வால் இல்லா வட்ட மீன் ‘ஓஷன் சன்ஃபிஷ்’: 30 கோடி முட்டைகள் இடும் மோலா மோலாவின் ரகசிய வாழ்க்கை முறை!

சன்ஃபிஷ் என அழைக்கப்படும் மோலா மோலா: வால் இல்லாத விசித்திர உடலமைப்பு, 3 மீட்டர் நீளம், 2,000 கிலோ எடை, கடற்பறவைகள் மூலம் ஒட்டுண்ணி சுத்தம், மனிதர்களுக்கு ஆபத்தில்லாத அமைதியான கடல் வல்லரசு.
ocean-sunfish-mola
ocean-sunfish-mola
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

யற்கையின் படைப்பில் கடலானது எண்ணற்ற மர்மங்களையும் விசித்திரமான உயிரினங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அவற்றில் மிகவும் தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு மீன் இனம் ‘மோலா மோலா’. ஆங்கிலத்தில் ‘Ocean Sunfish’ என்று அழைக்கப்படும் இந்த மீன், உலகின் மிகப்பெரிய எலும்பு மீன் (Bony Fish) என்ற பெருமையைப் பெற்றது. வால் பகுதி இல்லாதது போன்ற ஒரு தோற்றமும், வட்ட வடிவிலான தட்டையான உடலும் கொண்ட இந்த மீன், கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வாளர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் இன்றும் ஒரு வியக்கத்தக்க புதிராகவே இருந்து வருகிறது.

இந்த மீனைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்:

விசித்திரமான தோற்றம்: இதற்கு சாதாரண மீன்களைப்போல வால் பகுதி கிடையாது. பார்ப்பதற்கு ஒரு பெரிய மீனின் தலைப் பகுதியை மட்டும் தனியாக வெட்டி வைத்தது போன்ற ஒரு தட்டையான, வட்ட வடிவமான உடலமைப்பைக் கொண்டிருக்கும்.

பிரம்மாண்டமான அளவு: இது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை சராசரியாக 1,000 முதல் 2,000 கிலோ வரை இருக்கும். சில மீன்கள் இதையும் தாண்டி வளரக்கூடும்.

சூரிய குளியல்: இந்த மீன்கள் கடலின் மேற்பரப்பிற்கு வந்து பக்கவாட்டில் படுத்துக் கொண்டு சூரிய ஒளியை உள்வாங்கும். ஆழ்கடலில் அதிக நேரம் வேட்டையாடுவதால் ஏற்படும் உடல் குளிர்ச்சியைப் போக்கிக் கொள்ளவே இவை இப்படிச் செய்கின்றன. அதனால்தான் இதற்கு “சன்ஃபிஷ்” (Sunfish) என்று பெயர் வந்தது.

உணவு மற்றும் வாழ்க்கை: இவை பெரும்பாலும் ஜெல்லி மீன்களை (Jellyfish) உணவாகக் கொள்கின்றன. மிகவும் மெதுவாக நீந்தும் தன்மையுடையவை. பெண் மோலா மோலா மீன்கள் ஒரே நேரத்தில் சுமார் 30 கோடி முட்டைகள் வரை இடும் திறன்கொண்டவை. இது மற்ற எந்த முதுகெலும்புள்ள உயிரியையும் விட அதிகம். இவை மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை, ஆனால் இவற்றின் பிரம்மாண்ட உருவம் கடலில் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.

இதன் உடல் அமைப்பு மிகவும் விசித்திரமானது: இதன் உடல் இடது மற்றும் வலது பக்கவாட்டில் மிக மெல்லியதாக அமுக்கப்பட்டதுபோல (Laterally compressed) இருக்கும். அதாவது, நேராகப் பார்த்தால் மிகவும் மெலிந்தும், பக்கவாட்டில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய தட்டு போலவும் தோன்றும். இது தனது மேல்தண்டு துடுப்பையும் (Dorsal fin) கீழ்த்தண்டு துடுப்பையும் (Anal fin) பக்கவாட்டில் அசைத்துதான் நீந்துகிறது.

இதையும் படியுங்கள்:
அறிவியலாளர்களையே குழப்பிய விசித்திர மீன்... இதன் ரகசிய வாழ்க்கை பற்றி தெரிந்தால் மிரண்டு போவீர்கள்!
ocean-sunfish-mola

குறுக்குவாட்டில் படுப்பது ஏன்?: இது வளர்வது குறுக்குவாட்டில் இல்லை என்றாலும், கடலின் மேற்பரப்பில் குறுக்குவாட்டில் படுத்துக் கிடக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

1.வெப்பத்தை உறிஞ்ச (சூரிய குளியல்), 2. கடற்பறவைகள் அதன் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை (Parasites) கொத்தித்தின்று சுத்தம் செய்ய ஏதுவாக இப்படிச் செய்யும். எனவே, இது குறுக்குவாட்டில் வளர்வதில்லை, ஆனால் ஓய்வெடுக்கும்போது அல்லது வெப்பம் தேவைப்படும்போது மட்டும் குறுக்குவாட்டில் மிதக்கும்.

மோலா மோலா மீன்கள் அவற்றின் பிரம்மாண்ட உருவத்திற்காக மட்டுமின்றி, கடலின் சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இவை பெரும்பங்கு ஆற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
4000 மீட்டர் ஆழத்தில் சிக்கிய ஏலியன் மீன்... விஞ்ஞானிகளை மிரள வைத்த பசிபிக் கடலின் ரகசியம்!
ocean-sunfish-mola

மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத இந்த அமைதியான உயிரினங்கள், இன்று கடல் மாசுபாடு மற்றும் மீன்பிடி வலைகளில் எதிர்பாராமல் சிக்குவது போன்ற காரணங்களால் சவால்களைச் சந்தித்து வருகின்றன. அறிவியலும் விந்தையும் இணைந்த இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது, கடல் வளத்தைப் பேணிக்காப்பதில் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

logo
Kalki Online
kalkionline.com