
உலக உருண்டையில் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவ்வாறு அமைந்துள்ள நீரின் ஆழமோ எல்லாப் பகுதிகளிலும் ஒரேமாதிரி இருக்க வாய்ப்பில்லை.
விண்வெளி ஆராய்ச்சிகளில் கூட வெற்றி கண்டு திரும்பியுள்ள மனிதர்களால் கடலின் ஆழத்தையும் அங்கு வளர்ந்து வரும் உயிரினங்கள் பற்றியும் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான காரணம், கடலுக்கு அடியில் செல்ல செல்ல அவ்விடத்தில் உண்டாகும் வேறுபட்ட நீரின் அழுத்தமும், குறைந்து கொண்டே செல்லும் சூரிய ஒளியும் ஆகும் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் 1000 அடிக்குக் கீழே செல்லும்போது நீரின் அழுத்தத்தால் அவர்கள் உடலில் கொப்பளங்கள் உண்டாவதும் மூட்டு வலி ஏற்படுவதும் சகஜமாகிறது.
இதுவரை நடத்திய ஆராய்ச்சிகளில், மேற்கு பசிபிக் பெருங்கடலின் அருகே, மெரியான ட்ரெஞ்ச் (Mariana Trench) என்ற பகுதியில், சுமார் 11 கிலோமீட்டர் ஆழத்தில் காணப்படும் Challenger Deep என்ற புள்ளியே மிக ஆழமான கடற் பகுதி என கூறப்படுகிறது. கடல் ஆழமாக போகப்போக அங்கே இருண்ட சூழல் உருவாகிவிடுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் சிலர் அப்பகுதிவரை போய்விட்ட நிலையில் அவர்கள் கப்பலில் பதித்திருந்த சிறு கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் வழியே வெளிச்சம் தென்பட்டுள்ளது. அங்கே பல தரப்பட்ட மீன் வகைகள் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அங்குள்ள நீரில் கலக்கும் அதிக உஷ்ணமுள்ள நீர் மற்றும் ஒரு வகை ப்ரோட்டீன் மூலம் மீன் வடிவில் உயிரினங்கள் உருவாகி, அதிலிருந்து பலவகைகள் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. அவை இருளில் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், தனக்கான இரையைப் பிடிக்கவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் தன் உடலிலிருந்தே மின்சாரத்தைப் உற்பத்தி செய்துகொள்கின்றன.
மெரியான ட்ரெஞ்ச் பகுதியில் வாழ்ந்து வரும் சில உயிரினங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
600 வோல்ட் மின்சாரத்தை தன் உடலில் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மின் விலாங்கு மீன், 20 கிலோ எடை கொண்டது. 22 வருடம் உயிர் வாழக் கூடியது.
பயங்கரமான வேட்டையாடும் திறன் கொண்டது. இதன் தாடையில் தேவைப்படும்போது ஒளி உமிழும். பற்கள் மிகவும் கூர்மையானவை.
பிங்க் நிறம் கொண்ட சிறிய மீன். சூரிய ஒளி துளியும் இல்லாத, இருப்பத்தாராயிரம் அடிக்கு கீழே கடல் ஆழ் பகுதியிலும் வாழக் கூடியது.
வெள்ளை நிறத்தில் மிகப் பெரிய உருவம் கொண்டது. ஆழ் கடல் அழுக்கை சுத்தப் படுத்துவது இதற்கு பிடித்தமான வேலை
ஒரே செல்லில் (cell) உருவான அமீபா இது. நீரின் அதீத அழுத்தத்தில் இதன் உடல் உடையாதிருக்க மண் மற்றும் சகதியை உடலில் பூசி உருவத்தை பெரிதாக்கி வாழ்ந்து வருவது இதன் அபூர்வ குணம்.
சிவப்பு நிறம் கொண்ட சிறிய வகை ஜெல்லி பிஷ். ஒளி ஊடுருவும் இதன் வயிற்றுக்குள் இருக்கும் உணவுப் பொருளை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காதிருக்கவே இது சிவப்பு நிறம் கொண்டுள்ளது.
ஒளி ஊடுருவும் இதன் தலைக்குள் பச்சை நிறத்தில் கண்கள் இருக்கும். மேலே திரியும் இரையை நேரடியாகப் பிடிக்க இது உதவி புரியும்.