்கை மாற்றங்களின் வெளிப்பாடுகளும் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com