"வெறும் பாறைகள் அல்ல, இவை உயிரினங்களின் புகலிடம்! கிரேட் பாரியர் ரீஃப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

Great Barrier Reef
Great Barrier Reef
Published on

யற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் அற்புதப் பொக்கிஷங்கள் எண்ணற்றவை. மலைகள், ஆறுகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் போலவே கடலின் அடியிலும் கண்களை கவரும் ஒரு உலகம் உள்ளது. அந்த கடலடிக் உலகின் மிகப்பெரிய அற்புதமாக விளங்குவது Great Barrier Reef ஆகும். உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாக இது அறியப்படுகிறது. இயற்கை அழகு, உயிரின வளம் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஆகியவற்றால் இது உலகப் புகழைப் பெற்றுள்ளது.

அமைந்துள்ள இடமும் பரப்பளவும்: கிரேட் பாரியர் ரீஃப், Australia நாட்டின் வடகிழக்குப் பகுதியில், Queensland மாநிலத்தின் கடற்கரை ஓரமாக, Coral Sea பகுதியில் அமைந்துள்ளது. இது சுமார் 2,300 கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்து விரிந்துள்ளது. அதன் பரப்பளவு சுமார் 3,44,000 சதுர கிலோமீட்டர் ஆகும். இவ்வளவு பரந்த பரப்பில் அமைந்துள்ளதால், விண்வெளியிலிருந்தே காணக்கூடிய உலகின் மிகப்பெரிய உயிரியல் அமைப்பாக இது கருதப்படுகிறது.

பவளப்பாறைகள் எப்படி உருவாகின்றன?: பவளப்பாறைகள் என்பது சிறிய கடல்வாழ் உயிரினங்களான “பவள பாலிப்புகள்” (Coral Polyps) மூலம் உருவாகின்றன. இவை ஜெல்லி மீன்களுடன் தொடர்புடைய உயிரினங்கள். இவை தங்களது உடலிலிருந்து கால்சியம் கார்பனேட் என்னும் பொருளை சுரந்து கற்கள் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இவ்வுயிரினங்கள் சேர்ந்து கட்டிய உருவாக்கமே பவளப்பாறை ஆகும். ஒரு பவளப்பாறை உருவாக பல லட்சம் ஆண்டுகள் ஆகும். இவை மிகவும் மெதுவாக வளரக்கூடிய இயற்கை அமைப்புகள்.

அமைப்பு மற்றும் தீவுகள்: கிரேட் பாரியர் ரீஃப் அமைப்பில் 2,900-க்கும் மேற்பட்ட தனித்தனி பவளப்பாறைகள், 900-க்கும் மேற்பட்ட தீவுகள், பல சிறிய மணல் தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் சில சுற்றுலா தளங்களாகவும், சில பாதுகாப்பு பகுதிகளாகவும் உள்ளன.

உயிரின வளம்: இது உலகின் மிக முக்கியமான கடல் உயிரியல் மையமாகும். இங்கு  1,500-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள், 400-க்கும் மேற்பட்ட பவள இனங்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், திமிங்கலங்கள், கடல் பறவைகள் வாழ்கின்றன. இவ்வளவு உயிரின வளம் உள்ளதால் இது “கடலின் மழைக்காடு” (Rainforest of the Sea) என்றும் அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
1.2 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாத ராட்சச அனகோண்டா… விஞ்ஞானிகளை அதிர வைத்த ரகசியம் இதோ!
Great Barrier Reef

பொருளாதார முக்கியத்துவம்: ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். கடலடியில் நீந்துதல் (Scuba Diving), கண்ணாடி அடிப்பகுதியுள்ள படகு சவாரி போன்ற அனுபவங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இதனால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

உலக பாரம்பரியச் சிறப்பு: 1981 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்தப் பவளப்பாறையை உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் இயற்கை அழகு மற்றும் உயிரியல் வளம் உலகளவில் மதிப்பிடப்படுகிறது.

எதிர்நிலைகள் மற்றும் பாதுகாப்பு: இன்றைய காலத்தில் கிரேட் பாரியர் ரீஃப் பல சவால்களை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், கடல் மாசு, அதிகப்படியான மீன்பிடித்தல் கடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் “பவள வெண்மைப்படுதல்” (Coral Bleaching) என்ற நிலைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. இது பவள உயிரினங்களின் அழிவிற்கு காரணமாகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
காட்டைக் காக்கும் விந்தைப் படை: ஸ்பெயினின் ‘தீயணைப்பு’ கழுதைகள்!
Great Barrier Reef

கடல் உயிரினங்களின் வாழ்விடமாக மட்டுமல்லாமல், உலகின் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாக்கும் முக்கிய அமைப்பாகும். இத்தகைய இயற்கைச் செல்வங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். “இயற்கையை காப்போம் – எதிர்காலத்தை பாதுகாப்போம்” என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் மட்டுமே இவ்வாறான அதிசயங்கள் நிலைத்திருக்க முடியும்.

“பவளப்பாறைகள் கடலின் இதயம் போன்றவை; அவை துடித்தால்தான் உயிர்கள் வளரும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com