100% முளைப்புத் திறன் நிச்சயம்! க்ரோ பேக்கில் வெண்டை நடுவதற்கு முன் இதைச் செய்யுங்கள்!

மாடித் தோட்டத்தில் தரமான வெண்டை விதைகளைத் தேர்ந்தெடுத்து நடும் சரியான முறையை அறிந்து கொள்ளுங்கள்.
வெண்டைக்காய் | okra harvest
வெண்டைக்காய் | okra harvestGemini AI
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

விவசாயத்தில் செயற்கை உரங்கள் புகுந்து விட்ட நிலையில், உணவின் தரம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மிகச் சாதாரணமாக கிடைக்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும். தற்போது கிராம மக்கள் மட்டுமின்றி நகர மக்களிடையே வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

குறைந்த அறுவடை காலம் கொண்ட சிறு சிறு பயிர்களை தோட்டத்திலேயே வளர்ப்பது காய்கறி செலவுகளைக் குறைப்பதோடு, தரமான காய்கறிகளை உண்ணும் திருப்தியையும் கொடுக்கும். அவ்வகையில் வீட்டுத் தோட்டத்திற்கு மிகவும் ஏற்ற வெண்டைக்காய் விதைகளின் வளர்ச்சிக்கு என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக விதைகளை விதைப்பதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைப்பது நல்ல முளைப்புத் திறனைக் கொடுக்கும். அதிலும் வெண்டைக்காய் விதைகளை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்தால், அதன்முளைப்புத் திறன் அபாரமாக இருக்கும்.

வெண்டைக்காய் விதையின் வெளிப்புற ஓடு சற்று கடினமாக இருக்கும். விதைகளை இரவில் 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்து நடும்போது விரைவான முளைப்புத் திறனைப் பெறும்.

விதைகளை ஊற வைப்பதன் முக்கியத்துவம்:

விரைவான முளைப்பு:

வெண்டைக்காய் விதைகள் ஊற வைப்பதன் மூலம் விதையின் கடினமான மேல் ஓடு மென்மையாகி, விதை உறக்கம் கலைகிறது. பொதுவாக 7 முதல் 10 நாட்களில் முளைக்கும் வெண்டைக்காய் விதைகள், ஊறவைத்து நட்டால் 3 முதல் 5 நாட்களிலேயே மிக வேகமாக முளைத்து விடும். இதன்மூலம் முளைப்புத்திறன் இருமடங்காக அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிக முளைப்புத் திறன்:

பொதுவாக விதைக்கப்பட்ட விதைகள் அனைத்துமே முளைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் விதைகளை ஊற வைத்து விதைப்பதன் மூலம் ஈரப்பதம் முழுமையாக விதைகளுக்குள் செல்லும்.

இதையும் படியுங்கள்:
வெங்காயத் தாள் வேரை தூக்கி எறியாதீங்க.. தொட்டியில் நட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வெண்டைக்காய் | okra harvest

இதனால் விதைக்கப்பட்ட பெரும்பாலான விதைகள் வீணாகாமல் நன்றாக முளைத்து வரும். பஞ்சகவ்யா அல்லது மீன் அமிலம் கலந்த நீரில் விதைகளை ஊற வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தல்:

விதைகளை தண்ணீரில் ஊற வைக்கும் போது, தரமற்ற விதைகள் அனைத்தும் தண்ணீரின் மேல் மிதக்கும். தண்ணீருக்கு அடியில் தங்கும் ஆரோக்கியம் நிறைந்த விதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நட முடியும்

க்ரோ பேக்கில் நடும்போது கவனிக்க வேண்டியவை:

ஊற வைக்கும் நேரம்:

வெண்டைக்காய் விதைகளை 12 மணி நேரத்திற்கும் மேல் ஊற வைக்க வேண்டாம். விதைகள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால் அழுகிப்போக வாய்ப்புண்டு.

க்ரோ பேக் அளவு:

ஒரு செடி நன்றாக வளர்ந்து, காய்ப்பதற்கு 12x12 இன்ச் க்ரோ பேக் பொருத்தமாக இருக்கும். இதில் 1 அல்லது 2 வெண்டை விதைகளை மட்டுமே நட வேண்டும்.

விதைகளை நடும் ஆழம்:

க்ரோ பேக்கில் மண்ணை நிரப்பிய பிறகு, அதிக ஆழத்தில் விதைகளை நடவு செய்யக் கூடாது. சுமார் அரை இன்ச் முதல் 1 இன்ச் ஆழத்தில் மட்டுமே விதைகளை நட்டு மெதுவாக மண்ணால் மூட வேண்டும்.

வெண்டைக்காய் | okra harvest
வெண்டைக்காய் | okra harvestGemini AI

சூரிய ஒளி:

வெண்டைக்காய் செடிக்கு தினசரி குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேர நேரடி சூரிய ஒளி அவசியம். ஆகையால் க்ரோ பேக்கை சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பது நல்லது. க்ரோ பேக்கில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காயம் வளர்ப்பது இவ்வளவு சுலபமா? 5 நாளில் துளிர்விடும் எளிய ரகசியம்!
வெண்டைக்காய் | okra harvest

வெண்டைக்காய் செடி வளர்ப்பில் இம்முறையைப் பின்பற்றினால், செடிகள் ஆரோக்கியமாக வளரும். அதோடு அடுத்த 45 முதல் 50 நாட்களில் அறுவடைக்கும் தயாராகி விடும். வீட்டிலேயே வெண்டைக்காய் செடியை வளர்க்க நினைப்பவர்களுக்கு க்ரோ பேக் முறை உதவியாக இருக்கும்.